Pages - Menu

Tuesday 31 May 2016

வாழ்வின் வேர், கல்வி, அருள்பணி. ச. இ. அருள்சாமி

வாழ்வின் வேர், கல்வி

நீரும், உரமும் இல்லையயன்றால் தாவரங்கள் வளரச்சிக் காணமுடியாது. முயற்சியும், உறுதியும் இல்லையயன்றால் வாழ்வில் உயர்வு இல்லை. மனிதர் வளர்பவர்கள். அவர்கள் வளர்க்கப்பட வேண்டியவர்கள். அறிவியல் வல்லுனர்கள், பெரும் தலைவர்கள், மற்ற அறிஞர்கள் அனைவரும் கல்வியால் வளர்ந்தவர்கள். அனுபவத்தால் தனிமுயற்சியால் தங்களை வளர்த்துக் கொண்டவர்கள். திரு. அபதுல்கலாம் கல்லூரிகளில் கல்வி கற்கவில்லையயனில், அறிவியல் மேதையாக வளர்ந்திருக்க முடியாது. அறிவியல் அறிஞர் திரு. அண்ணாதுரை அவர்கள், இஸ்ரோ நிறுவனத்தின் தலைவராக முடியாது. 
ஒரு காவல் அதிகாரி மாணவர்களுக்கு சொற்பொழிவாற்றும்போது கூறினார். ‘படிக்கவில்லை யயன்றால் உடல் உழைப்பையே நம்பி ஒருவர் மாடாக உழைத்து ஓடாக தேய வேண்டியதுதான். பணக்காரர்களின் மாளிகையில் பிறக்கின்றகுழந்தைகளின் கால்களைக்கூட தாங்குவதற்கு தோள்கள் காத்திருக்கின்றன. ஆனால் ஏழைகளின் குடிசையில் பிறக்கின்ற  குழந்தைகளின் தோள்களுக்கோ சுமைகள் காத்திருக்கின்றன. பணக்கார வீட்டிலே பிள்ளைகள் வளர்ந்து பிறக்கிறார்கள். ஏழைகளுடைய குடிசையிலே பிள்ளைகள் பிறந்து வளர்கிறார்கள். வளர்ந்து, பிறப்பது வாரிசுரிமை, பிறந்து வளர்வதே பிறப்பின் பெருமை’.
கல்வியை, சான்றிதழுக்காக, படித்தால் அது பயனற்றது. தியோடர் ரூஸ்வெல்ட் கூறுவார், ‘அறநெறியின்றி  கல்வி கற்பிக்கப்படும் என்றால், அது, சமுதாயத்திற்கு பேராபத்துக்களை உருவாககும் பயிற்சியாகும்’ என்றார். ‘உண்மையான கல்வியின் நோக்கம் அறிவின் வளர்ச்சி அல்ல, ஒருவரை செயல்பாட்டில் உருவாக்குவது’ என்கிறார் யஹர்பர்ட் ஸ்பென்ஸர் என்பவர்.
ஜீன் மாத தொடக்கத்திலிருந்து கல்வி ஆண்டு தொடங்குகிறது. கோடைக்கால விடுமுறைக்கு பிறகு பிள்ளைகள் பள்ளிகளுக்கு செல்ல ஆரம்பிப்பர். தனியார் பள்ளிகள், தேர்வில் பெரும் மதிப்பெண்களை பெற்றுதரும் நிறுவனம் எங்களது என்று விளம்பரம் செய்கிறார்கள். வளரும் பிள்ளைகளில் அவர்களுடைய மனநிலைகள் மாறும். பிள்ளைகளில் விளையாட்டுக் குணம், இளைஞர்களுக்கு பாலியல் குழப்பங்கள், குறும்பு எண்ணங்கள் ஆகியவை எழுந்துவரும். இந்த மனநிலைகளை ஆசிரியர், பெற்றோர் புரிந்துக் கொண்டு அவர்களுக்கு வாழ்க்கை பயிற்சி அளிக்க வேண்டும். ‘கல்வி என்பது ஒருவரின் அறியாமையை அதிகம் அதிகமாக தெரிந்து கொள்வதாகும்’ என்கிறார் வில் புரான்ட் என்பவர்.
இவ்விதழில் கல்வியை மையமாக வைத்து பல கட்டுரைகள் அமைந்துள்ளன. பூண்டியில் அன்னை தெரசாவைப் போல பணியாற்றிய அருள்பணி. லூர்து சேவியர் அவர்களுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுவதற்கு முறையான செயல்பாடுகளை குடந்தை மறைமாவட்டம் ஆரம்பித்திருக்கிறது. பூண்டியில், நவநாள் செபங்களில், ‘அருள்பணி. லூர்து சேவியருக்கு புனிதர் பட்டம் கிடைக்க வேண்டுமென்றும்’ இணைத்து சொல்லப்பட்டது. இன்று அது நனவாக மாறும் காலம் வந்திருக்கிறது. இயேசுவின் போதனைகளை வாழ்வாக்கி சாட்சியம் அளித்தவர்களின் வாழ்வை பரிசோதித்தே. அவர்களுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுகிறது. இப்போது அருள்பணி. லூர்து சேவியர், இறை அடியார் என்று அழைக்க திருச்சபை அனுமதித்திருக்கிறது. இனி அவரது வாழ்வும், அவரின் பரிந்துரையால் பெறப்பட்ட அற்புதங்களும் சோதிக்கப்பட்டு, வணக்கத்திற்குரியவர் நிலைக்கும், பிறகு அருளாளர் நிலைக்கும், பிறகு புனிதர் நிலைக்கும் உயர்த்தப்படுவார். ‘நான் சிறுபிள்ளையாக இருக்கும்போது என் அம்மா, பூண்டிக்கு என்னை அழைத்து சென்றார். அருள்பணி. லூர்து சேவியர் அவர்கள்  ஆலோசனைகள் கூறியதையும், மாதாவின்முன் ஆசீர்வதித்ததையும் நேரடியாக பார்த்திருக்கிறேன். புனித வாழ்வு வாழ்ந்த அருள்பணி. லூர்து சேவியர் அவர்களுக்கு விரைவில் திருச்சபை புனிதர் பட்டம் கொடுத்து சிறப்பு செய்யும் என்பதில் சந்தேகமில்லை’.
தமிழ்நாட்டிலும், கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடந்து முடிந்து முடிவுகளும் வெளிவந்துவிட்டன. அம்மாவின் ஆட்சி தமிழத்தில் மீண்டும் தொடர இருக்கிறது. தரமான கல்வி மக்கள் எல்லோருக்கும் எளிதாக கிடைக்கவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும் திட்டங்களை உருவாக்கவும், விவசாய மக்களின் தேவைகளை அறிந்து ஆவன செய்யவும், மது மோகத்தை மக்களிடமிருந்து அகற்றவும், கிறிஸ்தவர்களில் தாழ்த்தப்பட்டவர். பின்தங்கியவர் ஆகியவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை பெற்றுதரவும், மதசுதந்திரத்தை காக்கவும், கிறிஸ்துவ பள்ளிகளை அங்கீகரித்து அவைகளுக்கு அரசின் முழு உதவிகள் கிடைக்கவும், அம்மாவின் அரசு ஆவண செய்யும் என நம்புகிறோம். வளமான ஆட்சி அமைய அம்மாவின் ஆட்சியை வாழ்த்துக்கிறோம். 

அருள்பணி. ச. இ. அருள்சாமி

No comments:

Post a Comment

Ads Inside Post