Pages - Menu

Wednesday 4 May 2016

குடும்பம் சமுதாயத்தின் உயிர்நிலை

குடும்பம் சமுதாயத்தின் உயிர்நிலை

- புலவர். இ. அந்தோணி, எம்.ஏ. பி.எட்., எம்.ஃபில்,
சிறிய மலர் மேனிலைப்பள்ளி (ஓய்வு),
கும்பகோணம்

அண்மையில் படித்த செய்தி, கணவனை அவரின் மனைவி, ‘குண்டு யானை’ என்று கூறியதற்காக கணவன் விவாகரத்து பெற்றிருக்கிறார். அதேபோல், கணவன் தன் மனைவியை, ‘தேவாங்கு’ என்று கூறியதற்காக, மனைவி, தன் கணவரை விட்டு பிரிந்திருக்கிறார். தமிழ்நாட்டில் 8.8 சதவிகிதம் விவாகரத்து நடந்துள்ளது. இந்தியாவிலேயே அதிகமாக  விவாகரத்து நடைபெறுவது தமிழ்நாட்டில்தான் என்று கணக்கெடுப்பு கூறுகிறது. குடும்ப அமைப்பு மிகவும் சிதைந்து வருகிறது. ஆனால் குடும்பம்தான் சமுதாயத்தின் உயிர்நிலை. வெளிநாடுகளில் சென்று வாழ்கின்ற இந்தியர்களின் பிள்ளைகள் மிகவும் அறிவு திறமை பெற்றவர்களாக வளர்வதைப் பற்றி செய்தித்தாள்களில் படிக்கிறோம். இந்தியர்கள் குடும்ப பாரம்பரியத்தை பாதுகாப்பதே இதற்குக் காரணம் என்கிறார்கள்.

வெளிநாடுகளில் குடும்ப இணைப்பு பயங்கரமாக  உடைந்து நிற்கிறது. கணவன் - மனçவி பிரிவு பிள்ளைகளில் வளர்ச்சியிலும், கணவன் - மனைவி மன அமைதி நிலையிலும் பெரிய பாதிப்பை உண்டாக்கியிருக்கிறது.

விவிலியத்தில், கடவுள் ஆணும் - பெண்ணுமாக மனிதரை படைத்தார் என்று கூறப்பட்டுள்ளது (தொ நூ 1 : 27). மனித பண்புகளை பெற்றவர் ஆண் - பெண் என்ற இருபாலர். ஆனால் அவர்களின் உடல் அமைப்பிலும், உணர்வு நிலைகளிலும் வேறுபட்டு நிற்கிறார்கள். வேறுபாடுகளை புரிந்து கொண்டு, வேறுபாடுகள் ஒன்றன் மற்றொன்றின் நிறைபாடு என்பதை ஏற்று கொண்டு வாழ்வதுதான் குடும்பத்தின் உண்மைப்பண்பை உயிர்மைப்படுத்துவதாகும்.

இந்து சமயத்தில் அர்த்தநாதீஸ்வரர் என்ற உருவில், உரே உடலில் ஆண் பாதி பாகமும், பெண் பாதி பாகமும் அமைந்திருப்பதை காணமுடிகிறது. அதாவது ஆணில் பெண்ணின் பண்பு மறைந்திருக்கிறது.  பெண்ணில் ஆணின் பண்பு புதைந்திருக்கிறது என்பது பொருள். ஆனால் ஆண் ‡ பெண் ஆகியவர்களின் தனித்தன்மையையும்  மறந்துவிடக்கூடாது. ஆண் ‡ பெண் ஆகியவர்கள் சமத்துவ நிலையில் பணி செய்கின்ற வேளையில், மற்றவர்களால் முடியாததை செய்து நிறைவு செய்வதே ஆண் ‡ பெண் வேற்றுமையின் நோக்கமாகும்.

பெண்ணின் தனிப்பண்பை பாரதிதாசன் இப்படி அழகாக எழுதியிருக்கிறார்.

இளங்கதிர் கிழக்கில் இன்னும் எழவில்லை
இரவிபோர்த்த இருள்நீங் கவில்லை ஆயினும்
கேள்வியால் அகலும் மடமைபோல் நல்லிரவு
மெதுவாய் நகர்ந்து கொண்டிருந்தது
தொட்டி நீலத்தில் சுண்ணாம்புக் கலந்த
கலப்பென இருந்தன் கட்டுக்குலைந் தது
புலர்ந்திடப் போகும் பொழுது கட்டிலில்
மலர்ந்தன அந்த  மங்கையர் விழிகள்
என்கிறார் பாரதிதாசன்.

ஆம் பின்தூங்கி முன் எழுபவள் அல்லவா பெண். அதிகாலை எழுந்து குளித்து இறையை வேண்டி கணவனுக்கும், பிள்ளைகளுக்கும், பெரியவர்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து தானும் அலுவலகம் செல்லும் பெண்.

அதாவது  குடும்பத்தை தாங்குபவள் மனைவி என்று விளக்குகிறார். ஒவ்வொருவரையும் புரிந்துகொண்டு செயல்படுபவள் பண்பான மனைவி என்றும் விளக்குகிறார் பாரதிதாசன்.

கொண்டவர்க் கெதுபிடிக்கும்? குழந்தைகள் எதை விரும்புவர்?
தண்மூன்றி நடக்கும் நன்மாமன் மாமிக்குத் தக்கதென்ன?
உண்பதில் எவர்உடம்புக்கு எதுஉதவாது  என்றெல்லாம்
கண்டனள் கறிகள் தோறும் உண்பவர் தமமைக் கணடாள்

கீழ்க்காண்பவை ஆண் - பெண் ஆகியவர்களின் முக்கிய உணர்வு வேறுபாடுகள். இவை ஆராய்ச்சியில் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

1. பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பண்பினால் பெண்கள் வீணாக எதிலும் ரிஸ்க் எடுக்கமாட்டார்கள். எதிர்காலத்தைப் பற்றி விளையாட்டாக நினைக்க மாட்டார்கள்.

2. ஆண்கள் ரிஸ்க் எடுக்க விரும்புவர். மாற்றம், சவால், இவைகளை எதிர்கொள்ளவும் விரும்புவர். பெரும்லாபத்திற்காக ஆபத்துகளை சந்திக்க துணிவர்.

3. பெண்களுக்கு துணிச்சல் குறைவு. ஆனால் பாதுகாப்பு, உறவு, போதுமென்ற மனம் பெண்களுக்கு அதிகம்.

4. குடும்பத்தில் பெண்கள், ஆண்களின் வீணான துணிச்சலை கட்டுப்படுத்துவார்கள். ஆண்கள், பெண்களின் வீணான பயத்தை அகற்ற உதவுவார்கள்.

5. பெண்கள் வீடுகளின் வசதி, குடும்ப வாழ்வு இவற்றைப் பற்றி கவலைப்படுவர்.

6. விளையாட்டுப் போட்டிகளில் ஒரு வெறிதனத்தை ஆண்கள் காட்டவார்கள். பெண்கள் அதனை ஒரு பொழுதுபோக்காக மட்டும்  கருதுவர்.

ஒன்றுக்கொன்று உதவுவதற்காகவே வேறுபட்ட பண்புகளுடன் இறைவன் படைத்திருக்கிறார். ஒன்னும், ஒன்னும் இணைவதுதான் குடும்பம். ஒன்றை மற்றொன்னை அழிப்பது குடும்பத்தின் நோக்கமல்ல.  
 (இன்னும் வரும்)

1 comment:

Ads Inside Post