Pages - Menu

Wednesday 4 May 2016

ஆலோசனை நேரம் வேதியரிடம் கேளுங்கள் - 11

ஆலோசனை நேரம்

வேதியரிடம் கேளுங்கள் - 11
- நல்லை.இ. ஆனந்தன்

1. விளங்க முடியாத கவிதை எது?

- திருமதி. அகிலா, சென்னை

உங்கள் கேள்வியிலேயே பதிலும் இருக்கிறவிதைக்குள் எப்படி ஒடுக்கிச் சேமிக்கிறது? மண்ணில் நட்டு உயிர்த்தவுடன் எப்படி பரந்து விரிந்து அகலமாக பரவுகிறது? மரங்களில் மட்டுமல்ல. மனிதரிலும் இதுதானே நடக்கிறது. கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய உயிரணு எப்படி குழந்தையாகிறது? அது பிறந்த வளர்ந்து, ஆஸ்கார் விருது வாங்குவதும், ஆயிரம் படங்களுக்கு இசையமைப்பதும், இருபதாயிரம் பாடல்களை இனிமையாகப் பாடுவதும் எப்படி சாத்தியமாகிறது என்பதுதான் உலகில் விளங்க முடியாத, ஏன் விளக்கமுடியாத கவிதை.


2. பாதம் கழுவும் சடங்கு ‡ பெரிய வியாழனன்று எதற்காக?

‡ திரு. ஆல்பர்ட், நிலக்கோட்டை

பாலஸ்தீன் நாடு பாலைவன நாடு. மணற்பரப்பு அதிகம். அந்த மணல் நொய் மணல். (கடற்கரையில் உள்ளது போல) காற்றடித்தால் அது பறந்து வந்து உடல் முழுவதும் ஒட்டிக் கொள்ளும் என்பதால் யூதர்கள் தலைமுதல் கால் வரை துணிகளால் மூடியிருப்பார்கள். நடந்து வரும்போது காலில் ஒட்டியிருக்கும் மணல்துகள்களோடு வீட்டிற்குள் நுழைவது சரியல்ல என்பதால் பாதங்களைக் கழுவிவிட்டு உள்ளே நுழைவார்கள். பணியாளர்களோ அல்லது வீட்டினரோ இச்சடங்கை வீட்டிற்கு வருவோர்க்கு நிகழ்த்துவதுண்டு. நமது தமிழ்நாட்டிலும் வயலில் வேலை செய்த விட்டு வருவோர் மற்றும் விவசாயப் பெருங்குடிமக்கள் வாசலில் உள்ள தொட்டியில் நீர் மொண்டு கால்களைக் கழுவிய பின்னரே வீட்டிற்குள் நுழைவார்கள். தலைகுனிபவர்களால் மட்டுமே பாதங்களைக் கழுவ முடியும். தலைக்கனம் பிடித்தவர்களால் அதைச் செய்ய இயலாது. தாழ்ச்சியுடன் பிறருக்கு பணிபுரிய நாம்  அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை பாதம் கழுவும் சடங்கு கற்பிக்கிறது. மேலும், விண்ணக வீட்டிற்குள் நுழைவதற்கும், இறைவன் தரும் விருந்தை  உண்பதற்கும் நாம் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்தும் நிகழ்வே அது.

3. மே மாதத்தில் என்ன செய்வது?

- செல்வி. உதயா, திருச்சி

ஏராளமாய் செய்யலாமே. உறவினர்கள் இல்லங்களுக்கு சென்று வரலாமே. விடுமுறை விவிலியப் பள்ளிக்கு செல்லலாமே. பாடல், இசை, கணிணி கற்றுக் கொள்ளலாமே. சுற்றுலா சென்று வரலாமே. பொருட்காட்சிகளுக்குப் போய் வரலாமே. நூலகம் சென்று வாசிக்கலாமே. உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்யலாமே. வீட்டுத் தோட்டம் மற்றும் பூந்தொட்டிகள் அமைக்கலாமே. பயனுள்ள நிகழ்ச்சிகளை டிவியில் பார்க்கலாமே. இப்படி பல மேக்களை மே மாதத்தில் செய்யலாமே. அதோடு மே மாதம் மேரியின் மாதம். அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாதம். அன்னையின் திருத்தலத்திற்குச் சென்று செபித்துவிட்டு வாருங்கள். அப்புறம் வீட்டில் நடக்கும் நன்மைகளைப் பாருங்கள்!

4. குருத்து ஞாயிறு வருத்த ஞாயிறு அல்லவே? பிறகு ஏன் நற்செய்தியில் அன்று இயேசுவின் பாடுகள் அனைத்தையும் வாசிக்கிறோம்?

‡ திரு. சேவியர், கோவில்பட்டி

குருத்து ஞாயிறு, திருப்பாடுகளின் ஞாயிறு என்றும் அழைக்கப்படுகிறது. இயேசு எருசலேம் சென்றது பாடுகளை ஏற்க. எனவேதான் இயேசுவின் பாடுகள், அன்றும் வாசிக்கப்படுகிறது. மனிதரில் எத்தனை நிறங்கள். எத்தனை ஆளுமைகள் என்பதை படம் பிடித்துக் காட்ட இயேசுவின் பாடுகள் அனைத்தையும் புனித வார துவக்க நாளிலே நாம் வாசிக்கின்றோம். ஓசான்னா பாடியவர்கள், ஒழிக கோ­ம் போட்டவர்கள், பண ஆசையால் காட்டிக் கொடுத்தவர், உயிர் பயத்தால் மறுதலித்தவர், பதவிக்காக கடமை தவறியவர், சக மனிதரின் துன்பம் கண்டு தோள் கொடுத்தவர், வார்த்தைகளால் காயப்படுத்தியவர்கள், அழுகையால் ஆறுதல் தந்தவர்கள், வேதனையின் உச்சத்தில் இருப்போரைக் கண்டு வேடிக்கை பார்த்தவர்கள், இறந்த பின்னும் ஈட்டியால் குத்தியவர்கள், ... இப்படி அதில் வருகிற அனைவருமே அன்று மட்டுமல்ல இன்றும் நம்மில் இருக்கிறார்கள். இயேசுவின் பாடுகளை அன்று வாசிப்பது வருந்த வேண்டும் என்பதற்காக அல்ல! திருந்த வேண்டும் என்பதற்காகவே.

5. வழக்கம்போல ஒரு கதை சொல்லவும் :

- திருமதி. நான்சி, கன்னியாகுமரி

சரிதான். சொல்லிட்டாப் போச்சு. கதை முக்கியமல்ல, அதன் கருத்துதான் முக்கியம். சரியா?
கிறிஸ்துவ ஆலயத்தில் குரு திருப்பலி நிறைவேற்றுகிறார். நூற்றுக்கணக்கில் விசுவாசிகள் பூசை காண்கிறார்கள். திடீரென தீவிரவாதிகள் துப்பாக்கிகளோடு உள்ளே நுழைகிறார்கள். இறைவழிபாடு செய்ய தடை போடுகின்றனர். எல்லோருக்கும் அதிர்ச்சி. கடவுளைத் தொடர்ந்து வழிபடுவோம் என்பவர்கள் எழுந்து வெளியே செல்லுங்கள். ஆனால் அவர்களை நாங்கள் கொன்றுவிடுவோம் என்று எச்சரிக்கின்றனர். குரு முதலில் ஆலயத்தைவிட்டு வெளியே செல்ல அவரைத் தொடர்ந்து வெகுசிலர் ஆலயம் விட்டு வெளியேறுகின்றனர். சற்று தூரம் சென்றதும் துப்பாக்கி சத்தம் கேட்கின்றது. பின் நீண்ட அமைதி. ஆலயத்தில் உள்ளவர்கள் மைதானத்திற்கு ஓடி வர குருவும் அந்த வெகு சிலரும் உயிருடன் அமர்ந்திருந்தார்கள். தீவிரவாதிகளின் தலைவன் அப்போது சொன்னான், இறப்பினும் இறைவழிபாடு தொடர்வோம் என்ற இவர்களே ஆலயத்தில் செபிக்க அருகதை  உள்ளவர்கள். ஆனால் உயிருக்குப் பயந்து கடவுளைத் துறந்த நீங்கள் அனைவருமே ஆலயத்தினுள் சென்று செபிக்கத் தகுதியற்றவர்கள். எனவே அவர்கள் மட்டுமே  ஆலயத்திற்குள் மீண்டும் செல்லலாம் என்றனராம்.

6. எங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தைக்கு க வரிசையில் பெயர் வைத்தால் அமோகமாக வாழ்வோம் என்று ஜோதிடர் கூறினார். ஏதாவது பெயர் சொல்லுங்கள்?

- திரு. ரெத்தினசாமி, திண்டுக்கல்

அட்ரா சக்கை. பிறப்பது ஆண்குழந்தை எனில் காக்கா என்றும், பெண் குழந்தை  எனில் கீக்கீ என்றும் பெயர் வையுங்கள். உங்கள் ஆலோசகர் பெரிதும் மகிழ்வார். அல்லது புனிதர்கள் பெயரை உங்கள் பிள்ளைக்குச் சூட்டுங்கள். கடவுள் மகிழ்வார். வேதியரிடமும், சோதிடரிடமும் தயவுசெய்து ஒரே நேரத்தில் ஆலோசனை கேட்க வேண்டாம்.
$$$$$$

No comments:

Post a Comment

Ads Inside Post