Pages - Menu

Saturday 2 December 2017

புது வருடம் நல் உள்ளங்களைப் பிறப்பிக்கட்டும்

புது வருடம் நல் உள்ளங்களைப் பிறப்பிக்கட்டும்

அண்மையில் நான் கேட்ட செய்தி என்னை மிகவும் வியக்க வைத்தது. நல்ல மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று மகிழ்ச்சியுற்றேன். புறத்தாக்குடி பங்கு மாணிக்கபுரத்தில் ஒருவர் 93 வயது. தனது வயதான நிலையில், தான் சேர்த்து வைத்திருந்த 25 லட்ச ரூபாயை, அவ்வூரில் கோவில் கட்டுவதற்கு நன்கொடையாக தந்திருக்கிறார். அவரின் முன்மாதிரியைப் பின்பற்றி மற்றவர்கள் உதவி கொடுக்க, கோவில்  1.5 கோடி ரூபாயில் வளர்கிறது. 

இது ஒரு பக்கம், மற்றொரு பக்கத்தில், வருமான வரி துறையினர் தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் தோண்டி எடுத்து வருகிறார்கள். கோடி கணக்கில் சொத்துகள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது. அரசியலில், தலைமைத்துவத்தைப் பயன்படுத்தி சுருட்டியிருக்கிறார்கள். எல்லாம் மக்களின் வரிப்பணம், இதைப் போன்ற அரசியல் ஏமாற்று சித்துக்கள் தமிழ்நாட்டில்தான் வெகுவாக நடைபெறுகின்றன. ஊழல் நிறைந்த நாடுகளில் இந்தியா முன்னிலையில் நிற்பதுபோல  தமிழ்நாடு அந்த ஊழல் நாட்டிலேயே முன்னிலையில் நிற்கிறது என்றால் நாம் தலைக்குனியத்தான் வேண்டும்.

35 வயதில் ஐந்து பெண் குழந்தைகளுடன் வளர்க்க அந்த விதவைத் தாய் போராடுகிறாள். அரசு வேலைக்கு விண்ணப்பித்தாள். தற்காலிக வேலைக்கு அழைப்பு வந்தது. வாய் கூசாமல், வேலை வழங்கும் அதிகாரி ஒன்றரை லட்சம் நன்கொடையாக கேட்டிருக்கிறார். ஊழலை ஒழிப்போம் என்று மார்பு தட்டும் அரசு முன்பாக நாம் என்ன செய்ய முடியும்? விதவைத் தாயின் வயிற்றெரிச்சல் இத்தகைய இதயமில்லா மனிதர்களை நிச்சயம் தாக்கும். லஞ்சம் வாங்கி வீடு கட்டுவார்கள், ஆடம்பரமாக நகை உடை வாங்குவார்கள். பிறகு மருத்துவச் செலவிற்காக எல்லாவற்றையும் செலவிடுவார்கள். அவர்களின் பிள்ளைகள் சொகுசில் வாழ்ந்து, சோம்பேறிகளாக, மதுவிற்கு அடிமையாகி இவர்கள் நொந்து நுVலாக செய்வார்கள்.

கிறிஸ்து பிறப்பு விழாவில் இயேசுவின் எளிமையின் முன் உதாரணத்தை இவ்விதழில் பல கட்டுரைகள் விளக்கிக் காட்டுகின்றன. மேலும் மேலும் வசதிகளைப் பெருக்குவதே இன்றைய நாகரிகமாக நிற்கிறது. இச்சூழலில் இயேசுவின் எளிமை கேளிக்குரியதாகக் கூட கருதப்படலாம். எளிமை, பகிர்வினை பிறப்பிக்கும். எல்லோருக்கும் வாழ்வளிக்கவே, தீமைகளிலிருந்து விடுபடவே இயேசு இவ்வுலகிற்கு வந்தார்.
வாட்ஸ் அப்பில் வந்த ஒரு வாக்கியம்,‘ வாழ்க்கையில் யாரையும் ஏமாற்றி ஜெயிக்கக் கூடாது. ஆனால் ஏமாற்றியவர்களை ஜெயிக்காமல் விடக் கூடாது?’ மக்கள் ஏற்றம் பெறவே உலகிற்கு வந்தார். அவர் நமக்காக இறங்கி வந்தார். நமக்காக ஏமாற்றத்தை சந்தித்திருக்கிறார். ‘ அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.’ (யோவா 1, 11).

இயேசுவின்  வழியில் செல்பவர்கள் ஒருவேளை ஏமாளிகள் போல் தோன்றலாம். ஆனால் ஒளியில் நடப்பவர்கள் (1 யோவா 1.7) நம்பிக்கை கொண்டவர்கள், கடவுளின் பிள்ளைகள் (யோவா 1.12). நமது திருத்தந்தை பொதுக்காலம் 33 ஆம் ஞாயிறை உலக ஏழைகள் தினம் என்று அறிவித்து கொண்டாடியிருக்கிறார். சென்ற ஆண்டு கிறிஸ்து பிறப்பு விழாவிற்காக, பல சமய உரையாடல் பணிக்குழுவிருந்து பல இஸ்லாம், இந்து மத சகோதர்களைச் சந்தித்து வாழ்த்துக் கூறினோம். வழக்கறிஞர் ஒருவரை சந்தித்து வாழ்த்துக் கூறும்போது, ‘அன்னை தெரசா கொல்கத்தாவில் செய்தது போல, ஏன் கும்பகோணத்தையும் பிச்சைக்காரர் இல்லாத இடமாக மாற்றக் கூடாது’ என்றார். அந்த வார்த்தைகள் மிகவும் சிந்திக்க வைத்தது. ‘மீனை இலவசமாகக் கொடுக்க கூடாது. மீன்பிடிக்கக் கற்று கொடுக்க வேண்டும்’ என்று சொல்வார்கள்.

வாட்ஸ்அப்பில் ஒரு நிகழ்ச்சியைக் காட்டினார்கள். ஒருவர் தன் காலை மடித்துக் கட்டிக் கொண்டு பிச்சையயடுக்கிறார். மற்றவர்கள் அதனைக் கண்டுபிடித்து அவரை கட்டுகளை பிரிக்கச் சொல்லி நடக்க வைத்து அனுப்பிகிறார்கள். மற்றொரு நிகழ்ச்சியையும் பார்த்தேன். ஒரு பையன், பிச்சையயடுத்துக் கொண்டிருந்த தாய், அவரின் மகள் இருவருக்கும் தினமும் பணம் கொடுக்கிறான். சில நாள்களில் பிச்சையயடுத்துக் கொண்டிருந்த சிறுமி பள்ளிக்குச் செல்கிறாள். பையன் கொடுத்த பணத்தை சேர்த்து வைத்து மகளைப் படிக்கவைக்க பயன்படுத்தியிருக்கிறாள்.

பொருள்களின் விலைகள் கூடிவரும் இந்நாள்களில், அன்னையின் அருட்சுடரின் சந்தா தொகையை ஆண்டிற்கு ரு 150/- என்றும், ஆயுள் சந்தா ரு 3000/- என்றும் உயர்த்தியிருக்கிறோம். தொடர்ந்து உங்களது ஆதரவைத் தர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். அன்னை யின் அருட்சுடர் இதழ் உங்களுக்கு நல்லக் கருத்துக்களைத் தாங்கி வர நாங்கள் மிகவும் முயற்சி எடுக்கிறோம். அனைவருக்கும் எங்களது கிறிஸ்து பிறப்பு, புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

Ads Inside Post