Pages - Menu

Friday 3 November 2017

புனிதர்களின் தினம்

புனிதர்களின் தினம்

கேத்தரீன் ஆரோக்கியசாமி. திருச்சி

கற்பனை சிறுகதை

நவம்பர் மாதம் என்றாலே சகல ஆன்மாக்களின் தினம் ஞாபகத்துக்கு வரும். கிறிஸ்துவர்கள் எல்லோரும் கல்லறை தோட்டத்திற்கு சுற்றுலா சென்று தங்கள் குடும்பத்தில் இறந்தவர்களுக்கு பூ, சாம்பிராணி போடுவது வழக்கம். பணக்காரர்கள் செய்யும் அலங்காரம் இருக்கே அது அவர்களின் பெருமையின் தம்பட்டம். போட்டிப்போட்டுக் கொண்டு அலங்காரம் இவர்கள் செய்வதன் அர்த்தம்தான் என்ன?, அடுத்த நாளே வாடி வதங்கிவிழும் பூவுக்கா, இந்த செலவு?, வாடி வதங்கி நிற்கும் ஏழைகளுக்கு இவர்கள் செய்யும் தானமும் போலிதானே... ஒவ்வொரு வருடமும் இதைப் பார்த்து அலுத்தவிட்டது. 

இந்த வருடம் சகல புனிதர்களின் தினத்தை எப்படி கொண்டாடலாம் என்ற எண்ணத்தோடு, நவம்பர் முதல் தேதியன்று கோவிலுக்குப் போனேன். சகல புனிதர்களின் திருநாள் பூசை நடந்து கொண்டிருந்தது. சர்ச்சில் அதிகம் கும்பலை காணோம். சாமியாரும், கன்னியர்களும் மட்டும் ஒருவருக்கொருவர்  “HAPPY FEAST”  சொல்வார்கள் என்று பார்த்தேன். அதுவும் நடக்கவில்லை.

ஒன்றும் சுவாரசியமாக இல்லையே என்று நினைத்துக் கொண்டே சர்ச் வாசலில் புதிய பங்கு சாமியார் “ புனிதர்களின் தோட்டம்”  என்று ஒரு இடத்தில் பூச்சட்டிகளை வைத்து கார்டன் போல் அமைத்து புனிதர்களின் சில சிலைகளை வைத்து அழகு  படுத்தி இருந்தார். ரம்யான இடம். சோலையின் மூலையில் சவுகரியமாக அமர்ந்து கொண்டேன். வேப்ப மரக்காற்று ஜில்லென்று என் மேலே பட என்னை மறந்து சில நிமிடங்கள் அயர்ந்தேன்.

தேவலோகம் செல்லும் வழி எல்லாம் விதவிதமான பூச்செடிகள், கொடிகள் வாசம் நிறைந்த பூக்களை கொண்ட மரங்கள் இனிமையான மணத்துடன் காற்றில் கலந்து என்னை தொட்டது. திடீரென்று எனக்கு ஒரு சந்தேகம், சின்ன வயதில் ளீழிமிeஉஜுஷ்விது   கிளாஸ்சில் சிஸ்டர் நரகத்தைப் பற்றியும், மோட்சத்தைப் பற்றியும் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. மோட்சத்துக்கு போகும் வழி கரடு முரடாகவும், துன்பங்கள் நிறைந்ததாகவும் இருக்கும் என்று சொன்னார்களே?, நரகத்துக்கு போகும் வழிதான் சோலைகளும், மலர்களும், கேளிக்கைகளும் நிறைந்த இடமாக இருக்கும் என்று சொன்னார்களே?, டிராக் மாறி வந்து விட்டேனோ?

என்ன தொல்லை இது? எப்படி புனிதர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பது ஒரு ஸிழிஐd னிழிrவ  இல்லை. ஒரு மைல் ஸ்டோன் இல்லை.  சகல புனிதர்களின் கொண்டாட்டத்திற்கான எந்த அறிகுறியும் இல்லையே...

சிறுவர்கள் புரிந்து கொள்ளக் கூடிய அளவுக்கான விளக்கமாக சிஸ்ட்டர் அப்படி சொல்லி இருப்பார்களா?  அப்படி என்றால்  உண்மை தான் என்ன? உலக காரியங்களில் மூழ்கி கடவுளை மறந்து தப்பாக வாழ்வது தப்பு, அந்த இன்பம் நிலையானது அல்ல என்று சொல்வதற்காக  அப்படி சொல்லி இருப்பார்களா?

கரடு முரடான பாதையில் கஷ்டப்பட்டு நடந்தால், நேர்மையாக வாழ்ந்தால் ( அது எல்லோருக்கும்  எளிதல்ல) கடவுளின் வழியில் நடந்தால் தான் மோட்சத்துக்கு போக முடியுமோ? அங்கே ஒரு அமைதியான சுத்தமான பாதை தெரிகிறதே அதுதான் உண்மையான வழியாக இருக்குமோ?, சென்று பார்ப்போம். வாவ்.. அழகான வாசல்... வாசலில் வாட்ச்மேனை காணோமே?, ஏதாவது Tips  குடுத்து உள்ளே நுழைந்து விடலாம். பூலோக புத்தி இது. என்ன செய்ய?, பழக்க தோசம், லஞ்சம் குடுத்து காரியம் சாதித்தே பழக்கம். ஆனால், லஞ்சம் குடுப்பதும், வாங்குவதும் சட்டப்படி குற்றம், சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். இது எங்கள் ஸ்லோகம். வாட்ச்மேன்தான் இல்லை, காலிங் பெல்லாவது இருக்குமே என்று தேடினேன். ஒன்றையும் காணோம். என்ன செய்யலாம்? கதவை தட்டலாமா? என்று நினைத்துக் கொண்டு இருக்கும்போதே இரண்டு இறக்கைகளுடன் அழகான ஒரு சம்மனசு என் முன்னே தோன்றினார்.

ஆஹா... என்ன அழகு... இதுதான் தெய்வீக அழகோ.. என்னைப்பார்த்து புன்னகித்தார். எனக்கு ரொம்ப சந்தோ­மாக இருந்தது. கோவிலில் உள்ள சம்மனசு சுரூபத்தைவிட அழகாக இருந்தார். தேவதூதர்களுக்குத்தான் எல்லா மொழியும் தெரியுமே என்று தமிழில் பேசினேன்.

‘அழகான தேவதூதரே, நான் உள்ளே வந்து சகல புனிதர்களையும் சந்திக்க வேண்டும்’ என்று கூறினேன். தேவதூதர் ‘நல்லது.... ஆனால் நீங்கள் சாதாரணமாக உள்ளே நுழைய முடியாது. அதற்கான  ID Proof   வேண்டும்.

‘அய்யோ... இங்கேயும்  ID Proof,  ஆதார் அட்டை,  Pan card,  ரே­ன்கார்டு கேட்பார்கள் போலிருக்கிறதே. இங்கேயும் மோடி  Formula  வரி?, என்ன  ID Proof ?, தேவதூதரே...

‘நீங்கள் தேவனும் புனிதர்களும், நல்ல ஆத்மாவும் வாழும் இந்த இடத்திற்குள் நுழைய தகுதி பெற்றவர் என்ன சான்றிதழுடன் உங்களது ஒரிஜினல்  ID Proof  வேண்டும்.

‘அப்படியா..  என்னிடம் எதுவும் இல்லையே... வேணுமென்றால் எங்கள் ஆடுயு வை போனில் சிபாரிசு  செய்ய சொல்லட்டுமா?’
‘என்ன சொல்கிறீர்கள்?, எனக்கு ஒன்றும் புரியவில்லை’.

‘சரி ... எங்க மினிஸ்டரைவிட்டே Phone பண்ண சொல்கிறேன்’.
‘என்னப்பா... தப்புதப்பா பேசுகிறீர்கள், நீங்கள் பேசுவது சரியல்ல.

‘என்ன இவருக்கு சிபாரிசு பிடிக்காது போல, பணம் ஏதும் எதிர்பார்ப்பாரோ?, லஞ்சம் கொடுத்த பழக்கதோ­ம், பணம்தான் பாதாளம் மட்டும் பாயும் என்கிறார்களே.. தேவலோகத்திலும் பாயலாம் இல்லையா?, என் பையில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று பார்ப்போம்’ எனது பேண்ட் பாக்கட்டை துழவினேன்.

ரொம்ப எதுவும் இல்லை, மோடியின் பண மதிப்பு குறைப்புக்குப்பின் வெளிவந்த புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் மூன்று இருக்கிறது, ரூபாய் ஐயாயிரம் கொடுப்போம். எப்படி கொடுப்பது? ஆறாயிரம் இல்ல இருக்கிறது, எப்படியும் அவரிடம் ஏற்கனவே பலரிடம் வாங்கிய பணம் இருக்கும், அதில் இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டு வாங்கிக்கலாம்.

‘சரி உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்?, சொல்லுங்க’

‘எனக்கு விளங்காத பொருளில் பேசுகிறீர்கள், நான் சொன்னது உங்களுக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன். நான் கேட்பது, நீங்கள் கடவுளின் வார்த்தையின்படி நல்லவராக, ஒழுக்கமுள்ளவராக, கடவுளின் கட்டளைகளின்படி வாழ்ந்து மரித்து, புனிதர்கள் வாழும் இடத்திற்கு வரும் தகுதி பெற்றவர் என்ற சான்றிதழ் வழங்கபட்டிருந்தால் அதை பார்த்து உங்களை உள்ளே அனுமதிப்பேன் என்றுதான் தங்களிடம்; ID Proof கேட்டேன். ஆனால், நீங்கள் எனக்கு விளங்காத, இந்த இடத்தில் இல்லாத நடைமுறைகளைப் பற்றி பேசுகிறீர்கள் என் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்”, தேவதூதர் அவ்விடத்தைவிட்டு மறைந்து விட்டார். தேவதூதர் மறைஞ்சிட்டாரே, இப்ப என்ன பண்றது? நம்ப கிரிமினல் வேலை எல்லாம் இங்க ஒத்துவராது போல, தப்பு பண்ணிட்டோம், திரும்ப போக வேண்டியதுதான். புனிதர்களை பார்க்கனும்ன்னா நாம முதல்ல கல்லறைக்கு போணும், அப்புறம் தான் நமக்கு சிஐமிrழிஐஉe கிடைக்கும். அதுக்கும் முன்னால நான் பாவம் செய்யாம,  நல்லவனா, கடவுளோட அன்புக்குரியவனா மாறுனாத்தான் Entrance ID  கிடைக்கும். முதல்ல என் கெட்டபழக்கத்த எல்லாம் விடனும்.

வேப்பம் மரம் என் முகத்தில் விழுந்தோன படார்னு முழிச்சேன்.
“நான் இப்ப எங்க இருக்கேன்?, இப்ப நான் பார்த்தது எல்லாம் கனவா? பகல் கனவு கண்டிருக்கேன்.

சரி, முதல்ல கல்லறைக்குப் போனத்தானே, பரலோகம் போக முடியும், அப்ப ஏன் புனிதர்கள் தினத்தை முதல்லைçயும், கல்லறைத் திருநாள இரண்டவதா வெச்சிருக்காங்க, நம்மள  கேட்டிருந்தா சொல்லியிருக்கலாம்.

சகல புனிதர்களோட கொண்டாட்டத்த நாம அங்க போகும்போது பார்த்துக்கலாம்.

No comments:

Post a Comment

Ads Inside Post