Pages - Menu

Tuesday 5 December 2017

பொதுக்காலம் 3ஆம் ஞாயிறு B

பொதுக்காலம் 3ஆம் ஞாயிறு
 21 - 01 - 2018
யோனா 3: 1,5-10;  1 கொரி 7: 29 - 31;  மாற் 14-20;   
        
தொலைக்காட்சி நிகழ்ச்சியில், நீயா? நானா? என்ற தொடரில், ஒரு நிகழ்ச்சியைப் பார்த்தேன். அமெரிக்காவில் கணினி பிரிவில், மாதத்திற்கு 4 லட்சம் சம்பாதித்த ஒருவர், அந்த வேலையை விட்டுவிட்டு, இந்தியாவிற்கு வந்து விவசாயம் செய்து, பலருக்கு வேலை வாய்ப்பு அளிக்கிறார். ஏன் நல்ல வருமானம் தரும் வேலையை விட்டு  விட்டார் என்றால், பணம் நிறைய சேர சேர, ஆசைகள் பெருகுகின்றன. தேடுகிறோம், இறுதியில் உடல் நலத்தை இழந்து நிம்மதியற்ற நிலையில் வாழ்கிறோம். விவசாயத்தில் மனநிறைவு கிடைக்கிறது என்று அவர் விளக்கினார்.

இன்றைய நற்செய்தி ப் பகுதியில், இயேசு முதல் நான்கு சீடர்களை (சீமோன், அந்திரேயா, யாக்கோபு, யோவான்) அழைக்கும் நிகழ்ச்சியை வாசிக்கக் கேட்கிறோம். நால்வரும் மீனவர்கள். இயேசு அழைத்ததும் அவர்கள் தங்களின் படகுகளை, தங்களின்  தொழிலை விட்டுவிட்டு இயேசுவைப்  பின்தொடர்கின்றனர். இயேசுவை பின்தொடர்ந்த அந்த நால்வரும், மிக ஏழ்மை நிலையில் இருந்தவர்கள் அல்ல. அவர்களுக்கு படகுகள், வலைகள், வேலையாட்கள்  இருந்தன. எனவே அவர்கள் அனைத்தையும் விட்டுவிட்டு வந்தார்கள் என்றால் அவர்களின் அர்ப்பணத்தையும், தியாகத்தையும் அது குறிக்கிறது.  மீன் பிடிப்பவர்களை மனிதரை பிடிப்பவராக்குகின்றார் இயேசு. (எரே 16:16)  இல்  இது போன்ற குறிப்பு வருகிறது.

முதல் வாசகத்தில் கடவுளின் அழைப்பை முதலில் மறுத்து ஓடிச் சென்ற யோனா, இரண்டாவது முறை அழைத்தபோது, அந்த அழைப்பினை ஏற்று, நினிவே மக்கள் மனமாற போதிக்கிறார். அவரின் அறைக் கூவலை ஏற்று நினிவே மக்கள் மனந்திரும்புகின்றனர்.

பல காதல் திருமணங்கள் தோல்வி யடைகின்றன.  முதலில் காதல் மயக்கத்தில் ஒன்று சேருகின்றனர். ஆனால் ஒன்றித்து வாழும்போது அவர்களின் சுயநல உருவம் வெளிப்படுகிறது.  உன்அப்பா வீட்டில் அதை வாங்கிவா, இதை வாங்கி வா என்று கொடுமைபடுத்த மாப்பிள்ளை முற்படுகிறார். திருமணத்திற்கு முன்பாக. தாங்கள் நுழையப் போகும் குடும்ப வாழ்வின் பொறுப்பையும், தியாகத்தையும் உணர்ந்து அதில் நுழைவதில்லை.   
மனிதர் வாழ்வு, மற்றவருக்காக செய்யும் தியாகத்தில் நிறைவு பெறுகிறது. தியாகம், இறைவனிடம் அழைத்துச் செல்லும் படகாக விளங்குகிறது.

No comments:

Post a Comment

Ads Inside Post