Pages - Menu

Sunday 8 April 2018

வெற்றி உங்கள் கையில்

வெற்றி உங்கள் கையில்

- அருட்திரு. எஸ்.  ஜான் கென்னடி,
பூண்டி புதுமை மாதா கல்வியியல் கல்லூரி, சமயபுரம்

களத்தில் கலக்கும் கோலி’; ‘கரையில் தவிக்கும் கோலி’, ஆரம்பமே கண்ண கட்டுதோ! சொல்றேன், சொல்றேன். கடந்த 2008ம் ஆண்டு, மலேசியாவில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிகட் உலகக் கோப்பை போட்டி அது. அதுவரை  ஓப்பனிங் பேட்ஸ் மேனாக அவர் களமிறங்கியதில்லை. ஆனால் அன்று களமிறங்க வேண்டிய கட்டாயம் அந்த கோலிக்கு இருந்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஆறு போட்டிகளில் 3 அரை சதங்கள் விளாசினார். அந்த தொடரில் 218 ரன்கள் குவித்து பிரமிக்க வைத்தார் கோலி. ஆனால் கோலி என்றவுடன் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் என்று நினைத்துவிட வேண்டாம். அவரை விட 42 நாட்கள் இளையவரான அதே அணியில் இணைந்து அந்த உலகக் கோப்பையை வெல்லக் காரணமாக இருந்தவர் தார்வார் கோலி. கடந்த 2008 ம் ஆண்டுதான் ஐ.பி.எல் போட்டிகள் பிரபலமடையத் தொடங்கியிருந்தன. நம்ம ஹீரோ தர்வார் கோலியும் ராஜஸ்தான் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அதிரடி காட்ட வேண்டிய இடத்தில் சுருண்டு போனார். அந்த அணிக்காக 2 இன்னிங்ஸ்களில் வெறும் 10 ரன்கள்தான் அடித்திருந்தார். அதே சமயம் நம்ம டெஸ்ட் கேப்டன் விராட் கோலி கொஞ்சம் கொஞ்சமாக தன்னை அதிரடி ஆட்டத்துக்கு மாற்றத் தொடங்கியிருந்தார். 2008 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் விராட் கோலி 12 இன்னிங்ஸ்களில் 165 ரன்கள் எடுத்திருந்தார். நிதான ஆட்டத்தை கடைபிடிக்கும் தார்வார் கோலியால் ஐ.பி.எல் போட்டிகளில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. அடுத்த சீசனில் கிங்ஸ் லெவன் அணிக்காக தார்வார் கோலி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்த முறை 2 இன்னிங்ஸ்களில் 2 ரன்களே எடுத்தார். தார்வார் கோலியின் ஐ.பி.எல்.லில் சோடை போனதால் தேர்வாளர்கள் தார்வார் பக்கம் பார்வையை திருப்பவில்லை. அதனால் தேசிய அணியில் இடம் பிடிக்கும் தார்வாரின் கனவும் சிதைந்து போனது. ஆனால் விராட் கோலி ஒவ்வொரு போட்டியிலும் தன்னை மெருகேற்றிக் கொண்டார். அடுத்த ஆண்டு டிராவிட் காலிஸ் போன்றவர்களையயல்லாம் காலி செய்த பெங்களூர் அணி, விராட்டை மட்டும் தக்க வைத்துக் கொண்டது. 

தன்னைத் தானே மெருகேற்றிக் கொள்ளும் திறன்தான் இன்று சிலரை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. தொடக்கப்புள்ளி ஒரே இடத்தில்தான். ஒரு கோலி முயற்சி மட்டும் செய்தார். இன்னொரு கோலி திறன்களை மெருகேற்றிக் கொண்டார். தற்போது 2016இல்,  20 உலகக் கோப்பை போட்டியில் தொடர் நாயகன் விருதையும் தட்டிச்சென்றார். ஒருவர் ஏணியில் ஏறினார். இன்னொருவர் சறுக்கினார். நாம் எப்படி? நாம் எந்த வேலையை செய்தாலும் நம்முடைய திறன்களை மெருகேற்றிக் கொண்டால் வெற்றி நிச்சயம். பள்ளியில், அலுவலகங்களில், தொழிற் சாலைகளில் வேலை செய்பவர்கள் அவ்வப் பொழுது தங்களுடைய  அறிவை வளர்த்துக் கொண்டு திறன்களை மெருகேற்றிக் கொண்டால்தான் வேலையை தக்க வைத்துக் கொண்டு வெற்றி பெற முடியும். இது அவர்க ளுக்கு மட்டுமல்ல ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்குரைஞர்கள், விவசாயிகள், சமூக சேவகர்கள், அரசியல்வாதிகள், ஆன்மீகவாதிகள், விளையாட்டு வீரர்கள் தங்களுடைய திறன்களை மெருக்கேற்றிக்கொண்டால் வெற்றிக் கனியை சுவைக் கலாம். குறிப்பாக மாணவ மாணவியர்கள் தங்கள் திறன்களை மெறுக்கேற்றிக் கொண்டால் நல்ல மதிப்பெண்களைப் பெற்று அவர்கள் வெற்றி வாகைச் சூடலாம். ஆகவே திறன்களை மெறுகேற்றுவோம். வெற்றியாளர்களாகத் திகழ்வோம்.

விழித்துக் கொண்டிருக்கும் போதெல்லாம்
உழைத்துக் கொண்டே இரு.  ‡ கவிஞர் வைரமுத்து. 

No comments:

Post a Comment

Ads Inside Post