Pages - Menu

Sunday 8 April 2018

இருள் விலகிய போது

இருள் விலகிய போது

ஒரு தலை காதலில் கொலையில் முடியும் இக்காலத்திற்கேற்ற சிறுகதை

கேத்தரீன் ஆரோக்கியசாமி, திருச்சி

Vர்கழி மாதத்து இருட்டு, இருட்டைப் பற்றி பல்வேறு விமர்சனங்களும், அர்த்தங்களும் எழுதப்பட்டாலும் அதன் முழு அர்த்தங்களும் மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாத இருட்டுத்தான் அதன் முழு அர்த்தம். கருப்பு கம்பளிக்குள் கம்பளிப்பூச்சி ஒளிந்திருப்பது போல் இருட்டு என் மனமும் அப்படிதான் இருட்டாகிவிட்டது. எதிலும் தெளிவுள்ள எனது மனம் இந்த வி­யத்தில் சஞ்சலப்படுகிறது ஏன்? இந்த இருட்டு கொஞ்ச நேரத்தில் வெளிச்சமாகி விடுமே. இது நிரந்தரம் இல்லையே... ஒரு முடிவோடு வாசலில் தண்ணீர் தெளித்து கோலமிட்டேன். கோலம் கோணலாக இருந்தது. இருந்தாலும் குறுக்கு வழியில் அதை நேர்ப்படுத்தினேன். கோணல் நேர் படுத்த முடியும் என்ற எண்ணமே எனக்கு புத்துயிர் தந்தது. எப்படியும் இன்று சமாளித்து விடலாம் என்ற எண்ணம் மேலோங்க எழுந்து என் அறைக்கு சென்றேன். காலேஜிக்கு இன்று சீக்கிரமே கிளம்பினேன்.

இந்த இளம் வயதில் எல்லா பெண்களுக்கும் ஏற்படும் தடுமாற்றம் சரியான புரிதல் இல்லாததால் எடுக்கப்படும் முடிவுகள் விபரீதமாகிறது. அப்பாவிடம் சொல்லி உதவி கேட்கலாம் என்றால், அப்பாவின் முன் கோபம் எல்லாவற்றையும் சொதப்பிவிடும். அம்மா சரியான கட்டுப்பெட்டி, எதையும் பாஸிட்டிவாக எடுத்துக் கொள்ள தெரியாத சுபாவம். இருந்தாலும் சூட்சகமாக அம்மாவிடம் சொல்லி வைப்போம் என்ற எண்ணத்துடன்

‘அம்மா, அப்பாவுக்கு இன்னைக்கு நைட் டூட்டிதானே, மதியானம் ரெண்டு மணிக்கு காலேஜிக்கு வந்து பைக்ல கூட்டிக்கிட்டு வரச்சொல்லுமா, எனக்கு பாலகரையில ஒரு வேலை இருக்கு.’
‘சரிம்மா, அப்பா, ஏந்திரிச்ச பிறகு சொல்றேன். இந்தா டிபன் மறந்திட்டுப்போற.’

என் மனக் குழப்பத்தில் டிபனை எடுக்கக்கூட மறந்துவிட்டேன்.
நமது சந்தோ­த்தையும், துக்கத்தையும் கடவுளிடம் பகிர்ந்துக் கொள்ளும்போது ஒரு மனநிம்மதி கிடைக்கும் என்பது உண்மைதான். கடவுள் முன் நான் இன்று சந்திக்கப்போகும் முடிவுக்கு ஒரு  தீர்வும் கிடைக்க வேண்டும் என்று கண்மூடி பிராதித்தேன். ஆன்மீக உலகில் தேடல் ஒரு கண்ணாமூச்சி. நம்மை நாம் வெளியில் தேடுகிறோம். அதனால்தான் நமக்கு நாம் இருப்பது தெரிவதில்லை. எல்லைகளை தாண்டிய கருணைக் கடவுள் உதவுவார் என்ற நம்பிக்கையோடு என பேக்கை எடுத்துக் கொண்டு புறப்பட்டேன். உள்ளே இருந்து அம்மாவின் குரல்.

‘பார்த்துப்போ, காலேஜிக்கு போனோம்மா வந்தோம்மான்னு இருக்கனும்.’ இது தினமும் அம்மா சொல்லும் மந்திரம் தான். அதற்கு குந்தகம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வலுவிக்க வரும் வம்பை எப்படி சமாளிக்கப்போறேன்?

கல்லில் கால் தட்டி இரத்தம் வந்தது. இதை நான் கெட்ட சகுணம் எடுத்துக் கொள்ளவில்லை. கடவுள், ‘என்னை பார்த்துப்போ, கவனமாக இரு’ என்று சொல்வதாகத்தான் எடுத்துக் கொண்டேன்.

பாட்டிலில் இருந்த தண்ணீரை ஊற்றி கழுவிவிட்டு கர்ச்சீப்பை கிழித்து கட்டுக்கட்டிக் கொண் டேன். காலேஜ் பஸ் போய்விடும், ஓட்டமாக ஓடி பஜ்சில் ஏறினேன்.

வாழ்க்கை, ஓட்டமும் தடுமாற்றமும் தெளிவும் உள்ள கலவையான ஓட்டமான தாகத்தானே இருக்கிறது. தடுமாறி விழும்போது எழமுடியாமல் போனால், எழமால் சாய்ந்தால் என்ற பயம் வந்தாலும், வீழ்ந்த போதிலும் எழுந்து தெளிவோடு ஓடினால் வெற்றி பெறுகிறோம்.

வாழ்க்கை தத்துவங்களை சிறிது தெரிந்து கொண்ட எனது மனதில் உள்ள இருட்டு எப்போது விலகப்போகிறது?

கல்லூரிக்குள் பஸ்சை நிறுத்தியவுடன் எனது வகுப்பறையை நோக்கி ஓடினேன். இக்கல்லூரி ஒரு, இரு பாலர் கல்லூரி. எனக்கு வந்த தொல்லையே என் கல்லூரியில் படிக்கும் சீனியர் தியாகுவால்தான். மேடைப் பேச்சில் அவனை பாராட்டியபோது வந்த நட்பு இன்று என்னை நிம்மதியில்லாமல் பயமுறுத்தும் அளவுக்கு முன்னேறிவிட்டது.  

அம்மாவின் கண்டிப்பு இப்போதுதான் எனக்கு புரிந்தது. ‘ஆண்களிடம் நல்லதும் பேசாத, கெட்டதும் பேசாத,’ அனுபவபூர்வமான வார்த்தைகள். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதுக்கு. சாதாரண பாராட்டு என்னை பாதாளத்தில் இறக்கிவிட்டு பாக்குது. தியாகு என் கிளாஸ் ரூம் அருகில் நின்று கொண்டிருந்தான். அவனைப் பார்ப்பதை தவிர்க்க முயன்று தோற்றுப்போனேன். தியாகு என்னருகில் வந்து, 

‘மாலை கிளாஸ் முடிந்தவுடன் உன்  பதிலை சொல்லு’ என்று சொல்லிவிட்டு மாடி ஏறி அவனது கிளாசுக்கு போய்விட்டான். நான் அவனுக்கு அதிக இடம் கொடுத்து விட்டேனோ, என்ற எண்ம் என்னை ஆக்கிரமித்தது. அன்று முழுவதும் பாடத்தில் என் மனம் லயிக்கவில்லை. என்ன பதில் சொல்லலாம் என்ற எண்ணத்திலேயே என் மனம் ஆழ்ந்துவிட்டிருந்தது.

கல்லுVரி வகுப்புகள் முடியும் நேரம், அப்பா வாசலில் பைக்குடன் நிற்கிறார். எனக்கும் கிளாஸ் முடிந்துவிட்டதால், அப்பாவை நோக்கி நடந்தேன்.
என் வருகையை எதிர்பார்த்திருந்து காத்திருந்த தியாகு என் பின்னால் வந்தான். வாசலை தாண்டியதும் என்னை இடமறித்து, ‘சுமதி, என்ன உன்னோட இறுதியான முடிவு சொல்லு.’ கொஞ்சம் அதட்டும் தோரணையில் தியாகு கேட்க, சுமதி  பேசத் தொடங்கினாள். ‘தியாகு, உன்னோட திறமையையும், அறிவையும் பார்த்துதான் உங்கள பாராட்டினேன். வேற எந்த எண்ணமும் இல்லை. போகப்போக உங்க பேச்சில் தெரிஞ்ச வித்தியாசம் என் மனச சங்கடப்படுத்திருச்சி.’

‘என்ன? என்னோட நீ பேசினதுக்கு காரணம் இது மட்டும்தானா? என்னை நீ விரும்பலயா?’ ‘இல்லை தியாகு, உண்மை, இத  நம்பு!’ 
இருவரின் பேச்சையும் கேட்டுக்கொண்டு கதிர்வேல் முன்னேறி வந்து தியாகுவின் பின்னால் நின்றுகொண்டு அவன் கையில் ஏதும் ஆயுதம் இருக்கான்னு பார்த்துக் கொண்டு நின்றார். பேச்சு முத்தி போகும்போது தலையிடலாம். நல்லப் பையனா தெரியிறான். பேசிப் பார்ப்போம் என்ற தயார் நிலையிலேயே அவர் காத்திருந்தார்.

‘இல்லை, சுமதி அத என்னால நம்ப முடியில வீட்டில பெற்றோர்க்காக பயப்படுறீயா’

‘இல்லை தியாகு நான் சொல்றத கேளு. காதல்ன்றது புனிதமானது. அதை இப்ப உள்ள இளம் பெண்களும், பையன்களும் கொச்சப்படுத்துறாங்க. உனக்கு புரியாதது இல்ல. உன் பேச்சில் உள்ள தெளிவும் உயரிய கருத்துக்களும்தான் எனக்கு பிடிச்சிருந்தது.’ ‘நீ சொல்றது வேடிக்கையா இருக்கு சுமதி.’ ‘வேடிக்கை இல்ல தியாகு, வெறும்  Appreciation  காதலாகாது.’  ‘சரி உன்னோட இறுதி முடிவு என்ன?’
‘நாம நல்ல நண்பர்களாக இருப்போம். படிப்பு முடிஞ்சிட்டா என்ன?  நல்ல கருத்துகளை பரிமாறிக் கொள்ள எவ்வளவோ வழி இருக்கு. பழகுவோம் காலபோக்கில் மனம் ஒத்துப்போனால் மணம் முடிச்சிக்குவோம்.’

‘இது எல்லாம் நடைமுறையில சாத்தியம் இல்ல.’

‘சாத்தியமா மாத்தனும் தியாகு, நாம படிச்சவங்க. புரிதல் இருக்கனும், இப்ப இளைஞர்களும், இளம் பெண்களும் காதல தப்பா புரிஞ்ச்சிகிட்டு இருக்காங்க. இப்ப இவர்கள் சொல்ற காதல்  வெறும்  Sex Attraction தான். காதலின் ஆழத்தை புரிந்துக் கொள்ளாமல் மாயமான நினைவில் வாழ்ந்துக்கிட்டு இருக்கிறாங்க. அவுங்க நிஜத்துக்கு வரும்போது எல்லாம் புரியும்.’ 

‘என்ன நீ பெரிய லெக்சர் குடுக்கிற,’  ‘நான் உண்மையை சொல்றேன் தியாகு,’  சுமதியின் அப்பா கதிர்வேல் குறிக்கிட்டு பேச ஆரம்பித்தார். 

‘தம்பி நான் சுமதியோட அப்பா. நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருந்ததை கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன். என் பொண்ணு சுமதி சொல்றது உண்மைதான். தியாகு தம்பி. நீங்க நிறைய படிச்சவங்க. மனசு சார்ந்ததுதான் காதல் வாழ்க்கை, உடல் சார்ந்தது காமம். இத சரியா புரிஞ்சிக்காம இப்ப உள்ள புள்ளைங்க தவறான முடிவெடுக்கிறாங்க. இதனால் உயிர் இழப்பும் சோகமும் தான் மிஞ்சுது. பழிவாங்கிறது உண்மையான அன்புக்கு அடையாளம் இல்லை. எதையும் பேசி நல்ல முடிவெடுக்கனும்.’

‘என்ன சொல்றீங்க சார், எனக்கு புரியில.’ 

‘சுமதி சொல்ற மாதிரி நல்ல நண்பர்களா இருங்க. உங்க திறமைகளை வளர்த்துங்க. உண்மையான நட்பு தவறான முடிவெடுக்காது. நட்பு  அன்பாக மாறின பிறகு நல்ல முடிவெடுப்போம். வாழ்க்கை பெரியது வாழ்ந்து காட்டனும்.’

‘ரொம்ப நன்றி சார், நான் தவறான முடிவெடுக்க பார்த்தேன். நீங்க என்னை தெளிவு படுத்திட்டீங்க. சுமதி தன்னோட முடிவையும் சொல்லிட்டா நல்ல முடிவு எடுப்பேன் சார்.

சுமதி நான் வரேன். ஊருக்கு போய் என்னோட முடிவை உனக்கு எழுதறேன். சார் நான் வரேன்.’

‘சரி தம்பி, ஊருக்கு போய் நல்லா யோசிச்சி, முடிவெடுங்க.’

விபரீதம் தடுக்கப்பட்ட சந்தோ­த்தில் கதிர்வேல் மனநிம்மதியுடன் புறப்பட்டார். இந்த வி­யத்தில் பெற்றோரின் துணையுடன் தீர்வு காண்பதுதான் எப்போதும் நல்லது. இப்போது ஒரு சிலரை தவிர பெற்றோர்கள் புரிதலோடும் தெளிவோடும் இருக்கிறார்கள். 

வாம்மா சுமதி வீட்டுக்கு கிளம்புவோம் என்று சொல்லிக் கொண்டே பைக்கை ஸடார்ட் செய்தார் கதிர்வேல்.

‘கடவுளே, நல்லபடியா பிரச்சினை யை சமாளிச்சாச்சு. உங்களுக்கு ரொம்ப நன்றி. என் மனதில் இருந்த இருள் 

No comments:

Post a Comment

Ads Inside Post