Pages - Menu

Monday 16 April 2018

மாநில மத்திய அரசுசுகள், சிறுபான்மையி னருக்குசெயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள்

மாநில மத்திய அரசுசுகள்,  
சிறுபான்மையி னருக்குசெயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள்

(மாநில மத்திய அரசுகள், சிறுபான்மையினருக்கு நிறைய உதவிகள் செய்கின்றன.  அவைகளை பெற்று வளர்வோம்).

1. ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள அரசு நிதி உதவி:

 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிறித்துவ பிரிவினரும் புனிதப் பயணமாக ஜெருசலேம் செல்வதற்கு நிதியுதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டிலும் 500 கிறித்தவர்கள் புனித பயணம் செய்யலாம். இதற்கென அரசின்  நிதி உதவியாக நபர் ஒருவருக்கு ரூ 20,000/‡  வீதம் வழங்கப்படுகிறது.

* இப்புனித பயணம் பெத்லேகம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டன் நதி, கலிலேயா கடல்  மற்றும் கிறித்தவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது.

* விண்ணப்பதாரர்/குடும்பத்தினர் தமிழ்நாட்டில் வசிக்கும் கிறித்தவ மதத்தவராக இருத்தல் வேண்டும். 

* அறிவிப்பு தேதியில் குறைந்த பட்சம் ஓராண்டு செல்லதக்க பாஸ்போர்ட் உடையவராக இருத்தல் வேண்டும்.

* விண்ணப்பிக்கும் போது வெளிநாடு பயணம் மேற்கொள்வதற்கு எவ்விதமான வில்லங்கங்களும் இருத்தல் கூடாது.

* வெளிநாடுகளில் புனித பயணம் மேற்கொள்வதற்கு மருத்துவ மற்றும் உடற்தகுதி பெற்றவராக இருத்தல் வேண்டும்.

* இப்பயணம் மேற்கொள்வதற்காக ஏற்படும் செலவினத்தில் அரசு வழங்கும் நிதி உதவி ரூ 20000/‡ நீங்கலாக மீதமுள்ள தொகையை செலுத்த ஒப்புதல் அளிக்க வேண்டும்.

* ஏற்கனவே இத்திட்டத்தின் கீழ் ஜெருசலேம் புனிதப்பயணம் மேற்கொண்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கக் கூடாது.

* ஒரு குடும்பத்தில் விண்ணப்பதாரரையும் சேர்த்து அதிகபட்சம் 4 நபர்கள் பயணம் மேற்கொள்ளலாம். இதில் 2 வயது நிறைவடைந்த 2 குழந்தைகளும் இருக்கலாம். இப்பயணத்தில் 70 வயது நிறைவடைந்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னு ரிமை அளிப்பதுடன் அவருக்கு துணையாக அவர் விரும்பும் ஒரு நபரை  மேற்படி நிபந்தனைகளுக்குட்படும் பட்சத்தில் அவருடன் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

பயனாளிகள் மாவட்ட வாரியாக கிறித்தவ மக்கட்தொகையின் அடிப்படையில் கணினி மூலம் குலுக்கல் (ஸிலிமி றீதீவிமிeது)  முறையில் கூர்ந்தாய்வு குழுவினரால் தெரிவு செய்யப்படுவர். தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட பயண முகவர்கள் மூலம் மட்டுமே இப்புனித பயணம் மேற்கொள்ள வேண்டும்.

* தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தகவல் மற்றும் புனிதப்பயணம் நிரல் குறித்து விவரம் தெரிவிக் கப்படும்.
பயணத்திற்கு பிறகுதான் நிதி வழங்கப்படும்.

2. கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ள அரசுநிதி உதவி    
வழங்குதல்:

தமிழகத்தில் உள்ள கிறித்துவ தேவாலயங்கள் புனரமைத்தல் மற்றும் பழுது நீக்குதல் பணிகள் மேற்கொள்வதற்காக நிதியுதவி அளிக்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
யஇத்திட்டத்தில் தேவாலயம் பதிவு செய்யப்பட்டு சொந்தக்கட்டடத்தில் குறைந்த பட்சம் 10 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இருக்க வேண்டும்.     

* தேவலாயங்களின் ஏற்பட்டுள்ள பழுதுகள் மற்றும் தேவாலய கட்டடத்தின் வயது ஆகியவற்றை கருத்திற்கொண்டு கீழ்காணுமாறு நிதி உதவிகள் வழங்கப் படும்.

* தேவலாய கட்டடத்தின் வயதிற்கேற்ப 10 - 15 வருடம் வரை ரூ 1 இலட்சமும், 15 ‡ 20 வருடம் வரை ரூ 2 இலட்சமும்,20 வருடத்திற்கு மேல் ரூ 3 இலட்சமும் நிதி உதவி வழங்கப்படும்.

* தேவலாயம் சீரமைப்பு பணிக்காக வெளி நாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிருத்தல் கூடாது.

* தேவலாய கட்டடத்தின் பழுதுகளை மாவட்ட ஆட்சித்தலைவரால் அமைக்கப்பட்ட குழுவினரால் நேரடியாக பார்வையிட்டும், கட்டடத்தின் உறுதித்தன் மையினை ஆய்வு செய்து உரிய அதிகாரிகளால் சான்று அளித்தும்,  அங்கீகரிக்கப்பட்ட  கட்டிட வரைபடம், பழுதுகள் தொடர்பான திட்ட மதிப்பீடு மற்றும் கட்டடத்தின் வயது ஆகியவற்றின் அடிப்படையில் நிதி உதவி வழங்கப்படும். 

மத்திய அரசின் நலத்திட்டங்கள்

 1. கல்வி உதவித்தொகை திட்டங்கள் (Scholarships)

அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களிலும் ஒன்றாம் வகுப்பு முதல் தொழிற்கல்வி/ ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும் கிறித்துவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் சமண மதங்களைச் சார்ந்த சிறுபான்மையின மாணவ/ மாணவியர்களுக்கு மத்திய அரசின் கீழ்க்கண்ட கல்வி உதவித்தொகை திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

பள்ளிப்படிப்பு  பள்ளிமேற்படிப்பு  மற்றும் அடிப்படை தகுதி 
வகுப்பு   1 முதல் 10 வரை   (1 ஆம் வகுப்பு நீங்கலாக)  ஆண்டு  வருமானம் ரூ 1 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் 
                    
11 ம் வகுப்பு முதல்  ஆண்டு  வருமானம் ரூ 2 இலட்சத்திற்கு  மிகாமல் இருக்க வேண்டும். ஆராய்ச்சி தொழிற்கல்வி: ஆண்டு  வருமானம் ரூ 2.5 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் . 

எல்லா நிலையிலும் மதிப்பெண் 50 சதவீதம்  இருக்க வேண்டும்                      
நிபந்தனை:  ஒரு குடும்பத்தை சார்ந்த இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இத்துறையால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பெறுபவர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை/ ஆதி திராவிடர் நலத்துறை/ பிறத்துறைகள்/ நல வாரியங்கள் ஆகியவற்றில் எவ்வித கல்வி உதவித்தொகையும் பெறக் கூடாது. கல்வி உதவித் தொகை: கல்விக் கட்டணம் மற்றும் பராமரிப்புக் கட்டணம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: இக்கல்வி உதவித்தொகைப் பெறுவதற்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், மதம்/சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை எண், வங்கி கணக்கு எண், IFSC code (ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டது)  ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து www.Scholarship.gov.in   என்ற இணையதள முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் ரூ.50,000 க்கு மிகாமல் கல்வி உதவித்தொகை பெறுபவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த படிவத்தை படியிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் பயிலும் பள்ளி/ கல்லூரியில் தவறாது சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

2. பேகம் ஹஜ்ரத் மகால் தேசிய கல்வி உதவித் தொகை: (Begam Hajrat Mahal National Scholarship Scheme)

 சிறுபான்மையின மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்று பொருளாதார வசதியின்மையால் கல்வியை தொடர முடியாத நிலையை கலையும் வகையில் உதவி தொகை வழங்கும் திட்டமாகும்.

தகுதி: 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியர்கள் முந்தைய வகுப்புகளில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். 

ஆண்டுவருமாணம்: குடும்ப ஆண்டு வருமானம் ரூ 2 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். 

உதவித் தொகை: 9 ஆம் வகுப்பு (ம) 10ஆம் வகுப்பு மாணவியர்களுக்கு ஆண்டுக்கு ரூ 5000/- வீதமும், 11 (ம), 12 ஆம் வகுப்பு மாணவியர்களுக்கு ஆண்டுக்கு 6000/- வீதமும், இரண்டு ஆண்டுகளுக்கு  வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு https://scholarship - maef.org என்ற இணையதளத்திலும் அறியலாம்.

3. மெளலான ஆசாத் கல்வி அறக்கட்டளை மூலம் கல்வி நிறுவனங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல். (Maulana Azad Education Foundation)

மத்திய அரசின் நிறுவனமான மெளலான ஆசாத் கல்வி அறக்கட்டளை மூலம் கல்வியில் பின்தங்கிய சிறுபான்மையினர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிகள், ஐடிஐ, பாலிடெனிக்/ ஆசிரியர் பயிற்சி நிலையங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்கு நிதிஉதவி வழங்குகிறது, அனைத்து கட்டுமானங்கள் (ம) விரிவாக்கப் பணிகள், விடுதி கட்டணங்கள் ஆகியவற்றில் கட்டுமானத்தில் தன்மைக்கேற்ப அதிகபட்சம் ரூ.50 இலட்சம் நிதி வழங்கப்படும். திட்டத்திற்கு மே மாதம் முதல் செப்டம்பர் 30ந் தேதிக்குள் www.maef.nic.in ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

4. சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் (IDMI)
கல்வியில் பின் தங்கிய சிறுபான்மை மாணவியரின் கல்வி தரத்தை மேம்படுத்தும் வண்ணம்  மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி இத்திட்டம் செயல்படுத்தப் படுகிறது. உட்கட்டமைப்பு வசதிகளான வகுப்பறை, அறிவியல் கூடம், கணினி அறை, நூலகம், கழிப்பறை, குடிநீர் வசதிகள், விடுதிகள் மற்றும்  இதர அத்தியாவசிய தேவைகளை மேம்படுத்தும் திட்ட மதிப்பீட்டு தொகையில் 75 சதவீதம் மட்டும் (அல்லது) அதிகபட்சம் ரூ.50 இலட்சம் இதில் எது குறைந்ததோ அத்தொகை கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.

உதவிப்பெறுவதற்கான தகுதிகள்: அரசு உதவி பெறும் / உதவி பெறாத சிறுபான்மையினரின் பள்ளிகள் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் இயங்கி மாணவர்கள் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்றிருக்க  வேண்டும்.
விபரங்களுக்கு  www.mhrd.gov.in ல் தெரிந்துக் கொள்ளலாம்.

5. பல்நோக்கு வளர்ச்சி திட்டம் மூலம் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துத்தல்  (Multi Sectoral Development Programme)
பின்தங்கிய சிறுபான்மையின சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் குடிநீர் வசதி, சாலை வசதிகள், கழிவறை வசதி, கான்கீரிட் வீடுகள் அமைத்தல், மின்சார வசதி ஏற்படுத்துதல் போன்ற அடிப்படை வசதிகள், திறன் வளர்ப்பு பயிற்சிகள் பின்தங்கிய சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளில் மேம்படுத்தப்படும்.
தகுதிகள்: இத்திட்டம் மக்கட்தொகை கணக்கெடுப்பின் (2011) படி அந்தந்த மாவட்டங்களில் சிறுபான்மையினர் மொத்த மக்கள் தொகையில் நகர்ப்புறங்களில் 25 சதவீதத்திற்கு குறையாமலும், கிராமப்புறங்களில் 50 சதவீதத்திற்கு குறையாமலும் இருத்தல் வேண்டும்.

இத்திட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவரின் தலைமையிலான குழுவின் கருத்துக்களை மாநில அரசு பரிசீலித்து மைய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.

No comments:

Post a Comment

Ads Inside Post