Pages - Menu

Friday 13 April 2018

பாஸ்கா காலம் 4 ஆம் வாரம் B

பாஸ்கா காலம் 4 ஆம் வாரம்
22-4-2018
திப 4:8-12;  1 யோவா 3:1-2;    யோவா 10:11-18

நீதிமொழிகள் நூலில் மக்கள் தலைவர்கள் எப்படிப்பட்ட வராய் இருக்க வேண்டும் என்று விளக்குகிறது. நியாயம் வழங்குவதில் அரசர் அக்கரை காட்டினால் நாடு செழிக் கும், அவர் வரி சுமத்துவதில் அக்கறை காட்டினால் நாடு பாழாய் ப்போகும் (நீமொ 29:4).
வள்ளுவரும் நல்ல தலைவரின் பண்புகளை குறிப்பிடு கிறார்.

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலன் ஆள்பவர்க்கு    (குறள் 383)

இன்றைய ஞாயிறு நல்லாயன் ஞாயிறு என்று அழைக்கப்படுகிறது. மனிதர் ஒருவருக்கொருவர் வழிநடத்துபவர்களாக விளங்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார்.

நானே நல்லாயன் தந்தை என்னை அறிந்திருப்பது போல நானும் என் ஆடுகளை அறிவேன் என்றும், என் ஆடுகளுக்காக என் உயிரை கொடுக்கிறேன் என்றும் கூறுகிறார் (யோவா 10:14-15).

நல்ல ஆயன் என்றால் ஆயருக்குரிய முழு பண்புகளைப் பெற்றவர் என்பது பொருள். ஆடுகளை அறிதல் என்றால் உறவைக் குறிக்கும். உயிரைக் கொடுப்பேன் என்றால் ஆடுகளோடு ஒன்றித்த நிலை.

கூலியாட்களோடு நல்ல ஆயரை ஒப்பிட்டுக் காட்டுகிறார். கூலியாள்களுக்கு ஆடுகளைப் பற்றி கவலையில்லை என்கிறார்
முதல்வாசகத்தில், பேதுரு தன் உரையில், இயேசுதான் நமக்கு முன்னோடி அடித்தளம் அவரைப் பின்பற்ற வேண்டும் என்கிறார். இரண்டாம் வாசகத்தில் யோவான், நாம் கடவுளின் பிள்ளைகள். அவரை அறிந்து கொண்டால் நம்மையே அறிந்து கொள்வோம் என்கிறார். 

நம் இந்தியா, குறிப்பாக தமிழ்நாடு நல்ல தலைவர்கள் இல்லா தரிசு நிலமாக விளங்குகிறது. மக்களை ஏமாற்றி, ஆடுகளாகிய மக்களை தோலுருத்து சாப்பிடுகிறார்கள். மக்களின் வரிப் பணத்தை தந்திரமாக தங்களுக்கு வசமாக்கிக் கொண்டு கோடி கோடியாக சேர்த்து வைத்திருக்கிறார்கள்.

இந்திய மக்கள் வாயில்லா ஆடுகளாகவே, நம் தலைவர்களின்  ஏமாற்று சித்துகளுக்கு அடிமையாகி வாழ்கின்றனர். ஆற்றின்  மணலைச்  சுரண்டி இயற்கையை அழிக்க நம் அரசியல் தலைவர்கள் தீவிரமாக செயல்படுகின்றனர். விவசாயிகளுக்கு அவர்களின் விளைச்சலுக்கேற்ற ஊதியத்தைப் பெற வழி செய்யவில்லை.

நாம் இயேசுவைப் பின்பற்றி மற்றவர்களோடு நல்லுறவு கொண்டு (அறிதல்) தியாகம் செய்து மற்றவர்களை வழிநடத்துவோம். அதனால் வாழ்வு பெறுவோம். 

No comments:

Post a Comment

Ads Inside Post