Pages - Menu

Friday 3 November 2017

வாழ்வின் பல பரிமானம்

வாழ்வின் பல பரிமானம்

சகோ. விமலி FIHM. இதயா கல்லுரி, குடந்தை

(வாழ்வு பற்றிய பலரின் புரிதல்களை, நேர்காணல் கண்டு தொகுத்துத் தருகிறார் சகோ.விமலி)

  “ஏழ்மையிலும் நேர்மை: கோபத்திலும் பொறுமை: தோல்வியிலும் விடாமுயற்சி:      வறுமையிலும் உதவி: துன்பத்திலும் துணிவு: செல்வத்திலும் எளிமை: பதவியிலும் பணிவு - இதுவே வாழ்க்கை” 
 - காந்தி

வாழ்வது ஒரு முறைதான்! வாழும் காலம் தெரியாது! சத்தியத்தில் நடந்து! நேர்மையில் மூழ்கி! முயற்சியை யாசித்து! உறவுக்குத் தோளாக! நட்பிற்கு உயிராக! குருக்களை மதித்து! ஒழுக்கத்தில் ஒப்பற்றவராக! உண்மைப் பாதை! நம் குடும்பத்திற்கு  நம் சமூகத்திற்கு  வழிகாட்ட வேண்டும் என்ற தாகத்தோடு தனித்தன்மையோடு, தங்கள் முத்திரை பதிக்கும் மனிதர்கள் இச்சமுகத்திற்கு இன்று தேவை. அவ்வாறு வாழும் நெஞ்சங்கள் இன்றைய உலகிற்குத் தேவை.  எத்தனைச் சுமைகள் எத்தனைத் தேடல்கள் வாழ்வை ருசிக்க, உறவை நேசிக்க அடடா! வாழ்வு மலராதா! கனவு பலிக்காதா! வாழ்க்கை சிறக்காதா! ஒரு முறைதான் சுகமான, சுவையான இப்பயணம்

திருவாளர் குமார், ஓட்டுநர், கும்பகோணம்

மனித வாழ்க்கை ஒரேயயாரு நொடி தான்: ஒவ்வொரு நொடியிலும் முழுமையாக வாழ வேண்டும். (புத்தர்) என்ற இம்மாமனிதரின் சிந்தனைப் போன்று நானும், உயிருள்ள, உயிரற்ற அனைத்தையும் நேசிக்கும் நெஞ்சம் எனக்கு வேண்டும். எனக்கு கிடைத்ததை நெஞ்சார் நான் வாழ்த்த வேண்டும். நம்பிக்கையோடு வளர்ச்சியை எதிர்கொள்ள வேண்டும் இதுவே என் வாழ்க்கை.

மாணவி: வைத்தீஸ்வரி, தமிழ் இலக்கியம் முதுகலை முதலா மாண்டு மாணவி

வாழ்க்கையில் மிக மோசமான சூழ்நிலைகளில் பல வெற்றியாளர்கள் சிக்கித் தவித்திருக்கிறார்கள். அவற்றைத் தனது அசாத்திய முயற்சியினாலும், தோல்விகளை முறியடித்து தடைகளைத் தகர்ந்தெறிந்து வெற்றிக் களிப்பில் மிதந்தவர் ஆபிரகாம் லிங்கன். இத்தலைமைப் போன்றதொரு இலட்சிய வாதியாக வருவதே என் வாழ்வின் இறுதி எல்லையாக கொண்டு வாழ்கிறேன்.

திருமதி ரூபலா, கணிதப்பேராசிரியர், இதயா கல்லூரி, கும்ப கோணம்

  இந்தியாவின் சொத்து இளைய தலைமுறையே!  நல்ல உடல் நலத்தோடும், அறிவாற்றலோடும், தன்னம்பிக்கையோடும் நம்முடைய இளைய சமுதாயத்தை வளர்த்தல். வலிமையும், அறிவாற்றலும், நிறைந்தவர்களாக அவர்களை உருவாக்கினால் வருங்கால இந்தியா நமதாகும் இதுவே என் வாழ்வில் இறுதியான ஆசை. இதில் முனைப்போடு பணியாற்றிக்கொண்டு இருக்கின்றேன்.

திருவாளர் வீ. குழந்தையப்பன், (Electric Engineer‡ ஓய்வு, மதுரை)

ஒருவன் கற்ற கல்விதான் அவனை மேன்மையடைய செய்யும். பிறரிடம் நாம் செலுத்தும் அன்பு, உதவிசெய்யும் குணம், மன்னிக்கும் தன்மை, புறங்கூறாமை ஆகியவையே நாம் முழுமையான வாழ்வு வாழ தேவையானவை. நம் பலத்தால் (பணம், இனம், அதிகாரம்) பிறருக்கு தீங்கு இழைக்க கூடாது. பிறருடைய பலவீனத்திற்கு மனதார உதவி செய்தால், கோடி புண்ணியம் தேடி வரும். சுய நலம் இல்லாத வாழ்வுதான் நம்மை மேன்மைப் படுத்தும்.
வாழ்க்கை என்றாலே முதலும் முடிவும் எதிர்நீச்சல்தான். கடைசிவரை தாக்குப்பிடிப்பது எளிதுமல்ல, இயலாததுமல்ல. எனவே சிறப்பானவற்றை தொடர்ந்து செய்துகொண்டே இருந்தால் மோசமானவை வாழ்வில் ஒரு போதும் நிகழாது. எனவே நண்பர்களே மிகவும் கவனத்துடனும், தன்னம்பிக்கையுடனும், உயரிய இலட்சியத்துடனும் வாழ்வை வாழ முயற்சியுங்கள். வாழ்வு வருங்காலத்திற்கு வரமாய் அமையும். உங்களின் உயர்வான இலட்சியம் வெற்றிப் பெற என் வாழ்த்துக்கள்.

“உங்கள் இலட்சியத்தில் வெற்றியடைய வேண்டுமானால் அதில் இம்மியும் பிசகாமல் அதே சிந்தனையோடு செயல்பட     வேண்டும்”.    -அப்துல் கலாம்.

No comments:

Post a Comment

Ads Inside Post