Pages - Menu

Thursday 2 November 2017

முடியும் வாழ்க்கை

அமெரிக்கக் கடிதம் 
- சவரி, கேரி

முடியும் வாழ்க்கை


நவம்பர் 2ஆம் நாளை இறந்தோரை நினைவு கூறும் நாளாக, கல்லறை திருநாளாக, நம் இறுதி நாள்களை நினைவுறுத்தும் நாளாக, நாம் சிறப்பிக்கும் விதம் என்னை மிகவும் கவர்ந்த ஒன்றாகும். என்னுடைய உறவினர் ஒருவர் தான் பிறந்த இடத்தை விட்டு சில ஆயிரம் மைல்கள் தாண்டி வேலை செய்கிறார். அங்கேயே அவரது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். நவம்பர் 2ம் தேதி கல்லறை திருநாள் அன்று எங்கிருந்தாலும் ஊருக்கு வந்து விடுவார், தன்னை விட்டு பிரிந்த தன் பெற்றோருக்காக, முன்னோர்கள் கல்லறைக்கு சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்துவார். அவர் மற்ற விழாக்களுக்கோ,  திருமணங்களுக்கோ மிக சிரத்தை எடுத்து வருவதில்லை. ஆனால் கல்லறை திருவிழாவிற்கு மிக சிரத்தை எடுத்து வந்து விடுவார். இதை பார்த்து நான் நெகிழ்ந்து போனேன். என் அப்பா என்னுடன் பகிர்ந்து கொண்ட அந்த காலத்து நிகழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அப்போது கிராமங்கள் வளர்ச்சியடையாத காலம், பேருந்து வசதிகள் அதிகம் வளர்ச்சி அடையாத காலம், தொலைப்பேசி வசதிகள் இல்லாத காலம். எல்லா இடங்களுக்கும் மக்கள் நடந்தோ, மிதிவண்டியிலோ செல்வார்கள். அப்போது வழிப்பறி கொள்ளைக்காரர்கள் பயணம் செல்பவர்களை  நிறுத்தி பொருள்களை களவாடுவார்களாம். அவர்களிடமிருந்து தப்பிக்க ஒரே ஒரு வழி இருந்ததாம். பயணம் செல்பவர்களை கொள்ளைகாரர்கள் நிறுத்தி விசாரிப்பார்களாம், எங்கிருந்து வருகிறாய், எங்கு செல்கிறாய், எதற்கு செல்கிறாய் என்று விசாரிப்பார்களாம். அப்போது பயணிகள் பெரிய காரியத்திற்கு செல்கிறேன் என்றால் விசாரிப்பார்களாம். அப்போது பயணிகள் பெரிய காரியத்திற்கு  செல்கிறேன்  என்றால் மறுபேச்சு பேசாமல், விரைவில் செல் சென்று அவர்களிடமிருந்து களவாடாமல் ஒதுங்கி நின்று வழி அனுப்பி வைப்பார்களாம். பெரிய காரியம் என்றால் இறந்தவர்களின் இறுதி சடங்கிற்கு செல்கிறேன் என்று பொருள். இது இறந்தவர்களை அடக்கம் செய்யும் புனிதத்தையும், அதில் பங்கெடுக்கும் முக்கியத்துவதையும் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. மனிதர்களின் துக்கத்தில் கலந்து கொள்ள வேண்டிய அவசியத்தை கீழ்வரும் விவிலிய வசனங்களும் உறுதிப்படுத்துகின்றன.

பிறந்த நாளைக் காட்டிலும் இறந்த நாள் நல்லது. விருந்து வீட்டிற்குப் போவதைவிடத் துக்க வீட்டுக்குப் போவது நல்லது. ஏனென்றால், இழவு வீட்டிலே எல்லா மனிதருக்கும் முடிவு உண்டென்று காணப்படுவதால், உயிரோடிருக்கிறவன் தனக்கு நிகழவிருப்பதைச் சிந்திப்பான். (சஉ 7:2-3)

ஐ - போன் என்ற டச் போனை (விதுழிrமி ஸ்ரீஜுலிஐe) ‡ஐ கண்டுபிடித்த ஆப்பிள் (புஸ்ரீஸ்ரீயிe) நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப் (றீமிeஸe மூலிணு) ‡ ன் கடைசி நாள்களை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஸ்டீவ் ஜாப் ஆப்பிள் நிறுவனத்தை 1976 ‡ ம் ஆண்டு ஆரம்பித்தார்.  மைக்ரோ சாப்ட்  (னிஷ்உrலி விலிக்ஷூமி ) நிறுவனமும் 1975 ‡ ம் ஆண்டு நிறுவப்பட்டது. மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் ( நிஷ்ஐdலிழவி) கணினி மக்களால் பயன்படுத்தப்பட்டது. ஆப்பிள் கணினி அதிக வெற்றி பெறவில்லை. இதனால் மனம் நொந்த ஸ்டீவ் ஜாப் கார்ட்டூன் சினிமாக்களை உருவாக்க சென்று விட்டார். 2007 ‡ம் ஆண்டு  ஐ‡போன்னை வெளியிட்டார். ஐ‡போன் மிக பெரிய வெற்றியை பெற்றது.  ஐ‡போன் வாங்குவதற்கு உலகெங்கிலும் இளைஞர்கள் தவம் கிடைத்தார்கள். ஐ ‡ போன் தரத்தில் சிறந்து ஸ்டீவ் ஜாப்‡ற்கு பெரும் புகழையும், பொருளையும் சம்பாதித்தது கொடுத்தது. இந்த புகழையும், வெற்றியையும் அதிக நாள் நிலைக்கவில்லை. 2011 ‡ ம் ஆண்டு அவருக்கு புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஏராளமான பணமும், புகழும் இருந்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை. மரண படுக்கையில் அவர் மற்றவர்களுக்கு கூறிய கடைசி வார்த்தைகள் எல்லோரையும் கலங்க வைத்தது, பலரின் மனதை தொட்டது. அவரின் கடைசி வார்த்தைகளிலிருந்து சில வரிகள்.

எனக்கு கார் ஓட்டுவதற்கும், காசு சம்பாதிப்பதற்கும் வேலையாள்களை அமர்த்த முடியும். ஆனால் என்னுடைய மரண வலியை தாங்கி கொள்ள வேறொரு ஆளை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. என்னுடைய பணமும், புகழும் என்னுடைய மரண படுக்கைக்கு முன் பயனற்று நிற்கிறது. என் இறுதி நாள்களில், நான் சம்பாதித்த பணமும், புகழும் கூட வரவில்லை, நான் சம்பாதித்த அன்பும், நட்பும்  அதன் நினைவுகளும்தான் என்னுடன் இப்போது உள்ளது. பணத்தை ஒன்றையே குறி வைத்து ஓடாதீர்கள். அன்பு ஆயிரம் மைல்களை கடந்து செல்லும் வேகம் பெற்றது. உங்கள் மனைவியை,  கணவனை, குழந்தைகளை, நண்பர்களை அன்பு செய்யுங்கள். மற்றவர்கள் உங்களுக்கு காட்டும் அன்பை மதித்து போற்றுங்கள். - ஸ்டீவ் ஜாப் 

நாமும் நம் வாழ்க்கையை அன்பாலும், நட்பாலும், தொண்டாலும் வாழ்ந்து, இறைவனை புகழ்ந்து,  அவரின் வருகைக்காக காத்திருப்போம். 

வாழ்வது ஒருமுறை, வாழ்த்தட்டும் தலைமுறை!!!               

No comments:

Post a Comment

Ads Inside Post