Pages - Menu

Tuesday 3 October 2017

பொதுக்காலம் 27 ஆம் ஞாயிறு A

பொதுக்காலம் 27 ஆம் ஞாயிறு A
08 - 10 -2017
 எசா 5:1-7; பிலி 4:6-9; மத் 21: 33-43;

கொடுக்கப்படவே நலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன

வாட்ஸ் அப்பில் அண்மையில்  ஒரு நிகழ்ச்சி சொல்லப்பட்டிருந்தது. ஒரு பூங்காவில் ஓரிடத்தில் ஒருவர் மிகவும் சோகமாக அமர்ந்திருந்தார். அப்போது ஒருவர் அவரிடம் வந்து, ‘ஏன் இவ்வளவு சோகமாக இருக்கிறீர்கள்?’ என்று கேட்டார். ‘நான் ஒரு தொழிற்சாலை நடத்தி வருகிறேன். இவ்வருடம் 50 கோடி ரூபாய் நஷ்டமாகி  விட்டது. என்ன செய்வது என்று  தெரியவில்லை’ என்றார். ‘கவலைப்பட வேண்டாம். நான் உனக்கு உதவி செய்கிறேன். இதோ ரூ150/‡ கோடிக்கான காசோலை. இதை வைத்து மகிழ்ச்சியாக தொழில் செய். ஆனால் அடுத்த வருடம் இதே நாளில் இங்கு வருவேன். அப்பணத்தை திருப்பி தந்திட வேண்டும்’ என்று ரூ150/‡ கோடிக்கான காசோலையைத் தந்துவிட்டு சென்றார். இவர் புத்துணர்ச்சி பெற்று வீடு திரும்பினார். அந்த காசோலையை பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு, அடுத்த நாள் தன் தொழிலாளர்களை அழைத்து, இந்த ஆண்டு 50 கோடி ரூபாய் நஷ்டமாகி விட்டது. இவ்வாண்டு நாம் கடினமாக உழைத்து,  நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும் என்றார். எனவே அந்த ஆண்டு பெரு முயற்சி எடுத்து உழைத்தனர். 155 கோடி லாபம் கிடைத்தது. எனவே பூங்காவிற்கு பெற்ற காசோலையைத் திருப்பி கொடுக்க சென்றார். அப்போது ஒரு பெண்ணுடன் அவர் வந்தார். ஆனால் திடீரென்று அங்கிருந்து ஓடிவிட்டார். அந்த பெண் மட்டும் வந்தார். அப்பெண்ணிடம், அவர் எங்கே சென்றார்? என்று கேட்டார். அப்பெண், ‘ஏன் அவர் எதுவும் தொந்தரவு கொடுத்து விட்டாரா? அவர் ஒரு பைத்தியம். பார்ப்பவர்களிடம் பழைய காசோலையை கொடுத்து விடுவார்’ என்றார். பணம் இருக்கிறது என்ற நம்பிக்கையில் முயற்சியால் வெற்றி பெற்றார்.

இன்றைய நற்செய்தியில், இயேசு, கடவுள் கொடுக்கும் வரங்களிலிருந்து நாம் பலன்தர வேண்டும் என்கிறார்.  பலன் தராதவர்கள் வெறுமைக்கு ஆளாவார்கள் என்ற கருத்தையும் தருகிறார். எல்லா வசதியும் நிறைந்த  திராட்சைத் தோட்டத்தை குத்தகைக்கு விடுகிறார். பலன்தர வேண்டிய காலத்தில் பலன் பெற்று வர தலைவர் தம் பணியாளர்களை அனுப்புகிறார். குத்தகைகாரர்கள் பலன்தர மறுத்ததோடு, தலைவர் தன் பதிலாளிகளாக அனுப்பிய பணியாளர்களை அவமானப்படுத்தி துன்புறுத்துகின்றனர். கடைசியாக தலைவர் அனுப்பிய அவரின்  மகனையே  கொலை செய்கின்றனர். இஸ்ரயேல் மக்கள், எவ்வாறு கடவுள் தந்த நலன்களை புறக்கணித்தனர், கடவுள் அனுப்பிய இறைவாக்கினர்களையும் அவமதித்தனர். கடைசியாக இறைமகனாகிய இயேசுவையும் கொன்றனர் என்ற இயேசுவின் காலத்தின் நிலவிய சூழலை சுட்டிக் காட்டும் விதமாக இந்த உவமை அமைந்திருந்தது. முதல் வாசகத்தில் இஸ்ரயேல் குலத்தாரே, அவர்களிடமிருந்து நீதி, நேர்மை விளையுமென்று இறைவன் எதிர்பார்த்திருந்தார். ஆனால் விளைந்ததோ, இரத்தப்பழி முறைப்பாடு என்று விளக்கம் கொடுக்கப்படுகிறது.

வாய்ப்புகள் என்ற நதியில்தான் நம் வாழ்க்கைப் படகை செலுத்த வேண்டும். வாய்ப்புகளைக் கண்டு கொள்ளாதவர் வளர முடியாது. உயர முடியாது. தாலந்து உவமையும் (மத் 25:14 - 30). இன்றைய நற்செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள திராட்சைத் தோட்ட உவமைக்கு ஒத்தது என்று சொல்லலாம். கொடுக்கும் தாலந்தை பெருக்கியவர் பாராட்டும் பரிசும் பெறுகின்றனர். பெற்ற தாலந்தை முடக்கி வைத்தவர் கண்டனத்திற்கு ஆளாகின்றார்.

நம் ஒவ்வொருவருக்கும்  பல நலன்கள், திறமைகள் வழங்கப்பட்டுள்ளன. அந்நலன்களைக் கொண்டு பல நலன்களைப் பெருக்க வேண்டும். பெற்ற நலன்களிலிருந்து மற்றவர்களுக்கு நலன்கள் கொடுக்கப்பட வேண்டும். இன்றைய நற்செய்திப்பகுதியில் கூறப்பட்டுள்ளது போல, பலன்களை குத்தகையைப் போல் தர வேண்டும். பெற்ற நலன்களை நமக்குள்ளே முக்கிக் கொள்ளும் இயல்பு நம்மிடையே உள்ளது.

திறமைகளை எப்படி பயன்படுத்துகிறோம்  என்பதில்தான் மகிழ்ச்சி பிறக்கிறது.      - ஹர்மன் ஹஸ்ஸே.

எல்லோரிடமும் திறமைகள் உள்ளன. ஆனால் ஒரு சிலர்தான் வீரத்தோடு அது காட்டும் சவாலான வழியில் நுழைகிறார்கள்  
- எரிகாயுங்.                                      

No comments:

Post a Comment

Ads Inside Post