Pages - Menu

Thursday 5 October 2017

உனக்கு நீயே....

உனக்கு நீயே....

எஸ்.தீபிகா, திருஇருதய ஆண்டவர் செவிலியர் கல்லூரி, குடந்தை.  
 (புதிய எழுத்தாளர் தங்கையின் கன்னி முதற்கதை)

கனிமொழி 12ம் வகுப்பு மாணவி, தொடர்ந்து எல்லா  தேர்வுகளிலும் குறைந்த மதிப்பெண் வாங்குபவள், எப்பொழுதும் சோர்ந்து காணப்படுவாள். தனிமையிலேயே வாழ்பவள். ஒருநாள் வகுப்பு ஆசிரியர் கதிரவன் தமிழ் புத்தகம் யாரேனும் வைத்திருந்தால் தாருங்கள் என்றார். இவளோ தன் புத்தகத்தை கொடுத்தாள். அதன் முதல் பக்கத்திலேயே  ‘எனக்குனு யாருமே இல்ல’ என்று எழுதியிருந்தது. அதைப் பார்த்த ஆசிரியரோ மெல்லியதாய் புன்னகைத்து விட்டு பாடத்திற்குள் சென்றார். நாட்கள் கழிந்தன. அந்த மாத இறுதித் தேர்விலும் கனிமொழி குறைந்த  மதிப்பெண்ணோடு, இரண்டு பாடங்களிலும் தோல்வியுற்றாள் 
(இயற்பியல், வேதியியல்). இரண்டு ஆசிரியர்களும் இவளை கடிந்து கொள்ள தனது கோபத்தை மதிய உணவில் தினம் சாப்பிடாததால் மயங்கி விழுந்தாள் கனி. 

சக மாணவிகள் தமிழ் ஆசிரியரிடம் நடந்ததைக் கூற, அவரோ கனிமொழியை தனது அறைக்கு வரச் சொன்னார். கனி வந்தாள். மதிய வணக்கம் அவள் கூற, நாற்காலியில் அமரச் சொன்னார். தனது ய்யிழிவிவ ல் இருந்து வீeழி யை எடுத்து உற்ஸ்ரீ ல் ஊற்றி அவளிடம் குடி  என்று கூறினார். அவளோ ‘வேண்டாம் சார்’ என்றாள். ‘பரவா இல்ல குடி’ என்றார். அவளும்  குடித்து முடிக்க.  ‘உனக்கு என்னாச்சு ஏன் தமிழ் ணுலிலிவல அப்படி எழுதியிருந்த?’ என்றார். இவளோ என்ன என்பதுபோல் புருவத்தை சுருக்க, ‘ம் எனக்கு யாருமே இல்லனு எழுதியிருந்தல்ல அத பத்திதான் கேட்கிறேன்’ என்றார். ‘உண்மை அதான சார் எனக்குனு  இங்க யாருமே இல்ல, ஒரு நல்ல தோழி கிடையாது, கூட சேர்ந்து படிக்க, விளையாட, சிரிக்க, சாப்பிடனு யாருமே இல்ல சார்’ என்றாள் விரக்தியாய்.  ‘அப்ப இதுதான் உன் பிரச்சனையா?’ என்று அவர் கேட்க, ‘ம், நா தனிமைய உணருரேன் சார். எனக்கு இங்க இருக்க பிடிக்கல, யாரையுமே பிடிக்கல, எனக்கு ஒத்து போற மாதிரி இங்க யாருமில்ல’  என்று நிறைய குறைகள கூறி விட்டு, ‘நான் படிக்காம இருக்கறதுக்கும் இதுதான்  சார் காரணம்’ என்று முடித்தாள் கண்ணீரோடு.  ‘சரி நான் உனக்கு ஒரு வழி சொல்லுறேன். ஒரு வாரம் இத செய், அதன் முடிவுல உன்னோட இந்த யாருமே இல்ல என்கிற உணர்விற்கு பதில் கிடச்சிடும்’ என்று கூறினார். ‘என்ன சார்’என்று அவள் கேட்க, ‘இந்த ஒரு வாரம் முழுவதும் உன்னைச் சுற்றி நடக்கும்   எல்லா வி­யங்களையும் கவனித்துப்பார் உன்னிப்பாக’ என்றார். இவளோ சரி என்று கூறிவிட்டு சென்றாள். 

அதேபோல் ஒவ்வொன்றையும் கவனிக்கத் தொடங்கினாள். தன்னைச் சுற்றி இருக்கும் தோழிகளுக்குள்ளேயே சண்டை, சச்சரவு, மனஸ்தாபம், எரிச்சல், பேசாமல் செல்வது, ஏமாற்றுவது என எல்லாவற்றையும் பார்த்தாள். இவதான் என் உயிர்ததோழி என்று கூறிய ஒரு பெண் இன்று ச்சீ, அவ என்னோட தோழியே கிடையாது என்று தூற்றியதையும் காதாரக் கேட்டாள். மிகவும் மன வருத்ததுடன், அந்தத் தமிழ் புத்தகத்தை எடுத்துக் கொண்டு, தமிழாசிரியரின் அறைக்குச் சென்றாள். ஆசிரியரோ  ‘வாம்மா’, என்றார். அவளோ அவரிடம் தனது புத்தகத்தை நீட்டினாள். அதனை வாங்கி பார்த்தவருக்கு மகிழ்ச்சி. ஏனென்றால் அதில் எனக்கு யாருமே இல்லை என்பதை அடித்து விட்டு அதற்குக் கீழாக ‘உனக்கு நீயே’ என்று எழுதியிருந்தது. ‘என்ன? திடீர் மாற்றம்’ என்று ஆசிரியர் கேட்க, ‘சார் எனக்கு யாரும் வேணாம் சார்’ என்று நிகழ்ந்தவற்றை, கண்டவற்றை, கேட்டவற்றை எல்லாத்தையும் கூறிமுடித்து விட்டு ‘எனக்கு நானே போதும் சார்’ என்று கூறிவிட்டாள். ஆசிரியரோ ‘அப்படி இருப்பது சரிதான் ஆனால் முற்றிலும் துறந்துவிடக்கூடாது. எல்லாரிடமும் சகஜமாகப் பேசிக் கொண்டிரு, ஆனால் யாரையும் நம்பி, அவர்களை சார்ந்து வாழ்ந்து விடாதே’ என்றார்.  கனிமொழியும் வாழ்க்கையை சந்தோ­த்துடன் தொடர்ந்தாள்.
உனக்கு நீயே...
யாரும் உன் அருகில் இல்லையயன்று வருந்தாதே
அனைவரும் உன் அருகில் இருந்து
உன்னை துன்புறுத்தி கொல்வதை விட
யாருமே இல்லாமல் அனாதையாக வாழ்வதே நல்லது.
கண்ணீரைத் துடைக்க யாருமில்லை  என்று கலங்காதே
கண்ணீரைத் துடைக்கும் கரங்களே 
நாளை உன்  கண்ணீருக்கு காரணமாய் நிற்கும்
சாய்ந்து கொள்ள ஒரு மடியும்  அனைத்துக் கொள்ள
இரு கரங்களும் இல்லையே என்று ஏங்காதே
எந்நேரத்தில் விட்டுவிட்டு சென்று 
விடுவார்கள் என்று தெரியாது.
கடைசி வரைக்கும் யாருக்காகவும் ஏங்காதே
உன் கண்ணீரைத் துடைக்க, உன் விரல்களும்
உன் துன்பங்களை நீக்க, உன் தன்னம்பிக்கையும்
உன்னை மகிழ்விக்க, உன் வெற்றியும் காத்திருக்கிறது
தொடர்ந்து போராடு தனி ஆளாக நின்று.

No comments:

Post a Comment

Ads Inside Post