Pages - Menu

Saturday 30 January 2016

இலக்கியம் என்பது காலக் கண்ணாடி

இலக்கியம்
இலக்கியம் என்பது காலக் கண்ணாடி
- அருள்சகோ. விமலி, கும்பகோணம்.

வாழ்வின் இலக்கு, வாழ்வின் இனிமை பற்றிய விளக்கங்களை தங்கள் அனுபவத்தின் வழியாக வழங்குவதுதான் இலக்கியம் எனலாம். நல்ல இலக்கியங்களை படிக்கும் போது படிப்பவர்கள் தலையசைத்து சுவைத்து படிப்பார்கள். ஏனென்றால் வாழ்வினை உண்மையாக இவை படம்படித்து காண்பிக்கின்றன.  போரிஸ் பாஸ்டர் என்பவர், இலக்கியம் என்பதை கீழ்க்காணும் முறையில் விளக்குகிறார்.
‘இலக்கியம் என்பது ஒருகலை. அதில் சாமானியர்களில் புதைந்திருக்கும் அற்புதமான அனுபவங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. அத்தகைய அற்புதங்களை எளிய வார்த்தைகளில் வடித்து அழகாக தருவதுதான், இக்கலையின் நயம்’ என்கிறார் டேஜான் என்பவர். ‘இலக்கியத்தினால் நாம் இறக்கையில்லாமல் பறக்கலாம், கண் திறந்திருக்கும் போதே கனவு காணலாம், இரவிலும் கண்ணால் காணலாம்’ என்று விளக்குகிறார் மேமட் என்பவர். ‘இலக்கியத்தில் மற்றவர்களின் இதயத்தைப் பார்க்கலாம். இதனால் நம் வாழ்வை மேன்மைப்படுத்தி உயர்த்திக் கொள்ளலாம்’ என்கிறார். பிப்ரவரி மாதம் இலக்கிய மாதம் என்று அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. இலக்கியம் என்ற தொகுப்பில், எழுதப்பட்ட நூற்கள். எல்லா வித ஊடகங்களும் அடங்கும். தமிழில் இலக்கியத் தொகுப்பு மிகவும் தொன்மை வாய்ந்தது. கி. மு. 6ஆம் நூற்றாண்டிலேயே எழுதப்பட்டதாகக் கருதப்படும். தொல்காப்பியம் முதல் இன்று வரை ஆயிரக்கணக்கான நூல்கள் எழுதப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன. படிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது எனலாம். ஊடகங்கள் வழியாக மக்கள் பார்த்தும், கேட்டும் செய்திகளை உடனுக்குடன் பெற்று வருகின்றனர். இருப்பினும் அழகிய நூல்கள், புதையல்கள். படிப்பதற்கு நேரத்தை ஒதுக்கி வைத்து நூற்களை கற்கலாம். எழுத்தாளர்கள் ஒருவிதத்தில் தியாகிகள் என்று கூறவேண்டும். பெரும்பாலான எழுத்தாளர்கள் வறுமையில் வாழ்பவர்களாக விளங்குகிறார்கள். பழம்காலத்திலும் புலவர்கள் வறுமையில்தான் வாழ்ந்திருக்கின்றனர். இந்த பாரம்பரியம் தொடர்கிறதோ என்னவோ? இருப்பினும். ஆர்வத்தோடு, தங்களின் அனுபவ பொக்கி­ங்களை மக்களுக்கு தெரிவிக்க முன்வருகிறார்கள். இலக்கியங்களை புறந்தள்ளாமல் அகத்தில் ஏற்று மகிழ்ந்து, வாழ்வின் பயனைப் பெறுவோம்.

No comments:

Post a Comment

Ads Inside Post