Pages - Menu

Sunday 20 August 2017

ஆண்டின் பொதுக்காலம் 21 ஆம் ஞாயிறு, அருட்பணி. மரிய அந்தோனி ஜேம்ஸ், குடந்தை

ஆண்டின் பொதுக்காலம் 21 ஆம் ஞாயிறு
27-08-2017
  எசா 22:19-23;   உரோ 11: 33-36; மத் 16: 13-20

அருட்பணி. மரிய அந்தோனி ஜேம்ஸ், குடந்தை 


இன்றைய அருள் வாக்குகள் நமக்கு கொடுக்கும் செய்தி ‘அறிவின் செயல்பாடுகளை விட அனுபவங்களின் வெளிப்பாடே சிறந்தது’ என்பதாகும். நற்செய்தி வாசகத்தின் மூலமாக இயேசு கூறுகிறார்.
“நான் யார்?”  என்ற கேள்விக்கு  எத்தனை ஆண்டுகள், யுகங்கள் ஆனாலும் தன்னையே முழுமையாக ஒருவர் அறிந்துள்ளார்  என்பது உறுதியாக கூற இயலாத ஒன்று.  தான் எங்கு சென்றாலும் தன்னோடு அழைத்துச் சென்று, இறையரசின் பணிகளை செய்து, அனைத்து தருணங்களிலும், தன் பணியை தொடர்ந்து ஆற்ற தன் சீடர்களை அழைத்த  இயேசு கேட்டது. “நான் யார்?”  என்று. (விப 3:14) ‘நாமே இருக்கிறவர்’ என்று எக்காலத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று பழைய ஏற்பாட்டிலே இஸ்ராயேல் மக்களுக்கு உணர்த்தப்பட்ட இறைவன், புதிய ஏற்பாட்டிலே. ‘நானே உலகின் ஒளி’ (யோவா 8:12), ‘நானே நல்ல ஆயன்’ (யோவா 10:11), ‘உயிர்ப்பும், உயிரும் நானே’ (யோவா 3:35), என்று இயேசு வெளிப்படுத்தினார், தன்னை முழுமையாக அறிந்திருந்த  இயேசு, தன் சீடர்களிடம் கேட்டது “நான் யார்?” என்று . ஆனால் இன்றைய கால உளவியல் தத்துவத்தின்படி, எந்தவொரு செயலிலும் தன்னை முதன்மைப்படுத்தாதவர்  மனநோய்   (ணூdeஐdஷ்மிதீ உrஷ்விஷ்வி) உள்ளவரோ என்று இயேசுவை நினைத்துப் பார்க்கவும், மற்றவர்களின்  விமர்சனங்களை கண்டு அஞ்சி, மனம்  வருந்துபவர் போன்று, மக்கள் என்னை யாரென்று கூறுகிறார்கள் என்று இயேசு கேட்டறிகிறார்.

 இறைவாக்கினர்களுக்கெல்லாம் மேலானவர்:

மக்களின் எதிர்பார்ப்பெல்லாம் தங்களை துன்பங்களிலிருந்து விடுவிக்க ஒரு மெசியா வருவார் என்பது  (தானி 7: 13). வானத்தின் மேகங்களிலிருந்து மானிட மகன் வருவார் என்று எசாயாவும்  கூறினார். நம்பிக்கையிலும், (எசா42:53) மற்ற இறைவாக்கினர்களும் மெசியா வருகையைப் பற்றிக் கூறினார்.ஆனால், இயேசு இறைவாக்கினர்க் களியயல்லாம் மேலான இறைமகன் என்பதை உணர்த்தவே, இயேசு இக்கேள்விகளை எழுப்பினார் எனவும் விவிலிய அறிஞர்கள் கூறுவர். மக்கள் கூறுவதை அறிந்திருந்த  சீடர்கள் அறிவின் வெளிப்பாடுகள் அல்லாமல் நீங்கள் அனுபவபூர்வமாக  என்னை யாரென்று கூறுகிறீர்கள் என்று சீடர்களிடம் இயேசு கேட்டதற்கு, பேதுரு இயேசுவோடு தான் பெற்ற அனுபவங்களின் வாயிலாக “ நீர் மெசியா வாழும் கடவுளின் மகன்” என்று  அனுபவ அறிக்கையிடுகிறார்
.
 அனுபவங்களின் பிரதிபலிப்பே கடவுள்:

ஒரு இளைஞனுக்கு கடவுள் நல்லவரா? கெட்டவரா? என்று அறிவுப்பூர்வமாக அறிய ஆவல். ஒரு முனிவரை அணுகினான். முனிவர் அவனைப் பார்த்து, நீ  பார்க்கின்ற மனிதர்கள், விலங்குகள் அனைவரிடமும் இக்கேள்வியை கேட்டுப் பார் என்றார். முதலில் சந்தித்த பூனை என் பல் நல்லதா? கெட்டதா? என்று கூறினால், கடவுளைப் பற்றி கூறுவேன் என்றது. அவனுக்கு பதில்  கூற முடியவில்லை. ஆகவே, பூனை நீ சென்று என் குட்டியிடமும், எலியிடமும் இதே கேள்வியை கேட்டு வா என்றது, பூனைக்குட்டியை அவன்  அனுகியபோது, என் தாயின் பல் பஞ்சு போன்றது. காரணம் என்னை தூக்கி செல்கையில் வலி தெரியாது தூக்கிச் செல்லும் என்றது. எலியிடம் சென்று கேட்டபோது, பூனையின் பல் பசாசு போன்றது. என்னைக் கண்டால் குதறிவிடும் என்றது. ஆக, இதிலிருந்து அவன் தெரிந்து கொண்டது  கடவுள் நல்லவரா, கெட்டவரா என்பது அறிவினால் அன்று அனுபவங்களாலே அறிய இயலும் என்பது தான். 

        அதுபோன்று, இரண்டாம் வாசகத்தில் தூய பவுல்  ‘அனைத்தையும் அறிந்த, உலகம் உருவாகக் காரணமான. அறிவிற்கெல்லாம் ஊற்றாகிய இறைவன்’ , என்கிறார்.  இயேசு, பேதுருவிடம் கேட்டபோது அவரும் அனுபவ ரீதியாக பதில் கூறுகின்றார். காரணம், யாயிர் மகள் உயிர்பெற்றபோது (மாற் 5:37), இயேசுவின் உருமாற்றம் (மாற் 9:2), நிறைவுகாலப் பொழிவு (மத் 24: 1‡2), மற்றும் கெத்சமெனியில் இயேசு இரத்த  வியர்வை வியர்த்தல் (மாற் 14:33‡37) போன்ற முக்கிய நிகழ்வுகளிலெல்லாம் பேதுரு இயேசுவை அனுபவப்பூர்வமாக சந்தித்திருந்தார் . அந்த அனுபவத்தின் பிரதிபலிப்பாகத்தான், ‘நீர் மெசியா, என்றும் வாழும் கடவுளின் மகன்’  என்றும் எடுத்துரைக்கிறார். அந்த அனுபவத்தின் பரிசாக இயேசு, இந்த அனுபவப்  பாறை மீது தன் திருச்சபையை எழுப்பி, விண்ணகத்தின்  திறவுகோல் வழங்கி, திருச்சபையை வழிநடத்த பொறுப்பு தந்தார். இதனை முதல் வாசகப் பகுதி பிரதிபலிக்கிறது.   தூய பேதுருவை மாதிரிகையாய் முன்வைத்து, இவ்வாரத்தின் திருவழிபாடுகள் நமக்கு உணர்த்தும் செய்தி, உலகம் நம்மை என்ன தான் விமர்சனங்கள் செய்தாலும், நம்மை புரிந்து கொள்ளாவிட்டாலும், நான் யார் என்பதை அறிந்து, நான் கிறிஸ்துவை சார்ந்தவன், இயேசு என்னோடு இருக்கிறார் (நிஜுலி ணூ ழிது?  நிஜுலிவிe ழிது ணூ?)  நான் ஏதோ இந்த உலகத்தில் தவறுதலாகப் பிறந்து விடவில்லை, மாறாக இறைதிட்டத்தால் இயேசுவால் அறியப்பட்டு முன்குறிக்கப்பட்டு  இந்த உலகத்தில் பிறந்திருக்கிறேன் என்றும், இயேசுவை அனுபவித்து மற்றவர்களுக்கு அந்த அனுபவத்தை வழங்கக் கூடியவர்களாய் வாழ அழைப்பு விடுக்கிறது. 

(2 சாமு 7:18)  இல் தாவீது அரசர், ஆண்டவரின் சந்நிதியில் அமர்ந்து, ஆண்டவரே உம்மால் நினைவுகூறப்படுவதற்கு நான் யார்? என்று ஆண்டவரின் அருளை நினைத்துப் போற்றுவது போல் , இயேசுவைப்பற்றிய நமது உண்மையான தனிப்பட்ட அனுபவ அறிவு யாதென கண்டுணர்ந்து, நாளும் நம்மைக் காத்து வரும் தேவனிடத்தில் நமது முழு நம்பிக்கையை வைத்து,  அவரைப் போற்றுவோம். இறை அனுபவம் பெற்று, இயேசுவின் ஆசிர்வாதங்களை நம் குடும்பங்களுக்கும் நம்மை சந்திப்பவர்களுக்கும் பெற்றுத் தருவோம்.

No comments:

Post a Comment

Ads Inside Post