Pages - Menu

Sunday 30 October 2016

BRICS - ஒருங்கிணைப்பும் இந்தியாவில் நிலையும்

BRICS - ஒருங்கிணைப்பும் இந்தியாவில் நிலையும்

(பொருளாதார விளக்கக் கட்டுரை)

 முனைவர். மனுவேல் ஜுலியஸ் சீசர், 
கலைப்புலத் தலைவர், தூய சவேரியார் கல்லூரி,

2001ஆம் ஆண்டு ஜிம் ஓ நில் என்ற பொருளாதார வல்லுநர் பிரேசில், சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா (BRICS) ஆகிய நாடுகள் தங்களின் திறன் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் காரணமாக பிற வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் பொருளாதாரத்தில் முன்னிலையில் வளரும் என்று ஆய்வு மூலமாக அறிவுறுத்தியதன் காரணமாகவும், இந்த நான்கு நாடுகளின் அயல்நாட்டு மந்திரிகள் 2006ஆம் ஆண்டு சந்திப்பின் காரணமாகவும் ஓர் ஒருங்கிணைப்பு ஏற்பட்டது.
2008ஆம் ஆண்டு உலக பொருளாதார மந்த நிலை ஏற்பட்டதன் காரணமாக அமெரிக்கா மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகள் பெறும் பொருளாதார நிலை ஆரோக்கியமான சூழ்நிலையில் இருந்ததன் காரணமாக ஒருங்கிணைப்பு வலுப்பெற்றது.

2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் BRICS நாடுகளின் நிதியமைச்சர்களின் முதல் மாநாடு பிரேசிலில் நடைபெற்றது. இம்மாநாட்டில் நிதி சார்ந்த பிரச்சனைகளில் ஒருங்கிணைந்து செயல்பட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் ஒவ்வொரு ஆண்டும், கொள்கை அடிப்படையில் பேராயம் நடத்துவதெனவும், அதன் பொறுப்பை சுழற்சி முறையில் BRICS நாடுகள் ஏற்றுக்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது. 2009ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்றது. 2010ஆம் ஆண்டு பிரேசிலில் நடந்த இரண்டாவது மாநாட்டில், BRICS கூட்டமைப்பில் ஓர் அங்கமாகும்படி தென் ஆப்பிரிக்காவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி ஒருங்கிணைப்பு BRICS  ஒருங்கிணைப்பாக உருப்பெற்றது. 

நம்நாட்டில் தற்போது, BRICS 8வது பேராயம் கோவாவில் அக்டோபர் மாதம் 15-16 தேதிகளில் நடைபெற்றது.

இந்த 5 நாடுகள் :
$ உலகில் உள்ள 42% மக்கள் தொகையை உள்ளடக்கியது.

$ உலக மொத்த உற்பத்தியில் 20% சதவீத உற்பத்தியை செய்யக்கூடியவை.

$ BRICS என்றால் ‡  Brasil, Russia, India, China and South Africa.

$  New Vision - Building Responsive, Inclusive and Collective Solutions (BRICS)   
  
$ பொருளாதார ஒருங்கிணைப்பு விஸ்தரிக்கப்பட்டு கல்வி, கலாச்சாரம், கட்டமைப்பு, வேலைவாய்ப்பு,   ஒருங்கிணைப்பு, ஆராய்ச்சி போன்றவற்றில் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது.

$ முதலீடு செய்ய திறம் பெற்றவை மற்றும் அதிகபடியான நுகர்வோரை கொண்டவை.

  வலுப்பெற்ற இந்த ஒருங்கிணைப்பு வரலாறாக மாறும். அந்த வரலாறு BRICS நாடுகளை வல்லரசாக உருமாற்றும்.

  தேச நலனையும், உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகப்படுத்தும் நோக்கோடு செயல்படும் இந்தியா வல்லரசாக  மாற வாழ்த்துவோம், வளர்ச்சிக்குத் துணை நிற்போம்.

No comments:

Post a Comment

Ads Inside Post