Pages - Menu

Sunday 30 October 2016

மூச்சுதான் இடைவெளி, அமெரிக்கக் கடிதம், - சவரி, கேரி, வடகரோலினா

அமெரிக்கக் கடிதம்

- சவரி, கேரி, வடகரோலினா

மூச்சுதான் இடைவெளி

இந்த வாரம் உங்களுடன் அமெரிக்காவில் நடத்தப்படும்  இறுதி ஈமச் சடங்குகளை பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இங்கு இறுதி சடங்கிற்கு திருமணத்தைப் போல நிறைய செலவு செய்கிறார்கள். கல்விக்கும், வீடு கட்டுவதற்கும் பணம் சேர்ப்பது போல, தங்கள் இறுதி சடங்குகளுக்கும் பணம் சேர்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஒருவர் இறந்தவுடன், உள்ளுறுப்புகளை நீக்கி பதப்படுத்தும் நிறுவனங்கள் உடலை எடுத்துச் சென்று விடுகின்றன. ஒரு வார காலம் உடலை பாதுகாக்கிறார்கள். ஒரு வாரம் கழித்து வெளியூரில் எல்லா உறவினர்களையும் வரவழைத்து இறுதி சடங்கு திருப்பலி நிறைவேற்றி அடக்கம் செய்கிறார்கள். இறுதி சடங்கிற்கு அனைவரும் திருமணத்திற்கு வருவது போல் சூட் அணிந்து க்ஷூலிrதுழியி உடையில் வருகிறார்கள். வாய் விட்டு அழுவதில்லை. எனக்கு நம் நாட்டு இறுதி சடங்கு முறை தான் பிடித்து உள்ளது. நாம் வாய் விட்டு அழுதுவிடுகிறோம். அதனால் நம் சோகங்களை விரைவாக மறக்கிறோம்.

நவம்பர் 2- ஆம் தேதி கல்லறை திருவிழாவை இங்கு மிக சிறப்பாக கொண்டாடுவதில்லை. நாம் மிக சிறப்பாக இறந்தவர்களை நினைவு கூறுகிறோம். நமது பாரம்பரியம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இதை நம்மிடமிருந்து அமெரிக்கர்கள் கற்றுக் கொள்ள வேண்டுமென்பது என்னுடைய விருப்பம்.

நமது கல்லறைகள் நமக்கு புகுத்தும் பாடங்கள் பல. நாம் எவ்வளவு செல்வம் சேர்த்தாலும், நமக்குப் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் நாம் கல்லறைக்குத்தான் கடைசியில் வரப்போகின்றோம். நமது வாழ்வுக்கும், சாவுக்கும் ஒரு மூச்சு தான் இடைவெளி. இதை அறிந்து இறைவன் கொடுத்துள்ள இந்த குறுகிய வாழ்வில் நம் வெறுப்புகளையும்,  நமது  கெட்டப் பழக்கங்களையும் விட்டு அகன்று, நாம் பயனுள்ள வாழ்வை வாழ்ந்து, இறைவனை சந்திக்க எப்போதும் தயாராக இருப்போம்.

No comments:

Post a Comment

Ads Inside Post