Pages - Menu

Tuesday 20 June 2017

கல்வியே வெல்லும்.


கல்வியே வெல்லும்

2002 ஆம் ஆண்டு எனக்கு ஓர் அரிய வாய்ப்பு கிடைத்தது. அமெரிக்காவில் மிக்சிகன் மாநிலத்தில் அன் ஆர்பர் என்ற பங்கில் மூன்று மாதங்கள் பணிசெய்தேன். அவ்வூரில் ஐந்து பல்கலைகழகங்கள் உள்ளன. அப்பங்கிலுள்ள நடுநிலைப்பள்ளியில் சில நாட்கள், மறைகல்வி வகுப்புக்கள் எடுத்தேன். இளம் மாணவர்கள் நிறையக் கேள்விகள் கேட்டார்கள். அதற்கு நான் கொடுத்த பதில்களே பாடமாக அமைந்தன. அதேபோல பெண்களுக்கு விவிலிய வகுப்புக்கள் எடுத்தேன். அங்கும் கேள்வி‡பதில் முறையில்தான் விளக்கங்கள் அமைந்திருந்தன. 
பவலோ பார்ரே என்பவர் கூறுவார், ‘கேள்வி எழுப்பதே கற்றலின் தொடக்கம்’ என்பார். 12 ஆம் வகுப்பு மாணவரைப் பார்த்து ‘டெல்லியின் முக்கயத்துவம் என்ன?’ என்று கேட்டதற்கு, அவனுக்கு பதில் தெரியவில்லை. ஆனால் ‘இந்தியாவின் தலைநகர் எது?’ என்று கேட்டதற்கு டெல்லி என்று பதில் கொடுத்துவிட்டார். இந்நிகழ்ச்சி மாணவர் மனப்பாடம் செய்கின்றனர்,  ஆனால் புரிந்து படிப்பதில்லை என்பதை உணர்த்துகிறது.
மாணவர்களின் மனநிலைப் போக்கினை மனதில்கொண்டு மாணவர்களை பயிற்றுவிக்க வேண்டும். பதின்ம வயதினரின் மனப்போக்கு சற்று வித்தியாசமானது. அவர்கள்தான் மேல்நிலைப் பள்ளிகளிலும் கல்லுரிகளிலும் பயில்கிறார்கள். நம்நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் மாணவர்கள் புதியவைகளை உருவாக்குகிறார்கள். மாணவர்களின் வளர்ச்சிதான் நாட்டின் வளர்ச்சி. 

தானியார்ப் பள்ளி நிறுவனங்கள், மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவதை முன்வைத்து, தங்களை பெருமைக்கரிய நிறுவனங்களாக காட்சிப் படுத்துகின்றன. பொதுவாக,  பணம் இருக்கும் இடத்தில் பண்புகள் வளர்வதில்லை. பெரும்பாலும் தனியார் பள்ளிகளில்,  வசதி உள்ளவர்களின் பிள்ளைகள் படிக்கிறார்கள். பணத்தினால் ஆடம்பரங்கள், சொகுசுகள் பெருகுகின்றன. உழைப்பு, பணிவு, உறவு ஆகிய பண்புகள் அங்கு மறைகின்றன.  அண்மையில் ஒரு மாவட்ட ஆட்சியர் தன் பிள்ளையை அரசினர் பள்ளியில் சேர்த்து படிக்கவைத்திருக்கிறார். தற்போது பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பலர் போதை பழக்கத்திற்கு அடிமையாயிருக்கிறார்கள்.
கல்வி என்பது பண்புகளின் வளர்ப்புத் தாய்’ என்கிறார் வில்லியம் பர்ரோஸ்.

சான்றிதழ் பெறுவதற்காக கற்பது கலவி அல்ல. முழு மனிதராக வளர்வதற்கே கற்பது கல்வியாகும்.

திருச்சபை கல்விப்பணியை நற்செய்திப் பணியாக செய்து வருகிறது. தற்போது ஆங்கில வழிகல்வி பள்ளிகளுகளுக்கே  தங்கள் பிள்ளைகளை தமிழக மக்கள் அனுப்பிக்கொண்டிருக்கறார்கள். திருச்சபை நடத்தும் பள்ளிகளில் பிள்ளைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. குடந்தை மறைமாவட்டத்தில், மறைமாவட்டம் நடத்தும் பள்ளிகள் 123. இவைகளில் 1506 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். இவைத் தவிர துறவர சபைகள் நடத்தும் பள்ளிகள் உள்ளன. சுமார் 30000 மாணவ மாணவியர் நம் பள்ளிகளில் பயில்கின்றனர்.

கல்லாதவரின் கண்கள் வெரும் புண்களே என்கிறார் வள்ளுவர். இவ்விதழில் கல்வியைப் பற்றிய பல கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. கல்வியைப் பலக் கோணங்களில் இவை விளக்குகின்றன. பிள்ளைகளின் முழுவளர்ச்சியை மனதில் வைத்து கல்வியின் ஒளி தரப்பட வேண்டும்.

குழம்பியுள்ள தமிழக அரசியலைத் தனக்கு சாதகமாக மத்தியஅரசு முயல்கிறது. வெளிப்படையாக பொதுக்கூட்டங்களில் தமிழக அரசை சாடுவதும் , பல வழிகளில் அரசை பயமுறுத்தியும் மத்திய அரசு செயல்படுவதை காணமுடிகிறது. தமிழகத்தில் ஆங்காங்கே ஏரிகள் துVர்வாரப்படுவதை பார்க்கும்போது ஆறுதலா -யிருக்கிறது. ஆனால் மணல் குவாரிகள் மீண்டும் திறக்கப்பட்டு, இயற்கையின் கொடை அழிக்கப்படுவதை பார்க்கும்போது மனம் கொதிக்கிறது. எம் மணல் என்ற புதிய வழிகளைப் பயன்படுத்தி  

ஆறுகளில் மணல் அள்ளப்படுவது சுத்தமாக நிறுத்தப்பட வேண்டும். கருவவேலி மரங்கள் அகற்றப்படுவதும் சிறந்தப் பணி. தற்போது தமிழக மக்கள் விழிப்பாயிருந்து நல்லத் தலைவர்களை உருவாக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Ads Inside Post