Pages - Menu

Wednesday 28 June 2017

இளையோரும் இன்றைய கல்வியும்

இளையோரும் இன்றைய கல்வியும்

- அருட்சகோ. விமலிFIHM, 
இதயா மகளிர் கல்லூரி, கும்பகோணம்
உண்மையான கல்வி
 மனிதனுக்குள் இருக்கும்
 மனிதத்தைத் தட்டி எழுப்புவதாக
இருக்க வேண்டும்.           - சுவாமி விவேகானந்தர்.
 
2017-2018-ஆம் இக்கல்வியாண்டு இனிதே  அமைய இறைவன் அருள்புரிவாராக. தேர்வு முடிவுகளும் வந்து விட்டன. எதைப்படிக்கலாம், எங்குப் படிக்கலாம் எந்தப் பள்ளியில், கல்லூரியில் எந்தப் பாடப் பிரிவில் பயின்றால் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்பது இன்றைய, மாணாக்கர் மற்றும் பெற்றோரின் ஏக்கம். “உலகை மாற்றக்கூடிய மிகவும் சக்தி வாய்ந்த கருவி”  என்று கல்வியைப் போற்றுகிறார் நெல்சன் மண்டேலா. அந்தக் கருவியைப் பயன்படுத்தும் முன் அதைக் கூர்மையாக்கும் முயற்சிதான் இந்தக் கருத்துப் பரிமாற்றம்.  ஜீன் மாதம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. பலருக்கு புதிய இடம், புதிய ஆசிரியர்கள், புதிய நண்பர்கள், புதிய சூழமைவுகளைப் பார்த்தால் அவர்களின் பலவிதமான உணர்வுகளை நம்மால் கண்டுணர முடிகிறது. சிலர் வருத்தத்துடன், மேலும் சிலர் புத்துணர்வு கலந்த நம்பிக்கையுடன், இப்படிப்பட்ட பலவிதமான உணர்வுகளுக்கு உரிமையாளர்களாக மாணாக்கர்கள் காட்சி அளிக்கின்றனர்.  

          கல்வி இன்றியமையாதது என்பதை வளரிளம் பருவத்துப் பள்ளி மாணாக்கர்கள் உணர வேண்டும். வெறுமனே தகவல்களை மூளையில் அடுக்கி வைத்து அது செரிக்காமல், அழுகிப் போகவிடுவது கல்வி அல்ல! வாழ்க்கையைக் கட்டமைக்கவும், சிந்தனைகளை உள்வாங்கிச் சீர்தூக்கிப் பார்க்க உதவுவதாகவும் இருப்பதே உண்மையான கல்வி! வாழ்க்கையோடு போராடி வெற்றி பெற மாணவர்களுக்குக் கற்றுத் தராத, அவர்களின் குணத்தை வளப்படுத்தாத, மனித நேயத்தைப் போதிக்காத, தூய்மையான துணிச்சலைக் கற்றுத்தராத கல்வி  கல்வியும் அல்ல!. சமூக வாழ்விலும் சந்திக்கும் சவால்களைச் சமாளித்து சாதனை படைக்கும் கல்வித் திறனும், உடல் மற்றும் மனபலம் கொண்டவர்களாக இன்றைய மாணாக்கர்களை உருவாக     அன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே மாணாக்கர்களே! அப்போதே நீ ஜெயித்தாய். கோடிக்கனக்கான விந்தனுக்களில் வீரியம் உள்ள விந்தணுவே கருவாகின்றது. பிறக்கின்ற ஒவ்வொரு உயிரும் வெற்றி பெற்றனவே. பிறப்பிலேயே வென்ற உயிர் நீ. பிறந்த பின் ஏற்படும் தோல்விகள் அந்த வெற்றிக்கு முன் சாதாரணமானவையே என்ற பொருளைத் தருகின்றது இப்பாடல் இன்றைய இளையோரை இன்னும் சிறப்பானவர்களாக்கும் உந்து சக்தியும் இதுவே.

விதைக்குள் தூங்கும் ஆலமரம்
கண்ணுக்குத்   தெரியாது
அது  மரமாய் வளரும் காலம்வரும்
 மண்ணுக்குள் உறங்காது.”

  கடந்த ஆண்டில் சென்னையில் மட்டும் பல மாணவர்கள் உயிரை  ஒடுக்கிக் கொண்டனர். இவர்களில் சிலர் படிப்பு சம்பந்தமாகவும், பெற்றோர்களிமிருந்துள்ள மனசம்பதமான கொடுமை மூலமாகவும் உயிர் நீத்தனர் என்று சமூக வளைய தளம் தெரிவிக்கின்றது. தற்கொலை செய்த  நபர்களில் அதிகமானவர்கள் கல்லூரி மாணவர்களும், பள்ளி மாணவர்களும் உள்ளடங்கியுள்ளனர். படிப்பில் பின் தங்கி ‡யிருக்கிறார்கள் என்னும் காரணத்தால் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கண்டிப்பதில் மனம் உடைந்துதான் பலரும் தற்கொலை வழியைப் பின்பற்றுகின்றனர் என்ற செய்திகளை ஊடகம் உடனுக்குடன் தெரிவித்துக் கொண்டுதான் இருக்கின்றது.

கல்வி என்பது 
திணிக்கத் திணிக்கத் திசைமாறிப் போகும்
வற்புறுத்த வற்புறுத்த வழிநழுவிச் செல்லும்
அது இயல்பாக நிகழவேண்டும்”  - இறையன்பு
          
  உங்கள் மேல் நம்பிக்கை வையுங்கள். உங்களை நேசியுங்கள். உங்களின் வாழ்வின் மீது பற்றுக் கொள்ளுங்கள். உங்கள் மீது நம்பிக்கை வைத்தால் எத்தனை முறை வீழ்ந்தாலும், எழுந்து நிற்கும் சக்தியும் தெம்பும் தானாகவே உங்களுக்கு வந்து சேரும். எந்த முடிவெடுக்கும் முன்னும் உங்களின் வளர்ச்சியின் பின்னே இருக்கும் நபர்களை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அந்த முகங்களின் பின்னே தெரியும் உழைப்பும், களைப்பும், வலியும், உற்சாகமும், ஆர்வமும் உங்களுக்கு எப்போதும் நினைவில் இருக்க வேண்டும்.  இப்படிப்பட்ட பிணைப்புக்களின் மூலம்தான் உங்களை நீங்கள் தோல்விகளிலிருந்து மீண்டும் மீண்டும் உயிர்ப்பித்துக் கொள்ள முடியும்.

      மனித வாழ்வுக்குப் பட்டறிவும், படிப்பறிவும் மிக உறுதுணையாக இருக்கின்றன. படிப்பறிவு என்பது கல்வி கற்பதின் மூலமாகவும், பட்டறிவு என்பது மனித அனுபவம் மூலமாகவும் நமக்குக் கிடைக்கின்றன. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று பார்க்கும்போது பாரதூர வித்தியாசங்கள் இருக்கின்றன. இன்றையச் சூழலில் கல்வியும், பணமும்  கைகோர்த்தே செல்கின்றன. பணம் இருப்பவர் மட்டுமே படிக்க முடிகிறது. இப்போது பணம் கட்டினால் படிப்பு (றீeயிக்ஷூ-க்ஷூஷ்ஐழிஐஉed உலிற்rவிeவி)  என்ற நிலை எல்லா கல்லூரிகளிலும் உருவாகியுள்ளன. இன்றைய நிலையில், பெரும்பாலும் படித்த படிப்பு வேறு, பார்க்கும் தொழில் வேறு என்றுதான் இருக்கிறது. எத்தனை உயர்கல்வி  நிறுவனங்கள் இருந்தும் ஆண்டுதோறும் எண்ணற்ற இளையோர் பட்டம் பெற்று வேலை தேடி அலைகின்றனர். படிக்கும் கல்வி மூளைக்கு மட்டும் தாக்கம் கொடுத்தால் போதாது. இதயத்திற்கும் தாக்கத்தைக் கொடுக்க வேண்டும்.

விழிப்புணர்வுக் கல்வி
     விழிப்புணர்வுக் கல்வி என்பது வழக்கமாக மாணவ - மாணவியர் பெறுகின்ற கல்வியில்  இருந்து மாறுபட்டது. ஏனெனில் இக்கல்வி நாம் வாழும் சமூகத்தை அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு, சமய, கல்வி மற்றும் நலவாழ்வு ரீதியாக  பகுப்பாய்வு செய்து பார்க்க உதவுகிறது. இத்தகைய பகுப்பாய்வு சமூக உண்மை நிலைகளை நமக்குப் படம் பிடித்துக் காட்டுவதோடு, சமூக மாற்றத்திற்கு நாம் என்னென்ன முடிவுகளை எடுத்துச் செயல்பட வேண்டும் என்பதையும் நமக்கு தெளிவுபடுத்துகிறது. இன்றைய நம் நாட்டுச் சூழலில் விழிப்புணர்வுக் கல்வி எல்லா மாணவ‡மாணவியருக்கும் வழங்கப்பட வேண்டிய இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது.

ஒரு மனிதரிடம் தேங்கிக் கிடக்கின்ற
ஆற்றல்கள், திறமைகள், நம்பிக்கைகள் அனைத்தையும் உணரவைத்து வெளிக் கொணர்வதே  உண்மையான கல்வியாகும் ”
 -இறையன்பு

No comments:

Post a Comment

Ads Inside Post