Pages - Menu

Friday 2 December 2016

நான் எழுத்தாளன் ஆனேன்

நான் எழுத்தாளன் ஆனேன்

- லெயோ ஜோசப், திருச்சி

14. எழுத்தாளனாக கலைக்காவிரிக்குள் நுழைந்தேன்; கவிஞனாக

நீங்க இங்க வந்துடுங்களேன் என்றார் ஃபாதர் ஜார்ஜ் ஒரு நாள். எனக்கும் ஆசைதான். அன்றிரவே சென்னைக்குப் புறப்பட்டேன். மறு நாள் மாலை முரசு அலுவலகத்தில் இருந்தேன். திரு.இராமச்சந்திர ஆதித்தனைச் சந்தித்தேன். நீங்க நல்ல இடத்துக்கு போவது எனக்கு சந்தோ­ம்தான். போங்க, மேனேஜர்கிட்ட சொல்றேன் என்றார்.
மாலை முரசுக்கு வந்தேன். ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். 1998‡இல் கலைக்காவிரியில் சேர்ந்தேன். அப்போதிருந்து அங்கு நான் வேலை பார்த்த 6 ஆண்டுகளும் வானொலிக்காக பாடல் எழுதுவது நான்தான். நான் பாடல் எழுதும்போது, ஒரு சஸ்பென்ஸ் வைத்து பாடலின் கடைசியில் சஸ்பென்ஸை உடைப்பேன். பாடல்களை எழுதி ஃபாதர் ஜார்ஜ் இல்லாத நேரமாகப் பார்த்து அவரது மேஜைமேல் வைத்துவிட்டு வந்து விடுவேன். ஒரு நாள் என்னைக் கூப்பிட்டனுப்பினார். என்ன பாட்டு எழுதியிருக்கீங்க? பல்லவி முடிஞ்சு அனுபல்லவி வரும்போது, பாட்டைக் கேட்கிறவன் பல்லவியை மறந்து விடுவான். சரணம் வரும்போது அனுபல்லவியை மறந்து விடுவான். அப்புறம் எப்படி உங்க பாட்டு மனசில நிற்கும்?
ஒரு கருத்தை எடுத்துக்கிட்டா அதையே டெவலப் பண்ணிக்கிட்டுப் போகனும். பல்லவியிலிருந்து அனுபல்லவி; அனுபல்லவியிலிருந்து சரணம் இப்படி டெவலப் பண்ணிக்கிட்டே போவனும் என்றார். அவர் பாட்டெழுத மாட்டார். ஆனால், ஒரு பாடல் எப்படி இருக்க வேண்டும் என்று தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தார். அதுதான் தலைமைப் பண்பு.
அதன் பிறகு மெஸேஜுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடல் எழுதத் தொடங்கினேன். யாருக்கு எவ்வளவு சம்பளம் கொடுப்பது என்ற பிரச்சனை எழுந்தது. அதற்காக ஒரு மீட்டிங் போடப்பட்டது. அட்மினிஸ்டேசனைச் சேர்ந்தவர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். வெளியில் நாலு இடங்களுக்குப் போகறவன் என்பதால் சம்பள விகிதங்களைத் தெரிந்து வைத்திருப்பேன் என்பதால் என்னையும் சேர்த்துக் கொண்டார்கள்.
ஃபாதர். ஜார்ஜ்தான் சம்பளங்களை முடிவு செய்தார். டெக்னீ´யனுக்கு 1000 ரூபாய், அவரவர் வேலைக்கு ஏற்றபடி சம்பளங்களை முடிவு செய்தார். என்னை ஒன்றும் கேட்கவே இல்லை. கடைசியில் லியோ ஜோசப்புக்கு 600 ரூபாய் என்று கூறிவிட்டு எழுந்து விட்டார். அது மிகவும் குறைச்சல் என்பது எனக்குத் தெரியும். ஆனால், ஒன்றும் பேசவில்லை.
அதற்குக் காரணம் உண்டு. சிறிது நாட்களுக்கு முன்பு, அவர் எதிர்பார்ததபடி நான் வேலை செய்யவில்லையயன்று ரூபாய்.5000 கொடுத்து என்னை நிறுத்தி விட்டார். ஒரு சலுகையளித்தார். என்னை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு ஒரு நாளைக்கு ரூபாய்.15 சம்பளம். இப்போது சம்பளத்தை  உயர்த்தி விட்டார்.

அப்போது அமாபெல் என்னும் ஹோலி கிராஸைச் சேர்ந்த சகோதரி, ஆங்கிலோ இந்திய மாணவிகளுக்கு பத்திரிகை நடத்துவது எப்படி என்று வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார். அவர் என்னை பயன்படுத்திக் கொண்டார். நானும் எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் விளக்கங்கள் அளித்தேன். யrலிவeஐ சிஐஆயிஷ்விஜு என்றாலும் அவர்கள் புரிந்துக் கொண்டார்கள். பின்னொரு நாள் மாலை முரசு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று, தினத்தாள் அச்சாகும் முறையை விளக்கினேன். சகோதரிக்கு மிக்க மகிழ்ச்சி!

அப்போது தான் திருச்சபைக்கு ஒரு பொதுப்பாடல் புத்தகம் தேவை என்று முடிவு செய்திருந்தார்கள். பழைய பாடல்களின் ஆசிரியர்களின் அனுமதி பெற்றும் புதுப் பாடல்களுக்கு இசையமைத்தும் புத்தகம் தயாரிப்பது என்று திட்டம். கோவை ஆயர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

பாடல்களை கலைக்காவிரியில் ஒலிப்பதிவு செய்வது என்று ஏற்பாடு. அதற்காக இசைக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதன் பொறுப்பாளராக மான்போர்டு சபையைச் சேர்ந்த சகோததர் ஜெபமாலை நியமிக்கப்பட்டார். அவர் என்னை அழைத்துக் கொண்டார். (இன்னும் சொல்வேன்)

No comments:

Post a Comment

Ads Inside Post