Pages - Menu

Wednesday 28 June 2017

நான் எழுத்தாளன் ஆனேன்...

நான் எழுத்தாளன் ஆனேன்...

19. இயேசு காவியம்  வெளியீட்டு விழா!

அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். இயேசு காவியத்தை வெளியிட வேண்டும் என்பது கண்ணதாசனின் விருப்பம். ய்r.ஜார்ஜ் சென்னைக்குப் போய், எம்.ஜி.ஆரைச் சந்தித்து, கண்ணதாசனின் விருப்பத்தைச் சொன்னார். எம்.ஜி.ஆர். வர சம்மதித்தார்.

       அப்போது  எம்.ஜி.ஆருக்கு எதிர்ப்பு இருந்தது. அவர் திண்டுக்கல் வழியாக திருச்சிக்கு வருவதாகப் பேச்சு. ஆனால், அவர் பிளேன் ஏறி திருச்சிக்கு வந்து விட்டார். உறையூர் வழியாக செயின்ட் ஜோசப்ஸ் காலேஜிக்கு வருவதாக வதந்தி. ஆனால், அவர் சர்க்யூட் ஹவுசிலிருந்து காரில் ஜோசப் கல்லூரிக்கு ஆளுக்கு முன்னால் வந்து உட்கார்ந்திருந்தார்.

       வெளியீட்டு விழா ஆரம்பமானது. எம்.ஜி.ஆர். பக்கம் பக்கமாக வாசித்து விமர்சனம் செய்தார். மெமெண்டோ பெற்றவர்களில் நானும் ஒருவன். நான் எம்.ஜி.ஆரைத் தாண்டி அந்தப் பக்கம் போய் நின்றேன். இந்தப் பக்கம் வந்து நில்லுங்க. உங்கள எல்லோரும் பார்க்க வேண்டாமா? என்று சொல்லி எம்.ஜி.ஆர். என்னை இந்தப் பக்கம் நிற்க வைத்து மெமெண்டோவைக் கொடுத்தார். விழாவில் வலம்புரிஜான் போன்றோர் வாழ்த்திப் பேசினார்கள்.

      நான் மாலை முரசில் இருக்கும்போது ஒரு வேடிக்கை நடந்தது. எம்.ஜி.ஆர். நடித்த ரிக்ஷாக்காரன் என்ற படத்தின் சிறப்பு மலர் ஒன்று வெளியிட்டோம். சிறப்பு மலர் வெளியிடும்போது கவிதை ஒன்று வெளியிடுவோம். கருணைதாசன் என்றொருவர் இருந்தார். அவர் மரபுக் கவிதைகள் எழுதுவார். அவரைக் கூப்பிட்டு ஆசிரியர் கவிதை ஒன்று எழுதச் சொன்னார். அவர் மரபுக் கவிதைகளாக எழுதிக் கொண்டு போய் காண்பித்தார்.

       இது இல்லிங்க... இப்படி இல்லிங்க என்று சொன்னாரே தவிர ய்லியிவவிலிஐஆ என்று சொல்ல வரவில்லை. நான் சும்மா இருக்கக் கூடாதா?
   வண்டியிலே ஏறுவாரு நம்ம வாத்தியாரு
  கிண்டி குதிரப் போல அது பறந்து போகும் பாரு
  வாயுவேகம் மனோ வேகம் என்பதெல்லாம் வேறு
  வாத்தியாரு ஓட்டுறத பார்க்கிறதே ஜோரு...

 என்று எழுதிக் கொண்டு போய் காண்பித்தேன்.
இதுதாங்க, இப்படித்தாங்க இருக்கணும். நீங்க எழுதுங்க’ என்றார். நான் அதுவரை ரிக்ஷாக்காரன் படத்தைப் பார்க்கவில்லை. பார்த்த பையன்கள் சொன்னதை வைத்து எழுதினேன்.

         பாரட்டு காப்பிக்கு மேல் காப்பியாக வருகிறதே பார்க்கலாம். எல்லோரும் எம்.ஜி.ஆர். ரசிகர்கள். முதலாளி திரு.இராமச்சந்திர ஆதித்தன் கூட கேட்டாராம், கவிதை யார் எழுதியது? என்று.

         ஆரம்பத்தில் ‘சாந்தோம் கம்யூனிகே­ன்’,  இறையியல் எப்படி எழுதுவது என்பது பற்றி கொடைக்கானல் சென்பகனுVர் செமினரியில் எழுத்தாளர்களுக்குப் பயிற்சிப் பாசறை நடத்தியது. மதுரைப் பேராயர் ஆரோக்கியசாமி அவர்களிடம் பேசி, பணம் வாங்கி கவிஞர் அமலன் எங்களை அழைத்து வந்தார். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.

 நாகர் கோவிலைச் சேர்ந்த குருவானவர் ஒருவர் சொன்னார்: 
இந்தப் பக்கம் லெயோ ஜோசப், அந்தப் பக்கம் முல்லை பெர்க்மான்ஸ். நான் என்னத்தச் சொல்றது? என்றார். ஒரே சிரிப்பு!

         அந்தப் பயிற்சிப் பாசறை முடிந்ததும் வேளாங்கண்ணியில் மூன்று நாள் மாநாடு. அதற்கும் அமலன்தான் செலவு செய்தார். அதில் ஊட்டி ய்r. மாத்யூ, மதுரை ய்r. தம்புராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். அங்குதான் வாரப்பத்திரிக்கை தொடர்பாகப் பேசப்பட்டது. கவிஞர் அமலனும் தம்பி கபிஸ்தலம் ஆசாவும் ஆயர் பேரவையில் பேசி நம் வாழ்வு பத்திரிக்கை உருவானது. மரியஅருள் தம்புராஜ் முதல் ஆசிரியரானார்.

         அதன் பிறகு புனித சின்னப்பர் குருத்துவக் கல்லூரியில் மாநாடு நடைபெற்றது. எழுத்தாளர் மன்றம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு என்னைத் தலைவனாக்கினார்கள். பின்னர் பேராசிரியர் ஆல்பர்ட் வந்தார்.   அமுதனை ஆணைப் பேராளராக நியமித்தார். நல்லாயன் நிலையத்தில் கூட்டம் நடந்தது.

           ‘கிறிஸ்தவ எழுத்தாளர் பேரவை’  என்று பெயர் வைத்து விட்டு, பிற சமய எழுத்தாளர்களும் எழுத அனுமதிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள். இதில் எனக்கு உடன்பாடு இல்லை. தலைவர் பதவியையும், உறுப்பினர்  பதவியையும் ராஜினாமா செய்தேன்.
 ( இன்னும் சொல்வேன்)  

No comments:

Post a Comment

Ads Inside Post