Pages - Menu

Friday 2 December 2016

டிசம்பர் - ஜனவரி மாதத்தின் புனிதர்கள்

டிசம்பர் - ஜனவரி மாதத்தின் புனிதர்கள் 

டிசம்பர் 3  புனித பிரான்சிஸ் சவேரியார் (1506 - 1552)

இவர் ஸ்பெயினில் கிபி.1506இல் பிறந்தார். பாரீஸ் நகரில் தத்துவக்கலை பயின்று கொண்டிருந்த பொழுது, புனித இஞ்ஞாசியாரோடு சேர்ந்து கொண்டார். உரோமையில் 1537ஆம் ஆண்டு குருப்பட்டம் பெற்று, பிறரன்புச் சேவைகளில் முனைந்து ஈடுபட்டார். 1541இல் கீழை நாடுகளுக்குப் புறப்பட்டு வந்து, இந்தியாவிலும், ஜப்பானிலும் 10 ஆண்டுகள் அயராது மறைபோதகப் பணியாற்றி பலரையும் திருமறைக்கு மனந்திருப்பினார். கடவுளை மக்கள் அறியாத ஓர் இடம் பூமியில் இருக்கிறிது என்று நான் அறிவேனானால் நான் ஒரு போதும் இளைப்பாற முடியாது என்று இவர் அடிக்கடி சொல்வார். இவர் தமிழநாட்டில், தூத்துக்குடி மறைமாவட்டம், குடந்தை மறைமாவட்டம் ஆகிய இடங்களில் கிறிஸ்தவ விதையை ஊன்றினார் என்பது பெருமைக்குரியது. 1552இல் டிசம்பர் 3ஆம் நாள் சீனாவின் அருகில் கான்சியான் தீவில் இப்புனிதர் காலமானார்.

டிசம்பர் 7      புனித அம்புரோஸ் (340 - 397)

இவர் ஜெர்மனியில் திரியயர் நகரில் உரோமைக்  குடும்பம் ஒன்றில் கி. பி. 340இல் பிறந்தார்.  உரோமையில் சட்டப்படிப்பு படித்தார். மிலானில் அரசு அதிகாரியாக பணியாற்றியபோது 374இல் திடீரென்று மிலான் நகர் ஆயராகத் தேர்ந்து கொள்ளப்பட்டு, டிசம்பர் 7ஆம் நாள் திருநிலைப்படுத்தப் பெற்றார். கடமை தவறாது பணியாற்றி, உணமை ஆயரும், மறைவல்லநருமானார். திருச்சபையின் உரிமைகç அயராது காத்து, ஆரியுசின் கொள்ளைகளுக்கு எதிராக நேரிய நம்பிக்கைப் போதனையை நூல்களாலும், பணியாலும் பாதுகாத்தார். 397ஆம் ஆண்டு ஏப்ரல் தி
ங்கள் 4ஆம் நாள் பெரிய சனிக்கிழமை மிலான் நகரில் இறந்தார்.

டிசம்பர் 8                   புனித கன்னிமரியின் அமல உற்பவம்

கன்னிமரியாள் உற்பவித்த முதல் வினாடியிலிருந்தே கடவுளது வரங்களை நிரம்பப் பெற்றிருந்தார். அவர் உலக இரட்கரின் தாயாக இருக்க வேண்டும் என்று இறைவன் தீர்மானித்தார். கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு நாள் அன்று கபிரியேல் தூதர் அவரை அருள் நிறைந்தவளே வாழ்க என்று அவரை வாழ்த்தினார். இவ்விழாவை முதலில் இங்கிலாந்து நாட்டினர் கொண்டாடினர். 14ஆம் நூற்றாண்டிலிருந்து திருச்சபை முழுவதும் இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கன்னிமரியாள் அமல உற்பவி என்று 08‡12‡1854இல் 9ஆம் பத்திநாதர் பாப்பானவர் விசுவாச சத்தியமாக அறிவிப்பு செய்தார். 

டிசம்பர் 14                  புனித சிலுவை அருளப்பர்

இவர் ஸ்பெயினில் ஃபான்டிவெரோஸ் என்னுமிடத்தில் கி. பி. 1542இல் பிறந்தார். கர்மேல் துறவிகளுள் ஒருவராக சிறிதுகாலம் வாழ்ந்தார். பின்பு புனித அவிலா தெரசாவின் தூண்டுதலால் 1568ஆம் ஆண்டில் சீர்திருத்தம் கண்ட சபையின் சகோதரர்களுள் முதல்வரானார். கடும் உழைப்பாலும், எண்ணற்ற நூல்களாலும் சபை சீர்த்திருத்தத்திற்கு ஆதரவு அளித்து வந்தார். வாழ்வின் புனிதத்திற்கும், மதிநுட்பத்திற்கும் புகழ்மிக்கவராய் விளங்கிய இவர் 1591இல் டிசம்பர் 14ஆம் நாள் உபேதாவில் திருச்சிலுவையை பிடித்துக் கொண்டு அமைதியாய் உயிர் துறந்தார்.

டிசம்பர் 25                       கிறிஸ்து பிறப்பு விழா

சூசையும், மரியாளும் தாவீது அரசனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், எருசலேமிற்கு 75 மைல் தொலைவில்  உள்ள பெத்லகேம் என்னும் சிற்றூருக்குச் சென்றார்கள். அங்கு ஒரு தொழுவத்தில் இருந்தபோது பேறுகாலம் வந்தது. அவர் தலைப்பேறான கடவுளின் மகனும், உலன மீட்பருமான இயேசுகிறிஸ்துவை மகனாக ஈன்றெடுத்தார். கிறிஸ்து பிறப்பைப் பற்றி மக்களுக்கு அறிவிக்கவும், அவர்களது  உள்ளத்தில் குழந்தை இயேசு மீது அன்பையும், ஆர்வத்தையும் உண்டாக்கவும், புனித அசிசி பிரான்சிஸ் பாப்பானவரின் அனுமதியுடன் 1226இல் கிறிஸ்து பிறந்த குடிலை முதல் முறையாக நிறுவினார்.

டிசம்பர் 27                   புனித அருளப்பர்

இவர் செபதேயுவின் மகனும் பெரிய யாகப்பரின் சகோதரனுமாவார். திருத்தூதர்களில் இளமையானவர். இயேசுவை அதிகமாக  நேசித்தவர். இயேசு தாபோர் மலையில் உருமாறினதையும், ஒலிவ தோட்டத்தில் இயேசு அனுபவித்த மனபோராட்டத்தையும் கண்டவர். கடைசிவரை சிலுவையடியில் நின்றார். தம்முடைய அன்னையை இவரிடமே இயேசு ஒப்படைத்தார்.  சின்ன ஆசியாவில் பல சபைகளை நிறுவினார். நான்காம் நற்செய்தியையும் 3 கடிதங்களையும், திருவெளிப்பாடு நூலையும் எழுதியவர் இவர். கடவுளை அன்பு செய்யுங்கள், அடுத்தவரை கடவுளுக்காக அன்பு செய்யுங்கள். இவ்வுலகை அன்புசெய்ய வேண்டாம் என தன் கடிதங்களில் வலியுறுத்தியுள்ளார். இவர் எபேசு நகரில் நூறாம் ஆண்டில் இறந்தார் என்பது பாரம்பரியம்.

டிசம்பர் 31                    புனத சில்வெஸ்டர் (335)

இவர் உரோமையில் பிறந்தார். இவரின் அன்னை திறமைவாய்ந்த ஒரு குருவின் பொறுப்பில் இவரை விட்டு வைத்தார். புனித மார்செலினுவிடம் குருப்பட்டம் பெற்றார். இரு ஆண்டுகளுக்குப் பின் புனித மெல்கியாதெஸ் என்னும் பாப்பு இறந்ததும் இவர் பாப்புவானார். இவரின் காலத்தில் நிசேயா நகரில் நடந்த பொதுசங்கத்தின்போது இவருக்கு வயதாகி விட்டதால், சங்கத்தில் பங்கெடுக்க முடியவில்லை. எனவே தன் பிரதிநிதிகளை அனுப்பினார். அவர்கள் அலெக்சாந்திரியா, அந்தியோக்கியா தந்தையர்களை விடவும் பொறுப்பாக நின்று சங்கத்தை நடத்தினார்கள். 24 ஆண்டுகள் 11 மாதங்களாக திருச்சபையை வழிநடத்தி 335ஆம் ஆண்டு இறந்தார்.

ஜனவரி 1  இறைவனின் அன்னை புனித மரியாள்

புனித கன்னிமரியாள் இயேசுவை நமக்கு தந்ததால் முதல் நாளில் மரியன்னையை இறைவனின் அன்னையயன திருச்சபை மகிழ்ந்து கொண்டாடுகிறது. மரியன்னையின் அன்பை இவ்வாண்டு முழுவதும் பெற்று வாழ்வின் பயனடைவோம்.

ஜனவரி 4                      புனித கிரகோரியார் (541)

புனித கிரகோரியார் முதலில் திருமணமானவர். அவரின் மனைவி இறந்தபின், தம்வாழ்வை இறைவனுக்காக அர்ப்பணித்தார். ஆயர் பதவி அவர்மேல் சுமத்தப்பட்டது. தாம் பொறுப்பாயிருந்து மக்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தார். இரவில் நெடுநேரம் விழித்திருந்து செபம் செய்வார். தீயவழியில் சென்ற கிறிஸ்தவர்களை மனந்திருப்ப அவர் ஆர்வத்துடன் பணிபுரிந்தார்.

ஜனவரி 17        புனித வனத்து அந்தோணியார் (251 - 356)

இவர் எகிப்து நாட்டில் கி.பி.250இல் பிறந்தார். எல்லாத் துறவிகளுக்கும் முன் உதாரணமாக விளங்குகிறார். இவர் தம் பெற்றோரின் இறப்பிற்குப்பின் தம் உலகச் செல்வங்கள் அனைத்தையும் ஏழைகளுக்கு வழங்கிவிட்டு, வனத்தில் தனித்து தவவாழ்வு வாழத் தொடங்கினார். பலர் இவரைப் பின்பற்றி இவரின் சீடரானார்கள். அரசர் கிறிஸ்துவர்களை துன்புறுத்தியபோது, உறுதியுடன் நம்பிக்கையை அறிக்கையிடுமாறு அவர்களை ஊக்குவித்தார். ஆரியுஸ்  என்ற ஆதரவாளர்களுக்கு எதிராகப் போராடிய அத்தனாசியுசுக்குத் துணை நின்று 356இல் இறந்தார்.

ஜனவரி 20        புனித செபஸ்தியார் (கி.பி. 284 - 305)

இவர்  உரோமை இராணுவத்தில் உயர் பதவி வகித்தார். கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டபோது கிறிஸ்தவர்களை ஊக்குவித்தார். கிறிஸ்துவுக்காக  உயிரை இழப்பது பெரும்பேறு  என்பார். இவர் செய்த புதுமைகளினால் பலர் கிறிஸ்தவராயினர். வேதகலாபனையின் போது கிறிஸ்தவர்கள் உரோமையைவிட்டு தப்பிக்க உதவி செய்தார். இவரைப் பிடித்து கட்டி அம்புகளை இவர்மீது எய்தார்கள். இவர் இறந்துவிட்டார் எனக்கருதி இவரை விட்டுச் சென்றனர். தம்மைக் கொல்ல உத்தரவிட்ட நடுவரிடம் சென்று தயவுசெய்து இயேசுவை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றார். அவனோ செபஸ்தியாரை தடிகளால் அடித்து கொன்றான். இவ்வாறு செபஸ்தியார் மறைசாட்சியாக மரித்தார்.

ஜனவரி 25                     புனித சின்னப்பர் மனமாற்றம்

கிறிஸ்தவ மறையை இவர் அறிய வந்ததும் அதனை வெறியுடன் எதிர்த்தார். முதல் மறைசாட்சியான புனித முடியப்பரை கல்லால் எறிந்து கொல்லும்போது இவர் அவர் அருகில் நின்றார். தமஸ்கு நகரிலுள்ள கிறிஸ்தவர்களை பிடித்துக்கட்டி எருசலேமுக்கு கொண்டு செல்ல குருவின் கடிதத்துடன் சென்றார். தமஸ்கு செல்லும்போது வானக ஒளி இவரைத் தாக்க, இவர் தரையில் விழுந்தார். “சவுலே, சவுலே ஏன் என்னை துன்புறுத்துகிறாய்?” என்ற இயேசுவின் குரலைக் கேட்டார். அதன் பிறகு, கிறிஸ்தவ மறையை முழு மூச்சுடன் எதிர்த்து நின்றவர். இப்போது கிறிஸ்துவின் திருத்தூதராக மாறினார். கிறிஸ்தவர்களை துன்புறுத்தியவர் புறவினத்தாரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர உடலையும் உயிரையும் முழுமையாக அர்ப்பணித்தார்.
     
ஜனவரி 28 புனித அக்குவினோ நகர் தோமா (ம.ப. வல்லுநர்)

இவர் கி.பி. 1225இல் உயர்குடும்பத்தில் பிறந்தவர். முதலில் மோற்தேகாசினோ மடத்திலும், பின்பு நேப்பிஸ்சிலும் கல்வி கற்றார். பின்பு தோமினிக்கன் சபையில் சேர்ந்து, புனித பெரிய ஆல்பர்ட்டை ஆசிரியராகக் கொண்டு பாரீஸ், கொலோன் ஆகிய நகரங்களில் கல்விக் கற்றார். மெய்யியல், இறையியல் ஆகியவைகளில் சிறந்த புலமை பெற்று விளங்கினார். ஆழ்ந்த கருத்துக்களை வெளிபடுத்தி பல புத்தகங்கள் எழுதினார். பலருக்கும் ஆசிரியராகவும் இருந்தார். வொஸ்ஸாநோவாவில் 1274இல் மார்ச் 7ஆம் நாள் இறந்தார்.

ஜனவரி 31         புனித தொன்போஸ்கோ (1815 - 1888)

இவர் தூரின் மறைமாவட்டத்தில் பெக்கி என்ற இடத்தில் கி.பி.1815இல் பிறந்தார். இளமை முதல் வறுமையில் வாழ்ந்தார். குருவாகி இளைஞர்களின் வளர்ச்சிக்காக தன் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்தார். சலேசிய துறவற சபையினை நிறுவி, இளைஞர்களுக்குக் கிறிஸ்தவ வாழ்விலும், தொழில் துறையிலும் பயிற்சி அளிக்கச் செய்தார். திருமறையைப் பற்றி சிறுசிறு நூல்களையும் எழுதினார். 1888ஆம் ஆண்டு ஜனவரி 31இல் இறந்தார். 

No comments:

Post a Comment

Ads Inside Post