Pages - Menu

Thursday 1 December 2016

திருவருகைக்காலம் நான்காம் ஞாயிறு 18 - 12 - 2016

திருவருகைக்காலம் நான்காம் ஞாயிறு                 18 - 12 - 2016

எசா 7 : 10 - 14;   உரோ 1 : 1 - 7;     மத் 1 : 18 - 24

ஒரு பள்ளியில் ஆசிரியை நான்காம் வகுப்பு மாணவர்களைப் பார்த்து, ‘படித்து விட்டு என்ன ஆகப் போகிறீர்கள்?’ என்று கேட்டார். வழக்கம்போல் பிள்ளைகள், ‘டாக்டராக போகிறேன், கலெக்டராக போகிறேன்’ என்றார்கள். ஒருவன் எழுந்து ‘நான் கடவுளாக போகிறேன்’ என்றான். எல்லா பிள்ளைகளும் சிரித்தார்கள். ஆசிரியைக்கும் சிரிப்பு வந்தது. டீச்சர் அந்த  பையனைத் தொடர்ந்து கேட்டார். ‘கடவுளாகி என்ன செய்ய போகிறாய்?’ என்று கேட்டார்கள். ‘உலகிலுள்ள மக்கள் எல்லோரையும் சந்தோ­மாக வைத்திருப்பேன்’ என்றான்.

இன்றைய வாசகப் பகுதிகள், நாம் கடவுளுடைய விருப்பத்திற்கு பணிந்து வாழ வேண்டும் என்ற கருத்தை எடுத்து வைக்கின்றன. மரியா தூய ஆவியாரின் வல்லமையால் இயேசுவை கருவுற்றிருக்கிறார். தான் மணக்கப்போகும் கணவரின் உறவு இல்லாமலேயே கருவுற்றிருக்கிறாள். இந்த தவறான நிகழ்விற்கு, உட்பட்டப்பட்ட பெண், கல்லால் எறிந்துக் கொள்ளப்பட வேண்டும்.
எனவே இறைவனின் தூதர், மரியாவுக்கு மண ஒப்பந்தமான யோசேப்பை, மரியாவை ஏற்றுக் கொண்டு மரியாவைக் காப்பாற்ற கூறுகிறார். யோசேப்பும், தூதரின் கட்டளைப்படி, மரியாவை ஏற்றுக் கொள்கிறார். இவ்வாறு இறைவனின் விருப்பத்தை பணிவுடன் நிறைவேற்றுகிறார் யோசேப்பு. இறைவனின் விருப்பம் பெரும்பாலும் மனிதரின் எண்ணங்களுக்கு எதிராகத்தான் நிற்கிறது. ஏனென்றால் மனிதரின் எண்ணங்களும் விருப்பங்களும் குறுகிய வட்டத்திற்குள் நிற்கிறது. அதாவது தன்னை சுற்றியே வருகிறது. ஆனால் இறைவனின் விருப்பம் பரந்து விரிந்து பொது நோக்குடன் விளங்குகிறது. நாமும் இறைவனின் உயர்ந்த எண்ணங்களுக்கு அருகில் செல்லும்போதுதான் இறைவனின் விருப்பத்தை புரிந்துக் கொள்ள முடியும்.

மரியாவின் கணவர், இறைவனின் விருப்பத்தை ஏற்று நடந்தார். முதல் வாசகத்தில் ஆகாசு அரசன், இறைவனின் வார்த்தைகளை புறம்பே தள்ளுகிறார், சந்தேகப்படுகிறார். இறைவனே, ‘ஓர் அடையாளம் கேள்’ என்கிறார். ஆகாசு, ‘கேட்க மாட்டேன்’ என்கிறார். ஆனால் இறைவன், அவரே அடையாளம் தருவதாக கூறுகிறார். ‘கன்னிப் பெண் கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்’. இறைவனின் விருப்பம் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு மரியாவில் நிறைவேறுகிறது.

எசாய 7 : 14இல் ‘இளம்பெண்’ என்ற பொருள்படும் ‘அலமா’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதே பகுதியை குறிக்கும் மத்தேயு ‘கன்னிப்பெண்’ என்று பொருள்படும் ‘பார்த்தேனோஸ்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். கன்னிமை என்ற வார்த்தைக்கு ‘முழு அர்ப்பணம்’ என்ற பொருளும் உண்டு. மரியா இறைவனுக்கு, ‘நான் ஆண்டவரின் அடிமை’ என்ற முறையில் முழு அர்ப்பணத்தையும் கொடுத்தாள்.

இறைவனுக்கு முழு அர்ப்பணத்தைக் காட்டுவதுதான் இறைவனுடைய விருப்பத்தை தெரிந்துக் கொள்ளுதல். இது  எளிதல்ல. முழு அர்ப்பணம் உள்ளவர்களுக்கு இறைவனுடைய விருப்பத்தை அறிய வேண்டிய ஒளி கிடைக்கும். அமெரிக்காவில் ஒரு தமிழ் குடும்பத்தில் நடந்த நிகழ்ச்சி. மனைவி கர்ப்பமாயிருக்கிறாள். மருத்துவ பரிசோதனையில், மனைவியின் வயிற்றில் வளரும் குழந்தை, ஒரு வேளை, மூளை வளர்ச்சியில்லாமலும் பிறக்கலாம் என்ற சந்தேகத்தை  மருத்துவர் தருகிறார்கள். இப்போது கணவன் ‡ மனைவி இவர்களிடையே பெரிய குழப்பம். மூளை வளர்ச்சியில்லா குழந்தையை பெற்றெடுப்பதா? அல்லது அக்குழந்தையை கருவிலேயே கலைத்து விடுவதா? என்ற போராட்டம். இருவரும் உருக்கமாக பல நாள்கள் ஜெபித்தார்கள். பெரியவர்களிடம் ஆலோசனைக் கேட்டார்கள். கடைசியாக, கடவுள் கொடுத்திருக்கின்ற குழந்தையை பெற்றெடுக்கலாம் என்று முடிவு செய்தனர். குழந்தை பிறந்தது. மூளை வளர்ச்சி குறைவில்லாமல் நல்லக் குழந்தையாய் வளர்ந்தது.
இதே போன்று கடவுளின் விருப்பத்தை அறிவதில், போராட்டம் உண்டு. ஆனால் இறைவனுக்கு அர்ப்பணித்த  நிலையில், இறை விருப்பத்தை அறிய முடியும். இப்போது, எந்த பள்ளியில் பிள்ளைகளை சேர்ப்பது என்பதில்கூட குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படுவது உண்டு. இறைவனின விருப்பத்தை அறிய முற்படுவார்கள்.

‘மனிதர் இறைவனால் வழிநடத்தப்பட வேண்டும்.


இல்லையயன்றால், அரக்கப் பண்புகளால் வழிநடத்தப்படுவர்’ ‡ வில்லியம் பெண்.

No comments:

Post a Comment

Ads Inside Post