Pages - Menu

Sunday 19 March 2017

தவக்காலம் நான்காம் ஞாயிறு

தவக்காலம் நான்காம் ஞாயிறு    
   
 26 - 03 - 2017
1 சாமு 16 : 16, 6 - 7, 10 - 13;     எபே 5 : 8 - 14;    யோவா 9 : 1 - 41

ஓர் ஆசிரியர் எழுது பலகையில் கீழ்க்கண்டவாறு எழுதி மாணவர்களை அதனைப் பற்றி விமர்சனம் செய்ய சொன்னார். அவர் எழுதியது இதுதான். 1 $ 9 = 7; 2 $ 9 = 18; 3 $ 9 = 27; 4 $ 9 = 36. மாணவர்கள் சரியாக உற்று நோக்கி, முதல் பெருக்கல் 1 $ 9 = 7 என்பது தவறு என்றார்கள். மாணவர்களைப் பார்த்து, ‘நான் வேண்டுமென்றேதான் அவ்வாறு எழுதினேன். 4 பெருக்கல் சரியாக இருந்தது. ஒன்று தவறாக இருந்தது. இந்த தவறான எண்தான் நம் கண்களுக்குப் பட்டது. அதே போல நாம் பல நன்மைகளை செய்தாலும் நம்மிடமுள்ள சிறுகுறையைதான் மனிதர் பெரிதுபடுத்தி ¼ பசுவர். எனவே, மற்றவர்கள் கூறும் வீண் குறைபாடுகளைப் பற்றி கவலைப்படாமல் நம் பயணத்தை தொடரவேண்டும்’ என்றார்.

தவக்காலத்தின் நான்காம் ஞாயிறாகிய இன்று, பிறவியிலேயே பார்வையற்ற ஒருவரை இயேசு பார்வை பெற செய்கிறார். பார்வை தரும் நிகழ்ச்சி ஏழு வசனங்களில் மட்டும் விளக்கப்படுகிறது. மற்ற 34 வசனங்களில், அவர் பார்வை பெற்றதைப் பற்றிய விவாதம் நடக்கிறது. பரிசேயரும், யூதரும் இயேசு குணப்படுத்திய செயலில் குறை காண்கிறார்கள். இயேசு இவ்வாறு செய்தது ஓய்வு நாளன்று. ஓய்வு நாளின் மரபினை பின்பற்றாதவர் ஒரு பாவி (யோவா 9 : 24).  அவரால் அரும் அடையாளங்களை செய்ய முடியாது என்றனர்.

ஆனால் பார்வை பெற்றவர், நேர்மையின் கிளையை கெட்டியாக பிடித்துக் கொண்டு, இயேசுவுக்கு சாட்சியம் கூறுகிறார். இந்நிகழ்ச்சியின் கதாநாயகன் பார்வை யற்றவர்தான். 13 வசனங்கள் இவரைப் பற்றித்தான் விவரிக்கின்றன. விழிகளின் ஒளியை மட்டும் பெற்றுக் கொள்ளவில்லை. உள்ளொளியைப் பெற்றிருக்கிறார். பரிசேயரும், யூதரும் இரண்டுமுறை பார்வையற்றவரிடம் விசாரணை நடத்துகின்றனர். பார்வை பெற்றோரின் பெற்றோர்களிடமும் விசாரணை  நடத்துகின்றனர். பார்வை பெற்றவரின் பெற்றோர், தாங்கள் பாதிக்கப்படாமல், ‘நடந்ததை அவனே சொல்லட்டும்’ என்று யூதர்களுக்கு அஞ்சி நடுங்குகின்றனர். ஆனால் பார்வை பெற்றவர், இயேசு, ‘ஓர் இறைவாக்கினர்’ (யோவா 9 : 17) என்றும், ‘கடவுளிடமிருந்து வந்தவர்’ என்றும், ‘இறைபற்றுடையராய் கடவுளின் திருவுளப்படி நடப்பவர்’ (யோவா 9 : 31 ‡ 33) என்று உறுதியாக சான்று பகர்ந்தார்.

முதல் வாசகத்தில, சாமுவேல் இறைவாக்கினர், தாவீதுதான் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்று கண்டு கொண்டு அவரை இஸ்ரயேலின் அரசராக திருப்பொழிவு செய்தார். ‘மனிதர் முகத்தை பார்க்கின்றனர். ஆண்டவரோ அகத்தைப் பார்க்கிறார்’ என்ற அழகிய வசனம் இன்றைய முதல் வாசகத்தில் வருகிறது (1 சாமு 16 : 7). இன்றைய இரண்டாம் வாசகத்தில், பவுலடிகளார், ‘ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே, ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள் என்கிறார் (எபே 3 : 8).

தவக்காலத்தில்முதல் ஞாயிறு அன்று சோதனைகளை வெற்றி கொள்ளுதல் என்ற கருத்து நம்முன் வைக்கப்பட்டது. இரண்டாம் ஞாயிறு, ‘உருமாற்றம் பெறுகிறோம்’ என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது. மூன்றாம் வாரம் சமாரியப் பெண்ணை இயேசு சந்தித்தது  போல நம்மையும் இறைவன் சந்திக்கிறார் என்ற சிந்தனை வழங்கப்பட்டது. இந்த நான்காம் வாரம், பிறவியில் பார்வையற்றவர், இயேசுவால் பார்வை பெற்ற பிறகு இயேசுவுக்கு சாட்சியம் அளித்தது போல், இயேசு நமக்கு வழங்கியிருக்கும் நன்மைகளை கண்டு கொண்டு அவருக்கு துணிந்து சாட்சியம் அளித்து வாழ வேண்டும் என்ற கருத்து நம் கண்முன் வைக்கப்படுகிறது.



நம்மிடம் உள்ள நன்மைகளை எளிதாக எடுத்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment

Ads Inside Post