Pages - Menu

Tuesday 28 March 2017

உயிர்ப்புத் திருநிகழ்ச்சி சுட்டிக்காட்டும் பணித்தலைமை

உயிர்ப்புத் திருநிகழ்ச்சி சுட்டிக்காட்டும் பணித்தலைமை

அருள்பணி.அ.பிரான்சிஸ், 
பாபநாசம்

இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகியவையே பாஸ்கா மறைபொருளாகும். “ மனிதா! மனந்திரும்பு ” என்று சொல்லி சாம்பலைப் பூசித் தொடங்கப்பட்ட தவக்காலம்,   ஆண்டவர் உயிர்த்தார். அல்லேலூயா என்று உயிர்ப்புக் கீதம் பாடி நிறைவுறுகின்றது. ஓசன்னா இசைத்து குருத்தோலை ஏந்தி ஆரம்பமாகும் புனித வாரத்தின் புனித வியாழன், புனித வெள்ளி, புனித சனி, உயிர்ப்பு ஞாயிறு ஆகிய நாள்களின் வழிபாடுகள் அனைத்தும் இயேசு ஆண்டவரின் பணித்தலைமையையே வெளிப்படுத்துகின்றன.

தொண்டு ஏற்பதற்கல்ல :

இயேசுவின் பிறப்பு, வளர்ப்பு, செயல்பாடுகள், போதனைகள், இறுதியில் அவரது பாடுகள், மரணம், உயிர்ப்பு போன்றவை அனைத்தும் இயேசுவின் பணித்தலைமையினை அடித்தளமாகக் கொண்டே அமைந்துள்ளன. இதனையே மானிட மகன்  “தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்குமே வந்தார்”   (மத் 20 : 28) எனத் தமது பணியினைத் தெளிவாக்குகின்றார்.


தமது பாடுகள், மரணம், உயிர்ப்பு  ஆகிய இவற்றில் இயேசு எதிர் கொண்ட அனுபவங்கள் :

விண்ணகத் தந்தையின் திருவுளம் தம்மில் நிறைவேறிடவே இயேசு உலகிற்கு வந்தார்.  “ நான் உண்பதற்குரிய உணவு ஒன்று உண்டு. என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும், அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு” (யோ 4 : 32, 33) என்று கூறி அதனை எதிர்கொண்டும் செல்கின்றார்.

 வேதனையை உணவாக உண்டிட்ட   வேந்தன் :

பொதுவாக எந்த மனிதரும் வேதனையினை ஏற்க விரும்புவதில்லை. ஆனால் இயேசு தனது சுய விருப்பங்களை தந்தையின் விருப்பங்களுக்கு  ஒப்புவித்தார்  (மத் 26: 39 ‡ 42,44).   தனது  உணவாக வேதனைகளை  உண்டிட்ட வேளைகளில் அவர்  எதிர் கொண்ட கசப்பான அனுபவங்கள்  இதோ.....  

  1. காட்டிக் கொடுக்கப்பட்டார் :   மூன்றாண்டுகள் தன்னோடு உண்டு , உறங்கி வாழ்ந்த  யூதாஸ் இஸ்காரியோத்து என்பவனால் காட்டிக் கொடுக்கப்படுகின்றார்  (மத் 26 : 47 ‡50)  துரோகத்தில் எல்லாம் மாயேடும் துரோகம் நம்பிக்கைத் துரோகம். ரபி வாழ்க என்று கூறி முத்தமிட்டுக் காட்டிக் கொடுத்த துரோகம்.

2. தனித்து விடப்பட்டார் :   இயேசுவிடமிருந்து அனைத்து நன்மைகளையும் பெற்று வாழ்ந்த அவரின் சீடர்கள் அனைவரும் அவரை விட்டு விட்டுத் தப்பி ஓடுகின்றனர் (மத் 26 : 56)

3.மறுதலிக்கப் பட்டார் :    கோழி கூவும் முன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய் (யோவா 13: 38 ) என்று முதன்மைச் சீடரின் செயலினை இயேசு  முன்னுரைக்கின்றார், இருப்பினும் நீயும் இம்மனிதனுடைய சீடருள் ஒருவன் தானே? என்று பேதுரு மறுதலிக்கின்றார்.

4. தண்டிக்கப்பட்டார் :    இயேசு குற்றம் அற்றவர் என நன்கு  உணர்ந்திருந்தும் கள்வானாகிய பரபாஸ்  என்பவனை பிலாத்து விடுவித்து இயேசுவைச் சிலுவையில் அறைந்து கொல்லும்படிக் கட்டளைப் பிறப்பிக்கின்றான் (மத் 27 : 15 ‡26)    இவ்வாறாகக் கொடுமையாகக் கொலைக்களத்தில் தண்டிக்கப்பட கையளிக்கின்றார்.

5. முள்முடி அணிவித்து ஏளனப் படுத்தப்படார் :     இவரின் ஆடைகள் களையப்பட்டு கருஞ்சிவப்பு அங்கி அணிவிக்கப்படுகிறது. முள்முடி பின்னித் தலையில் வைத்து அமிழ்த்தி காரித்துப்பி இச்சகனமான வார்த்தைகளைச் சொல்லி அவமானப் படுத்தப்பட்டாVர் (மாற்  15 : 16 ‡ 20) . 

 6. பாரமான சிலுவை சுமந்து கல்வாரி மலையில் தன்னையே அறைந்துகொள்கின்றார்  :
  பாரமான சிலுவை சுமந்து கொண்டு யயருசலேம் நகரத் தெருக்களில் நடந்து செல்கின்றார். தன்னையே உலக  மக்களின்   மீட்புக்காகச்,  சிலுவையில் அறைந்து கொல்ல  விட்டு விடுகின்றார் . அவமானத்தின் சாவு,  அவமானத்தின்  சிலுவை மரணம் உலகோரை மீட்டு இரட்சிக்கிறது.  (யோவா 19 : 17 ‡ 29)

7. சந்தேகத்துக்குட்படுத்தப்படுகின்றார் :    உயிர் பெற்று  எழுந்த பின்னரும் இவரின் சீடர்கள் இவர் உயிர்த்ததை நம்பவில்லை. குறிப்பாக தோமா ஆண்டவரின் காயங்களின்  தழும்புகளைப் பார்த்த பின்னரே  நம்புகின்றார் (யோவா 20 : 24 ‡29) இப்படியாக கடவுளின் திருவுளம் தன்னில் நிறைவேறிட வேதனைகளையே தனது உணவாக உட்கொள்கின்றார். மேற்சொல்லபட்ட பாடுகள்  மற்றும் உயிர்ப்பின் வரலாறு,  இயேசுவின் துன்புறும் ஊழியத் தன்மையினையே சுட்டுகின்றது.

பணித் தலைமையின் பண்புகள் :    உண்மைத் தொண்டன் பணிவுடையவனாகத் திகழ்வான். அவனிடம் கீழ்க்காணும் 9 பண்புகள்  நிறைந்திருக்கும். இதுவே துன்புற்று உயிர்த்த தலைவரின் பண்பு நலன்களாகும்
1. பலதரப்பட்ட கருத்துகளுக்கும் மதிப்பளித்தல்.
2. நம்பிக்கை கலாச்சாரத்தினை  உருவாக்குதல்.
3. தொண்டர்கள் மத்தியில் தலைமைத்துவப் பண்பினை வளர்த்தெடுத்தல்.
4. வாழ்க்கைப் பிரச்சினைகளை எதிர்க் கொள்ளத் தூண்டுதல்.
5. உற்சாகப் படுத்தி திறமைகளை வெளிக்கொணர்தல்.
6. ஆணையிடுவதை விட அரவணைப்போடு செயல்பட வைத்தல்.
7. நான் அல்ல. நீ மனப்பான்மை.
8. நீண்டகாலச் செயல்பாட்டினை நோக்குதல்.
9. அனைத்தையும் பணிவோடு செய்தல்.
மேற்கூறப்பட்டவையனைத்தும் பணித்தலைமை கொண்டிருப்போரின் பண்புகளாக  விவஷ்ஸ்ரீ rஷ்உஜுழிrd  என்னும் மனவியலாளர் அவர்களால் பகுக்கப்பட்டவையாகும்.

உயிர்ப்பினை வாழ்வாக்கும் பணித் தலைமை :
 மூன்றாண்டுகள் தனது இறையரசுப் பயணத்தின் வாழ்க்கைப் பட்டறையில் தன் சீடர்கள் அனைவரையும் பணித்தலைமைக் கொண்டு வாழவே பயிற்றுவித்தார், இவர்கள் தடம் மாறிய வேளைதனில் அவர்களைக் கண்டிக்கவும் செய்தார். தன்னைப் போன்றே,  வேதனை என்னும் வேள்வியில் இணைத்துக்கொண்டு  செயல்படுவோருக்கு தலைமையேற்கும் பண்பு உண்டெனச் சொல்கின்றார் (மாற்கு 10 : 35 - 45 )

 உயிர்ப்பினை வாழ்வாக்கும்  தலைமைத்துவம் :
  உலக, இந்திய, தமிழக அரசியல் களத்தில் ஆண்டான் - அடிமை , ஆள்வோர் ‡ ஆளப்படுவோர் என்னும் கொள்கையே தலைதூக்கி நிற்கிறது. இயேசு விரும்பும் தலைமைத்துவப் பண்பு என்பது திப 2: 42 -47இல் காணும் வாழ்க்கை முறையாகும். அங்கே கருத்தொருமைப்பாடு  இருந்தது. நட்புறவு நிலவியது. அப்பம் பிட்டு இறை வேண்டலில் மக்கள் நிலைத்திருந்தனர். எல்லாரும் எல்லாமும் பெற்று  - அங்கே இல்லாமை இல்லை என்ற  நிலையிருந்தது,  இது போன்ற தலைமைத்துவப்  பண்புக் கொண்டோரே  இன்று நமக்குத் தேவை.

தன்னெழுச்சி பெறும் தலைமை :   தமிழகத்தில் இந்த ஆண்டுத் தொடக்கத்திலிருந்தே பணித் தலைமை உயிர்ப்புத் தன்மை கொண்டு செயல்படுவதனைக் கண்டு மகிழ்கின்றோம்.
சவால்களைச்  சந்திக்க  தன்னெழுச்சியாக சென்னை மெரினாவில் மட்டுமல்லாது. தமிழகமெங்கும் ஒன்று 
கூடி இளைஞர் பட்டாளம் நடத்திய எழுச்சிமிகு போராட்டம்  இன்றும் ,  என்றும்  வரவேற்கத் தக்க ஒன்று. 2017 ஆம் ஆண்டு 
ஜனவரி  8 முதல் 23 வரை நடைபெற்ற இந்தப் போராட்டக்களத்தில் சமூக  வலைத்தளங்களின் பங்கேற்பு அதிகமாக இருந்தது. ஆனால் காவல் துறையினரின் காட்டுமிராண்டித் தாக்குதல் மூலம் அரசு தன்னைத் தரம் தாழ்த்திக் கொண்டது. 

2. ஹைட்ரோ கார்ப்பன் திட்டத்துக் கெதிரான போராட்டம்:   மத்திய , மாநில அரசு பன்னாட்டு  தொழிலபதிர்களிடம் கையூட்டுப் பெற்று  “ சோழ வளநாடு சோறுடைத்து”  என்னும் பழமொழியை மாற்றிப் பாலைவனமாக்கும் திட்டமே மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டமாகும், இதனை எதிர்த்து நெடுவாசல், கீழவாசல்  மற்றும் நல்லாண்டார் கொல்லையில் தன்னெழுச்சியாக மக்களால் நடத்தப்படும் போராட்டம்  இயேசுவின் உயிர்ப்பு செயல்பாடுகளில் ஒன்றே.
3. இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூட்டினை எதிர்த்து நடத்தப்படும்  போராட்டங்கள்:    மார்ச் 7 ஆம் தேதி தனுஸ்கோடி அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள்,  இலங்கை கடற்படையால் நடத்தப்பட்ட   துப்பாக்கிச்  சூட்டினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர், பிரிட்ஜோ என்னும் 22 வயது  இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.  ஒருவர் உயிருக்குப்      போராடி வருகின்றார். இந்த அநீதிமிக்க  அக்கிரமச் செயல்பாட்டினை எதிர்த்து போராட்டம் தொடர்கிறது. இவையனைத்தும் உயிர்த்த ஆண்டவரின் பணித்தலைமையைத்  தேடுவோரின் செயல்பாடுகளே. 

   ஆண்டவர் ஒடுக்கப்பட்டோருக்கான நீதியை நிலை நாட்டுகின்றார், பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்;  சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார்  - திருப்பாடல்   146 : 7.
 சிலுவையின்றி உயிர்ப்பு இல்லை.                            பணித்தலைமையே இயேசுவின் உயிர்ப்பு வாழ்வு.
உயிர்ப்பினை வாழ்வாக்குவோம்......


No comments:

Post a Comment

Ads Inside Post