Pages - Menu

Wednesday 1 June 2016

பொதுக்காலம் 12ஆம் ஞாயிறு, 19 - 06 - 2016

பொதுக்காலம் 12ஆம் ஞாயிறு    19 - 06 - 2016

- அருள்பணி. ச.இ.அருள்சாமி,
செக் 12 : 10 - 11  கலா 3 : 26 - 29    லூக் 9 : 18 - 24

தான் பிறருக்கு உரியவர் என்று உணர்த்துவதே உயர்ந்த வாழ்வு.

ஓர் அலுவலகத்தில் கடைநிலை பணியாளர் ஒருவருக்கு, பணி ஓய்வு விழா எடுத்தனர். இவ்விழாவில், அவருடைய சிறப்பு, உழைப்பு ஆகியவைப் பற்றி எல்லோரும் அழகாக எடுத்துரைத்தனர். ஏற்புரையில் அப்பணியாளர் “இந்த நல்லவைகளையயல்லாம் முன்பே கூறியிருந்தால் இன்னும் சிறப்பாக, ஆர்வமாக பணியாற்றியிருப்பேன்” என்றார்.

“சுய விமர்சனம் மிகவும் உதவியானது. மற்றவர்கள் தரும் விமர்சனம் நாம் வளர வைக்கப்படும் உரம்” என்று சொல்லலாம். 100 நண்பர்கள் கற்றுத்தராததை ஓர் எதிரி கற்றுத் தந்து விடுவான் என்று கூறப்பட்டுள்ளது.

இயேசுவின் கலிலேயா பணியின் இறுதியில் (லூக் 4 : 14 ‡ 9 : 50) எருசலேம் செல்வதற்குமுன் (9 : 51 ‡ 19 : 27) தான் செபத்தில் தனித்திருந்த போது, சீடரிடம் தன்னைப் பற்றிய மக்களின் கருத்து என்ன? என்று கேட்கிறார். இதற்குமுன் திருமுழுக்கு யோவான், “அவர் யார்?” என்று தன் சீடர்களை அனுப்பி கேட்கிறார் (லூக் 6 : 20). ஏரோது, இயேசு யார்? என்று குழம்பி போகிறார் (லூக் 9 : 7 ‡ 9). லூக் 4 : 16 ‡ 9 : 6 என்ற பகுதியில் இயேசு பலவித எதிர்ப்புகளை சந்திக்கிறார். “இயேசு உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்று கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் (லூக் 5 : 21). இயேசு பாவிகளோடு விருந்துண்பதற்கும் (லூக் 5 : 30), சீடர்கள் வழக்கப்படி நோன்பு c

அவர், தன் தந்தை. இறந்தபிறகு வருவதாக கூறுகிறார். அதாவது “பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமையை செய்துவிட்டு சீடராக மாறுகிறேன்” என்கிறார். இறந்தவர்களை இறந்தவர் அடக்கம் செய்யட்டும் என்ற பழமொழியைக் கூறி, மீண்டும் முழு அர்ப்பணத்துடன் தன் சீடராக வாழ வேண்டும் என்கிறார். முதல் வாசகத்தில், எலியா, எலிசாவை தன் சீடராக அழைத்தபோது, எலிசா முதலில் தயங்கினார். ஆனால் தனது ஏர்மாடுகளைக் கொன்று அதன் இறைச்சியை மக்களுக்கு பரிமாறிவிட்டு எலியாவை பின்பற்றுகிறார். இரண்டாம் வாசகத்தில், பவுல் அடிகளார், தூய ஆவியின் தூண்டுதலுக்கேற்ப வாழுங்கள் என்கிறார்.

இயேசு தன் சீடர்களை அழைத்தபோது, பேதுரு, யாக்கோபு, யோவான், அந்திரேயா அனைவரும் அனைத்தையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினர் (லூக் 5 : 11). லேவி அனைத்தையும் விட்டு இயேசுவை பின்பற்றினார் என்றும் பார்க்கிறோம் (லூக் 5 : 28).
அரசன் தனக்குபின் தன் மகன் ஒருவனுக்கு மகுடம் சூட்ட விரும்பினார். வழக்கம்போல் மூத்தவனுக்கு கொடுக்க விரும்பவில்லை. எனவே ஒருவனை அழைத்தார். அவனிடம் “நீ செய்த ஒரு நல்ல செயல் சொல்” என்றான். “ஒருவர் என்னிடம் ரத்தினமாலையை கொடுத்துவிட்டு சென்றார். அதை பத்திரமாக வைத்திருந்து கொடுத்தேன்” என்றான். “இது எப்படி நல்லது?” என்றான் அரசன். “நான் ஒரு இரத்தினக்கல்லை திருடியிருக்கலாமில்லையா, திருடினால் என்ன, மக்கள் என்னை பிடித்து தண்டித்திருப்பார்களா?” என்றான். “அப்படியயன்றால் மற்றவர்களுக்கு பயந்துக் கொண்டு நல்லது செய்தாய். நீ போகலாம்” என்றார். அடுத்தவனைக் கூப்பிட்டு, “நீ என்ன நல்லது செய்தாய்?” என்றான் அரசன். “ஒருவன் தண்ணீரில் விழுந்துவிட்டான். யாரும் காப்பாற்ற முன்வரவில்லை. நான் தண்ணீரில் குதித்து அவனை காப்பாற்றினேன்” என்றான். “ஏன் அப்படி செய்தாய்?” “அப்படி செய்யவில்லை எனில், என்னை கோழை என மக்கள் நினைப்பார்கள்” என்றான். “வீரத்தை காட்டுவதற்காக உதவி செய்தாய்” என்றார் அரசன். மூன்றாமவனைக் கூப்பிட்டான். “நீ என்ன நல்லது செய்தாய்?” என்றார்.
அவன், “நான் நல்லது செய்ததாகத் தெரியவில்லை” என்றான். “ஒரு நல்லதும் செய்யவில்லையா? ஆச்சரியமாக இருக்கிறது” என்று மக்களை விசாரித்தான் அரசன். ஒரு முதியவர் கூறினார், “எங்களுக்கு பணம் இல்லை என்றால் பணம் கொடுப்பார், சோகத்தில் ஆறுதல் கூறுவார், நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார். ஆனால் மற்றவர்களுக்கு தெரிய கூடாது, சொல்லக் கூடாது” என்பார். அரசன் அவனுக்கு மகுடம் சூட்டினான்.         

No comments:

Post a Comment

Ads Inside Post