Pages - Menu

Tuesday 15 March 2016

வெற்றி உங்கள் கையில் ......

வெற்றி உங்கள் கையில் ......
அருட்திரு. S. ஜான் கென்னடி
M.A., M.Ed., M.Sc, M.Phil, PGDCA, NET, Ph.D,
பூண்டி புதுமைமாதா கல்வியியல் கல்லூரி, சமயபுரம்

அலுவலக அதிகாரி ஒருவர் அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. ஆகையால் ரயில் நிலையத்திலிருந்து உடனே செல்ல வேண்டி வாடகைக்காரர் ஒன்றை பிடித்து உடனே ரயில்நிலையம் போகுமாறு  ஓட்டுநரிடம் சொன்னார். இவர்கள் வேகமாக சென்றுகொண்டிருக்கும்போது, இவர்களுக்கு முன்னால் சென்ற கார் ஒன்று, திரும்புவதற்கான சிக்னல் எதுவும் கொடுக்காமல் திடீரென்று திரும்பிவிட ஒரு கணம் நிலைத்தடுமாறிய ஓட்டுநர் உடனே பிரேக்கை அப்ளை செய்து சரியாக முன்சென்ற காரை இடிப்பதற்கு ஒரு இஞ்ச் முன்னதாக நிறுத்தினார். அந்த காரிலிருந்து எட்டிப்பார்த்த அதன் ஓட்டுனர், இவர்களை கன்னாபின்னா என்று நா கூசும் வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்ட ஆரம்பிக்கிறார். இந்த வாடகைக்கார் ஓட்டுனரோ பதிலுக்கு எதுவும் சொல்லாமல் ஜஸ்ட் ஒரு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு டாடா காட்டுவதுபோல கைகளை காட்டுகிறார். அவர் அப்படி செய்தது ஏதோ நண்பரைப் பார்த்து செய்வது போல இருந்ததே தவிர தவறாக வண்டி ஓட்டிய ஒரு ஓட்டுனரிடம் செய்வதுபோல இல்லை. “ஏன் அவனை சும்மாவிட்டீங்க? நாலு வாங்கு வாங்கியிருக்கலாமுல்ல... அவன் மேல தப்ப வச்சுக்கிட்டு நம்ம மேல எகிர்றான்?” என்று அதிகாரி ஓட்டுனரிடம் கேட்கிறார். அதற்கு அந்த ஓட்டுனர் சொன்னதுதான் ‘குப்பை வண்டி விதி’ ஓட்டுனரிடம் கேட்கிறார். அதற்கு அந்த ஓட்டுனர் சொன்னதுதான் ‘குப்பை வண்டி விதி’ எனப்படுவது.

ஆங்கிலத்தில் “The Law of the Garbage Truck” என்கிறார்கள். இப்படிப்பட்ட மனிதர்களுக்கு ‘குப்பை வண்டி’ என்று பெயர், சார். பல மனிதர்கள் இப்படித்தான் குப்பைவண்டிகள் போல இருக்கிறார்கள். மனம் நிறைய குப்பைகளையும் அழுக்குகளையும் வைத்திருப்பார்கள். விரக்தி, ஏமாற்றம், கோபம், புரிந்துகொள்ளாத நிலை அவர்களிடம் நிறைந்திருக்கும். அதுபோன்ற குப்பைகள் சேர சேர அதை இறக்கி வைக்க அவர்களுக்கு ஓரிடம் தேவை. சில நேரங்களில் அதை நம்மிடம் அவர்கள் இறக்கி வைப்பார்கள். அதை நாம் பர்சனலாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஜஸ்ட் அவர்களைப் பார்த்து ஒரு புன்னகை செய்து கைகளை ஆட்டிவிட்டு நாம் போய்கொண்டே இருக்க வேண்டும். அவர்கள் நம்மீது கொட்டும் குப்பைகளை நாம் சுமந்துக் கொண்டு போய் நாம் பணிபுரியும் இடத்திலோ அல்லது வீட்டிலோ, தெருவில் மற்றவர்களிடமோ கொட்டக்கூடாது சார். நம்ம பேருதான் நாரி போகும்...!!” என்று சொல்ல, அதிகாரி அதில் உள்ள நுணுக்கத்தை அறிந்து வியந்து விட்டார். இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம் என்னவென்றால், வாழ்க்கையில் வெற்றி பெற்ற சாதனையாளர்கள் எவரும், இந்த குப்பை வண்டிகள் தங்களின் அன்றைய நாளை ஆக்கிரமித்துக் கொள்ள அனுமதிக்கவே மாட்டார்கள் என்பது தான்.

கடந்த மாதம் மாதாந்திர தியானம் செய்வதற்கு நான் காரில் பயணமானேன். எனது கல்லுரி நுழைவாயிலிருந்து தேசிய நெடுஞ்சாலையில் கார் ஏறி திரும்பியபோது இருசக்கர வாகனத்தில் தவறான திசையில் ஒருவர் வந்தார். வலது பக்கம் வரவேண்டாம், இடது பக்கம் வாருங்கள் என்று  சைகை மூலம் காண்பித்தேன். ஏனென்றால் அவர் வலப்பக்கம் சென்றால் என் காரின் பின்னால் வரும் மற்ற ஊர்திகளின் மீது மோதிவிடுவார் என்பதை தவிர்க்கவே அப்படி செய்தேன். ஆனால் அந்த நபர் கோபப்பட்டு திட்டிவிட்டு சென்றார். அவர் என்மீது குப்பையை கொட்டி சென்றதை சுமந்து செல்லாமல் பயணத்தை இனிதே தொடர்ந்தேன்.

இதுபோன்று, உங்கள் வாழ்விலும் குப்பைகளை கொட்டிய நபர்களை சந்தித்திருப்பீர்கள். கணவன் மனைவியிடையே, பிள்ளைகள் பெற்றோரிடையே பணியாளர்கள் அதிகாரிகளிடையே கோபப்பட்டு குப்பைகளை கொட்டியிருக்கலாம். வீட்டில், அலுவலகத்தில், பள்ளிகூடங்களில், கல்லூரிகளில், பங்குதளங்களில், சமுதாயத்தில் பல்வேறு நிலையில் உள்ளவர்கள் யாதொரு காரணமுமின்றி குப்பையை ஒருவருக்கொருவர் கொட்டி கொண்டுதான் இருக்கிறார்கள்.
இப்படி யாரேனும் எரிந்து விழுந்தாலோ அல்லது வன்சொற்கள் வீசி குப்பையை கொட்டினாலோ பதிலுக்கு நீங்களும் வார்த்தை யுத்தத்தில் இறங்காது ஜஸ்ட் ஒரு புன்னகையை மட்டும் பதிலாக தந்துவிட்டு, அந்த இடத்தை விட்டு அகன்று விடுங்கள்.

நம்மை சரியாக நடத்துகிறவர்களை நேசிப்போம்.
அப்படி நடக்காதவர்களுக்காக பிராத்திப்போம்.
வெற்றியின் பாதையில் செல்வோம்.

பிறர் முகுதுக்குப் பின்னால் நாம் செய்ய வேண்டிய வேலை “தட்டிக்கொடுப்பது மட்டுந்தான்” - விவேகானந்தர்.

1 comment:

Ads Inside Post