திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இறை இரக்க ஆண்டு பற்றிய சிறப்புத் திருமடல்
MISERICORDIA ET MISERA (MERCY AND MISERY)
- அருள்பணி. அ. பிரான்சிஸ், பாபநாசம்
இரக்கமும், அவல நிலையும்
இறை இரக்க ஆண்டு 2015 டிசம்பர் 8 முதல் 2016 நவம்பர் 20 வரை நடைபெற்றது. இந்த யூபிலி ஆண்டின் நிறைவு விழா 2016 நவம்பர் 20 அன்று உரோமை, புனித பேதுரு பேராலயப் பெருங்கதவு மூடப்பட்டு நிறைவுக்கு வந்தது. நடந்து முடிந்த யூபிலி ஆண்டின் சிந்தனைகளை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்திட திருத்தந்தை அவர்களால் நவம்பர் 20, 2016 அன்று சிறப்புத் திருமடல் வெளியிடப்பட்டது. இதன் முக்கியக் கருத்துக்கள் இந்தக் கட்டுரையில் தொகுத்து அளிக்கப்படுகிறது.
1. திருமடலின் ‘இரக்கமும், அவல நிலையும்’ என்னும் இந்தத் தலைப்பிற்கான காரணம்:
யோவான் 8 : 1 ‡ 11 வரையுள்ள பகுதியில் விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணும், இயேசுவும் சந்திக்கும் நிகழ்வு பதிவு செய்யப்படுகிறது. இதனை புனித அகுஸ்தினார் ‘இரக்கத்தின் முன், அவல நிலை’ என்றுரைக்கின்றார். ‘நானும் தீர்ப்பளிக்கவில்லை ; இனி பாவம் செய்யாதீர்’ (யோவான் 8 : 11) என்ற இயேசுவின் இரக்கமிகு கனிவான வார்த்தைகள் இந்தப் பெண் பழைய பாவ வழியகற்றிப் புதிய புனித வாழ்வினை வாழத் தூண்டுகிறது. இதன் மூலம் இந்தப் பெண் விண்ணக வாழ்விற்கான கதவினைத் தட்டுகின்றார்.
2. கண்ணீரால் இயேசுவின் பாதங்களைக் கழுவி கூந்தலால் துடைத்து முத்தமிட்டு, பரிமளத்தைலம் பூசிய பாவியான பெண்:
பரிசேயரின் வீட்டில் உணவருந்தச் சென்ற போது இயேசுவும், பாவியான பெண்ணும் சந்தித்த நிகழ்வு லூக் 7 : 36 ‡ 50 வரை மேற்காணும் நிகழ்ச்சியினை விவரிக்கின்றது. மிகுதியான அன்பினை வெளிப்படுத்திய பாவியான பெண்ணின் மிகுதியான பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. தனது துன்பத்தின் உச்ச வேளையிலும், தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை (லூக் 23 : 34) என்ற வார்த்தைகள் இயேசுவின் மன்னிக்கும் மாண்பினை உலகறியக் காட்டுகின்றது. மன்னிப்பின் மகிழ்ச்சி ஓர் இறையனுபவம். இதனை வார்த்தைகளில் வடிக்க முடியாது.
கடவுள் நம்மைத் தேடி வந்து, தமது இரக்கத்தினைப் பொழிந்து, தந்தை தம் பிள்ளைகள் மீது இரக்கம் காட்டுவது போல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர் மீது இறங்குகின்றார் (தி பா 103 : 13) என்னும் இறைவாக்கின் உண்மைப் பொருளை வாழ்வாக்குகின்றார்.
3. இறை மன்னிப்புக் கொண்டாட்டம் :
நாளைய நாட்களிலும் இறை இரக்கமும், மன்னிப்பும் தொடர்ந்திடும்போது இது நமது வாழ்வுக் கொண்டாட்டமாக அமைந்து விடுகிறது. மேய்ப்புப் பணி மாற்றங்களினால் கீழ்க்காணும் செயல்பாட்டுக் கூறுகளின் மூலம் திருச்சபை புனிதம் பெற்றிட அழைக்கப்படுகின்றது.
அ. குணமளிக்கும் அருட்சாதனங்கள் :
இறை இரக்கப் பதிவுகளே திருவிவிலிய நிகழ்வுகள். மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது. ‘அது கற்பிப்பதற்கும், கண்டிப்பதற்கும், சீராக்குவதற்கும், நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளது’ (2 திமோ 3 : 16). நமது உடல், உள்ள ஆன்மீகப் பிணி போக்கும் அருட்சாதனங்களாக ஒப்புரவு மற்றும் நோயில்பூசுதல் போன்றவை அமைந்துள்ளன. திருப்பலி அனைத்து அருட்சாதனங்களின் குணமளிக்கும் வாழ்வுக் கொண்டாட்டமாகும்.
ஆ. அன்பு திரளான பாவங்களைப் போக்கும் (1 பேதுரு 4 : 8) :
பாவி தனது நிலையுணர்ந்து இறைவன்மீது அளவில்லா அன்பு கொண்டு, அவரின் இரக்கத்தில் நம்பிக்கை வைத்து செயல்படும்போது புனிதம் கமழ்கின்றது. தன்னுள் உள்ள பிளவுபட்ட தன்மையின் காரணமாகப் பாவச் சார்பு நிலை மிகுந்துள்ளது (காண்க உரோ 7 : 14 ‡ 17). அனைத்தையும் பொறுத்துக் கொள்வதே அன்பு (1 கொரி 13 : 7). எனவே இறையருள் பாவத்தைவிட பலம் மிகுந்து தீயனவற்றின் மீது வெற்றி காணச் செய்கின்றது.
இ. அருள் பணியாளர்களுக்கான அறிவுறுத்தல்:
‘பாவிகளுள் முதன்மைப் பாவியான நான், நிலை வாழ்வடைய இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொள்ள இருப்போருக்கு நான் மாதிரியாய் விளங்க வேண்டும் என்பதற்காக என்னிடம் தம் முழுப்பொறுமையைக் காட்டினார் ’ (1 திமோ 1 : 15, 16) என்ற பவுல் அடியார் போன்று, ஒவ்வொரு குருவும் தனது பாவ நிலையினை உணர்ந்து, ஒப்புரவு அருள்சாதனம் அளிக்கத் தயாராயிருத்தல் வேண்டும். ஏனெனில் விண்ணகத் தந்தையின் அன்பினை வெளிப்படுத்துவதே இந்த அருட்சாதனம். ஏனெனில் இவர்களே இரக்கத்தின் திருத்தூதர்களாய்த் திகழ்கின்றனர்.
4. குருக்களுக்கான சிறப்பு அதிகாரம் :
கருக்கலைப்பு மற்றும் சிசுக் கொலை புரிவோருக்கு மன்னிப்பளிக்கும் அதிகாரம் இதுவரையில் மறைமாவட்ட ஆயர்களுக்கு உரிய தனி உரிமையாக இருந்தது. இப்போது இந்த அதிகாரம் அனைத்து குருக்களுக்கும் அளிக்கப்படுகிறது.
5. தாய் திருச்சபை மன்னித்து ஏற்றுக் கொள்வதின் அடையாளம் :
இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கத்தின் சீர்திருத்தங்களை ஏற்றுக் கொள்ளாது எதிர்ப்பாளராய் வாழ்ந்த பேராயர் லெபபர் (புrஉஜுணுஷ்விஜுலிஸ்ரீ ஸிசிய்சியUயூசி) திருத்தந்தை ஜான்பால் அவர்களால் திருச்சபையிலிருந்து நீக்கப்பட்டார். இவரும், இவர் ஏற்படுத்திய பத்தாம் பத்திநாதர் குருக்கள் சபையும், தாய் திருச்சபைக்கும் புறம்பாக்கப்பட்டனர். இறை யூபிலி ஆண்டில் இவர்கள் மன்னிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டனர். இவர்கள் தொடர்ந்து தாய் திருச்சபையில் இணைந்து செயல்பட அனுமதிக்கப்படுகின்றனர்.
6. இரக்கத்தின் இன்னொரு முகம் ஆறுதல் :
ஆறுதல் கூறுங்கள்; என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள் (எசாயா 40 : 1) என்றுரைக்கின்றார் ஆண்டவர். உயிர்த்த ஆண்டவரில் நம்பிக்கை வைத்து வாழ்வோர், துன்பங்களிலும், வேதனை, நோய் நொடிகளிலும் சிக்கித் தவிக்கின்ற போது, இவர்களுக்கு மனப்பாரம் குறைத்திடும் ஆறுதல் அதிகம் தேவை. இதனால் இன்சொல் இறைநெருக்கத்தினை உணர்ந்து வாழ்வில் அவர்களை மகிழ்ந்திருக்கச் செய்யும்.
7. இனிய இல்லறமே திருச்சபையின் மகிழ்ச்சி :
குடும்பம் என்பது குட்டித் திருச்சபை. பெற்றோர், பிள்ளைகள் மத்தியில் இறையிரக்கத்தின் செயல்பாடுகள் மிகுந்திருக்கும்போது, மன்னித்து ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் மிகுந்த புரிதல் உண்டாகும். இதனால் நீதி, அன்பு, மன்னிப்பு, இரக்கம் போன்ற இறையரசுக் கனிகள் அங்கு பூத்துக் குலுங்கிடும்.
8. இறப்பின் சோகத்தில் ஆழ்ந்திருப்போருக்கு ....
விண்ணக வாழ்வுக்கான பிறப்பு, மண்ணக வாழ்வின் இறப்பு என்பதன் பொருளை இறப்பின் சோகத்தில் ஆழ்ந்திருப்போர் உணரச்
செல்லார். ஏனெனில் இரக்கம் நம்மைப் புதுப்பிக்கிறது;. நம்மை மீட்கிறது. இதுவே இறை ‡ மனிதச் சங்கமம்.
10. இரக்கக் கலாச்சாரம் :
இரக்கத்தின் காலம் இதுவே. இந்நாட்களில் இரக்கக் கலாச்சாரத்தை உருவாக்குவோம். முன்பு இரக்கம் பெறாதவர்களாய் இருந்தீர்கள்; இப்பொழுதோ இரக்கம் பெற்றுள்ளீர்கள் (1 பேதுரு 2 : 10) என்னும் பேதுருவின் வார்த்தைகள் நமதாகட்டும். இறை இரக்க வெள்ளிக்கிழமைகள் மூலம், இறை நெருக்கத்தில் வளர்வோம். மேலும் ஏழை ‡ செல்வந்தர்களிடையே நிலவிடும் வேறுபாட்டினைக் களைந்திட காலத்திற்கேற்ற புதுப்புது இரக்கச் செயல்கள் புரிவோம். அப்போது நாம் பகிர்தலின் மகிழ்வையும், ஒருமைப்பாட்டுணர்வின் அழகையும் வாழ்வில் கண்டுணர்வோம்.
11. ஏழையரின் ஞாயிறு :
பொதுக்காலத்தின் 34ஆம் ஞாயிறு கிறிஸ்து அரசர் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு முந்தைய ஞாயிறு உலகெங்கும் பரவியுள்ள ஏழையரை நினைவு கூர்ந்து அவர்களுக்காக இரக்கச் செயல்கள் புரிந்து வாழ வேண்டும் என்பதன் அடையாளமாக ஆண்டின் முப்பத்து மூன்றாம் ஞாயிறினை ஏழையரின் ஞாயிறாகக் கொண்டாடுதல் மிக்கப் பொருள் பொதிந்ததாகத் திகழும்.
12. இறை இரக்கத்தின் அரசி :
இரக்கமிகு பண்புகளின் இலக்கணமாகவும், அன்பினுக்குச் சான்று பகர்வோரின் அடையாளமாகவும் திகழ்பவர் அன்னை மரியா. அவரின் தாய்மைப் பராமரிப்பிலும், வழிகாட்டுதலிலும் இறைவனின் இரக்கத்தினை அன்றாடம் அனுபவித்து அகிலத்தோர் அனுபவிக்கச் செய்வோம். ஒவ்வொரு நாளும் அதுவே அகிலத்தின் புரட்சியாகும்
No comments:
Post a Comment