Pages - Menu

Monday, 27 February 2017

விவிலிய விடுகதைகள்

விவிலிய விடுகதைகள்

- அருட்சகோ. பெரேரா, சேலம்

மத்தேயு நற்செய்தி  அதிகாரம் 1 முதல் 14 முடிய


1. கொண்டாட்டம் கொண்டாட்டம்
பிறந்த நாளு கொண்டாட்டம்
தாரகை நாயகி வந்தது
தாள கதி யிட்டது
தட்டில் அதனைக் கேட்டது? யார்? எதனை?

2. மீனைப் பிடிச்சவரு
மனிதரைப் பிடிச்சாரு
சேவகன் காதை வெட்டினாரு
அழைத்தவரை சபித்தாரு யார் இவர்?

3. பந்துப் போல் இருக்கும்
பம்பரமாய் சுழலும்
கனிவுடையோருக்கு
உரிமை சொத்தாகிவிடும். அது எது?

4. வீட்டுக்கு வீடு சண்டை
ஊருக்கும் ஊருக்கும் சண்டை
நாட்டக்கு நாடு சண்டை
இதனைத் தடுப்பவர் கடவுளின் மக்கள்
இவர்கள்  எதை நிலைநாட்டுவர்?

5. நீலக் கடலிலே ஒரு மீன் - அது
அந்தரத்தில் தொங்குது
வழிக்காட்டச் சொல்லுது
வாழ்வீட்டில் நிற்குது. அது எது?

6. ஐ சக்கா ஐ ‡ இது
கடவுள் கொடுத்த கை
இடக்கைக்கு தெரியாது
வலக்கை கொடக்கனுமே. அது என்ன?

7. இறைவாக்கினர் உரைத்தப்படி
சிப்பிக்குள் முத்து பிறக்க - அது
நம்மோடு இருக்க நல்லபேரு கிடைத்தது.
  அது என்ன பேரு?

8. கவலை ஒரு சுமை தோல்வி ஒரு சுமை
சோர்வு ஒரு சுமை
அவரை மட்டும் தேடினால்
கிடைப்பதோ சுகம்
தேடுபவர் யார்? கிடைப்பவர் யார்?
9. தலாக் என்று சொல்லவில்லை
தள்ளிவிட நினைக்கவில்லை
கனவு ஒன்று கண்டாரு
செய்தி தனைக் கேட்டாரு
உடனே ஏற்றுக் கொண்டாரு.
யார். இவர்?

10. நீரிலே பூப்பேன்
நீரிலே மடிவேன்
உள்ளலவும் நினை என்பேன்
நான் இல்லை எனில் - அது
குப்பையிலே. அது என்ன?

11. பூமிக்கு கொலுசு
வானத்துக்கு வளையல்
காகத்திற்கு கலரு
மலர்களுக்கு உடை
உனக்கு மட்டும் என்ன குறை?
மூன்றெழுத்தை விட்டெறி.
அது என்ன?

12. சுறுசுறுப்புக் கொண்டது
அடைக்கலம் பெயரிது
காசுக்கு ரெண்டு
இதைவிட நீ மேல் - எனவே
ஏழு எழுத்தைக் கொண்டிரு.
அது என்ன?

13. சீறியது நல்லப்பாம்பு
கொத்தியது தளிர்களை
வெட்டு ஒன்று. துண்டு இரண்டு.
யார் அந்தப் பாம்பு
துண்டாக்கியது எது?

14. கொடிய சுரத்தால் வாடி
சுருண்டு கிடந்த மாமிய
தொட்டு குணமாக்கிட
மாமி எழுந்து பணிவிடை புரிந்தாள்
‡ அவர் யார்?

15. கடவுளின் அரியணை அது?
அவரின் பாதப்படி இது?
அது? இது? எது?
வயதானால் வெள்ளை - அது என்ன?

No comments:

Post a Comment

Ads Inside Post