Pages - Menu

Monday, 27 February 2017

கிறிஸ்தவர்களுக்கான இந்தியச் சட்டத்தின் பார்வையில் திருமணம் மற்றும் விவாகரத்து

கிறிஸ்தவர்களுக்கான இந்தியச் சட்டத்தின் பார்வையில் திருமணம் மற்றும் விவாகரத்து

வழக்குரைஞர்:  திரு. அ. அருள்தாஸ், கும்பகோணம்

முதற்சொற்கள் :

இரு மனம் இணைவதே திருமணம் என்பது பொதுமொழி. மண வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு சகிப்புத் தன்மை மிக அவசியம் என்பதை நன்கு அறிவோம். ஒருவரையயாருவர் புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்து வாழ்வது மணமானவர்கள் அறிய வேண்டிய வாழ்வியல் கோட்பாடாகும். ஆனால் வழக்கை நெறி தவறி நடப்பதன் விளைவாக பல திருமணங்களில் விரிசல் ஏற்படுகிறது.  ஆதலால் “கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்” என்ற விதிக்கு சற்று விலகி ‘கடவுள் தன் பிள்ளைகள் ஒரு போதும் அர்த்தமற்ற, தீய சூழலுக்கு நடுவே வாழ விருப்பம் கொள்ளமாட்;டார்’ என்று பொருள் கொண்டு, மணவாழ்க்கை இன்பமாக இல்லாத நிலையில் மணமுறிவுக்கு நீதிமன்றத்தை அணுகவேண்டியிருக்கிறது. திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டாலும் அது நிலவுலகில் சட்டத்தின்பால் சரியானதாக இருக்கவேண்டும்.

கிறிஸ்தவ திருமணம் - இந்திய சட்டம் :

கிறிஸ்தவர்களுக்கென தனியாக இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டம் (The Indian Christian Marriage Act) 1872-ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. அதன்படி திருமண பந்தத்தில் இணைபவர்களில் ஒருவராவது கட்டாயம் கிறிஸ்தவராக இருத்தல் அவசியம். அத்திருமணங்களை நிறைவேற்ற கிறிஸ்தவ குருவானவர் அல்லது சட்டத்தின்கண் உரிமம் பெற்றவர்க்கு மட்டும் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறாக திருமணத்திற்கு முன்பு மணமாகவிருக்கும் நபர்களின் பெயர், உறைவிடம், பங்கு முதலியனவற்றை அறிவிக்கக் கடமைப்பட்டுள்ளார்.  குருவானவரை Ministers of Church என்று அழைக்கின்றோம். அவர்கள் அந்த அறிவிப்பை ஓலை (Banns)  முறை பங்கு மக்களுக்கு அறிவிப்பது அனைவரும் அறிந்ததே. அத்திருமணத்தில் ஏதேனும் வில்லங்கம் இருப்பின் அதை குருவானவருக்கு தெரிவிப்பது பங்கு மக்களின் கடமையாகும். அவ்வாறு நடக்கும் திருமணத்திற்கு மணமக்களும் 2 சாட்சிகளும் கையயாப்பமிட்டு பதிவை பூர்த்தி செய்வார்கள்.

மண முறிவு :

திருமண வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்நோக்கி அதற்கென சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு அப்பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு விவாகரத்து சட்டம் (The Divorce Act) 1869இல் இயற்றப்பட்டது. பிறன்மனை புணர்தல்  (Adultery),, துன்பம் விழைவித்தல் (Cruelty) போன்ற பல்வேறு காரணங்களுக்காக விவாகரத்து கோரலாம். இதேபோல் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க தீர்ப்பு வழிப் பிரிவுறைவு (Judicial Sepration) மூலமாகத் திருமணத்தை முறிக்காமல் கணவன் - மனைவி தனித்து வாழ சட்டம் வழிவகை செய்கிறது.

விவாகரத்து  கோருவதற்கான  காரணங்கள்:

விவாகரத்து சட்டம் பிரிவு கீழ்க்கண்டவாறு விவாகரத்திற்கான காரணங்களை பட்டியலிடப் பட்டுள்ளன. அவை 

1. பிறன் மனை புணர்தல் (Adultery); 

2. கிறிஸ்தவத்திலிருந்து வேறு மதத்திற்கு மாறுதல்

3. வழக்கைத் தாக்கல் செய்தலுக்கு முன்னர் இரண்டு ஆண்டுகளுக்கு குறையாமல் தொடர்ச்சியாக     குணப்படுத்த முடியாத மனநிலையில் இருத்தல் (Unsoundness of Mind)

4. வழக்கைத் தாக்கல் செய்தலுக்கு முன்னர் இரண்டு ஆண்டுகளுக்கு குறையாமல் குணப்படுத்த முடியாத     தொழுநோயால் பாதிக்கப்படுதல்(Virulent and Incurable form of leprosy)
   
5. வழக்கைத் தாக்கல் செய்தலுக்கு முன்னர் இரு ஆண்டுகளுக்கு குறையாமல் தொற்றக்கூடிய பால்வினை(Venereal disease in Communicable form) நோயால் பாதிப்பு

6. ஏழு வருடங்களுக்கு குறையாமல் காணவில்லை.

7. வேண்டுமென்றே தாம்பத்ய உறவில் ஈடுபட மறுத்தல்

8. நீதிமன்றத்தின் பிரிவுறைவு உத்தரவை (Judicial Sepration) இரண்டு ஆண்டு அல்லது அதற்கு மேலாக எதிர்மனுதாரர் (Respondent)  செயல்படுத்த தவறுதல்

9. மனுதாரரை Petitioner) வழக்கு தாக்கலுக்கு முன்னர் இரண்டு ஆண்டுகளாக ஒதுக்கி வாழ்தல் (Desertion)

10. மனுதாரரை எதிர்மனுதாரர் மனதளவிலோ, உடலளவிலோ துன்புறுத்தி (Cruelty) வாழ்வதால் அவருடன் வாழ முடியாத சூழலை அவருக்கு ஏற்படுத்துதல்

மேற்சொன்ன பத்து காரணங்களும் கணவன் ‡ மனைவி இருவருக்கும் பொதுவானவை. அவைகளில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காரணத்திற்காக ஒருவர் விவாகரத்து கோரலாம். அம்மனுவின் சங்கதிகள் போதுமான காரணங்களின் அடிப்படையில் மெய்ப்பிக்கப் பட்டால், நீதிமன்றத்தால் விவாகரத்து வழங்கப்படும். அதைத் தவிர்த்து மனைவி, தன் கணவன் மீது மணமுறிவுக்கு மற்றொரு காரணத்தையும் எடுத்துரைக்கலாம். அதாவது கணவன், கற்பழிப்பு போன்ற செயல்களில் குற்றவாளியயன நிரூபனமானால் அதனைக் காரணம் காட்டி விவாகரத்து கோரலாம். 

சம்மதத்தின் மூலம் விவாகரத்து :

பிரிவு 10புன்படி இரு சாராரும் ஒற்றுமையாக திருமண பந்தத்தை நீடிக்க விரும்பாவிடில் இருவரும் சேர்ந்து நீதிமன்றத்தில் சம்மதத்தின் மூலமாக விவாகரத்து (Divorce by Mutual Consent) கோரி மனு அளிக்கலாம். அவ்வாறாக அவர்கள் இரண்டு ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்திருந்தால்தான் அந்த மனுவைத் தாக்கல் செய்யலாம். அவ்வாறு கோரும் பட்சத்தில் வழக்காடுமன்றம் தத்தம் மனவேற்றுமைகளை களைந்தெறிய 6 மாத கால அவகாசம் கொடுக்கும் அதன் பின்வரும் மன ஒற்றுமைக்கு துளி கூட வாய்ப்பில்லையயன்றால் விவாகரத்து வழங்கப்படும்.

செல்லாத் திருமணம் (Nullity of Marriage)
  அதே போல் விவாகரத்துச் சட்டம் பிரிவு 186ல் செல்லாத் திருமணமாக (Nullity) அறிவித்ததற்குரிய காரணங்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. அவ்வாறாக அறிவிக்க பின்வரும் காரணங்களில் எவையேனும் ஒன்றை அது பூர்த்தி செய்தல் அவசியம். அவை

1. திருமண சமயத்திலும், வழக்கு தாக்கல் செய்யும் சமயத்திலும் எதிர்மனுதாரரின் தாம்பத்ய உறவிற்கு தகுதியற்ற நிலை.

2. மணமானவர்கள் திருமணத்திற்கு தடைப்பட்ட உறவினர்களாக இருத்தல்.

3. மணமாகும்பொழுது எவரேனும் ஒருவர் பித்து நிலையில் (Lunatic of idiot)  இருத்தல்.

4. வன்தாக்குதல் (Force) அல்லது (Fraud) மோசடி மூலமாக திருமணத்திற்கு சம்மதம் பெற்றிருத்தல்.

குடும்ப நீதிமன்றங்கள் :

நம் நாட்டைப் பொறுத்த மட்டீல் 1984 ஆம் ஆண்டில் குடும்ப நீதிமன்ற சட்டத்தின் வாயிலாக குடும்ப நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. மாவட்டங்களில் அமைக்கப்படும் அந்நீதிமன்றங்கள் சீரிய முறையில் செயல்பட்டு வருகின்றன. அந்நீதிமன்றங்களுக்கு கொடுக்கப்பட்ட தலையாயக் கடமை யாதெனில் இரு சாராருக்கும் சமரசம் ஏற்படுவதே ஆகும். அவ்வாறு சமரசம் ஏற்படுவதற்கென சமரச ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறாக சமரசம் ஏற்படாவிடில் வழக்கைத் தொடர்ந்து நடத்த வாய்ப்பளிக்கப்படும்.

விவாகரத்து வழக்குகள் மட்டுமின்றி ஜீவனாம்சம், இளவர்களுக்கு பாதுகாவலராக (Guardianship for Minors) நியமித்தல் ஆகிய வழக்குகளும் குடும்ப நீதிமன்றங்களில் அதிகார வரம்பிற்குட்பட்டதாகும். அவ்வாறு அந்த நிலப்பகுதியில் குடும்ப நீதிமன்றம் இல்லையயனில் அவ்வகை வழக்குகளை ஆராய மாவட்ட நீதிமன்றத்தை (District Court) அணுகவேண்டும்.

மேல்முறையீடு (Appeal)  :

இவ்வாறு மாவட்ட நீதிமன்றங்கள் அல்லது குடும்ப நீதிமன்றங்கள் தரும் இறுதி உத்தரவிற்கு எதிராக மேல்முறையீடாக  உயர்நீதிமன்றத்தையும் அதன் பின்னர் உச்சநீதிமன்றத்தையும் அணுகலாம். அவ்வாறாக, திருமணத்திற்கு விவாகரத்து வழங்கப்படும்ப ட்சத்தில் மேல்முறையீடு செய்யவில்லையயன்றாலோ அல்லது மேல் முறையீடு செய்யப்படும் காலத்திற்கு பின்னரோ மறுமணம் செய்ய சட்டம் வழிவகை செய்கிறது.

No comments:

Post a Comment

Ads Inside Post