Pages - Menu

Monday, 27 February 2017

அமெரிக்கக் கடிதம்

அமெரிக்கக் கடிதம்

- சவரி, கேரி

இந்த வாரம் உங்களுடன் பெண் சுதந்திரத்தை பற்றி பேச விரும்புகிறேன். இங்குள்ள மக்கள் பெண் குழந்தைகளுக்கும், ஆண் குழந்தைகளுக்கு நிகராக கல்வியூட்டி, விளையாட்டில் ஆர்வம் இருந்தால், நல்ல பயிற்சி அளித்து, தன்னம்பிக்கையுடன் வளர்க்கிறார்கள். இதனால்தான் ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்களைவிட பெண்கள் நிறைய தங்கங்களை அள்ளி வருகிறார்கள். கால்பந்து போட்டிகளிலும், கைபந்து போட்டிகளிலும் அமெரிக்க பெண்கள் அணி உலக அணிகளில் சிறந்த அணியாக சிறந்து விளங்குகிறது. வேலை வாய்ப்புகளில் தகுதியானவர் யாராக இருந்தாலும் ஆண்/பெண் வேறுபாடின்றி வேலை தரவேண்டும் என்று அமெரிக்க அரசு சட்டம் இயற்றியுள்ளது. இந்த சட்டம் அரசு நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல், தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும். இதனால் நல்ல வேலை வாய்ப்பை பெற்று ஆண்களுக்கு நிகராக, பெண்கள் எல்லா துறைகளிலும் தலைசிறந்து விளங்குகிறார்கள். பெண்கள் நுழையாத துறையே இல்லை. எல்லா துறைகளிலும் கால்பதித்து ஆண்களுக்கு தாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்து, பாரதி கண்ட புதுமை பெண்ணாய், பெண் இனத்துக்கு பெருமை சேர்க்கிறார்கள். சமீப காலத்தில் ராணுவத்தில் துரையில் இறங்கி, போர்களை உள்படுத்தும் கடின பணியிலும், அரசாங்கத்துடன் சண்டையிட்டு நுழைத்து விட்டார்கள்.

இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்து, அமெரிக்காவில் வாழும் பெண்கள் பலரிடம், அமெரிக்க நாட்டில் அவர்களுக்கு பிடித்தது என்ன? என்று கேட்டால், பெரும்பாலானவர்களின் பதில் இங்குள்ள சுதந்திரமும், பெண்கள் தன்னிச்சையாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் என்றும் பதில் வரும். அலுவலகத்துக்கும், கடைகளுக்கும் சென்று வர கணவன் துணையோ, மற்ற ஆடவர் துணையோ தேவையில்லை. இங்குள்ள கார்கள் பெண்களும் ஓட்டும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளன. எல்லோரும் சாலை விதியை மதிப்பதால் சாலைகளில் கார் ஓட்டுவது எளிதாக உள்ளது. றூPறீ என்ற கருவியில் செல்லும் இடத்தின் முகவரியை கொடுத்துவிட்டால், கையை பிடித்து கூட்டி செல்வது போல், ஒவ்வொரு வளைவுகளிலும் சரியான திசையில் திரும்ப சொல்லி சரியான இடத்துக்கு சரியான நேரத்துக்கு கூட்டி சென்று விடுகிறது. இதனால் பெண்கள் இங்கு தன்னிச்சையாக அலுவலகங்களுக்கும், மற்ற இடங்களுக்கும் செல்ல முடிகிறது.

இந்த பெண் சுதந்திரத்தை போராடி தான் பெற்றுள்ளார்கள். 1920‡இல் தான் பெண்கள் ஓட்டுபோடும் உரிமையை பெற்றார்கள். ஒரு பெண் அமெரிக்க அதிபராக வேண்டும் என்ற கனவு பலருக்கும் உள்ளது. கடந்த வருட தேர்தலில் ஹில்லரி கிளின்டன் இந்த கனவை நனவாக்கி விடுவார் என்று பலரும் நம்பினார்கள். ஆனால் அது நிறைவேறவில்லை. கூடிய விரைவில் இன்னொரு பெண் இதை நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நம் நாட்டிலும், பெண்கள் பல துறைகளிலும் வெற்றி வாகை சூடி வருகிறார்கள். நமது அரசும், நமது சமூகமும் பெண்களின் திறமைகளை மதித்து, அதை வெளிக்கொணர்ந்து, அவர்கள் வாழ்வில், செய்யும் வேலைகளில் வெற்றி வாகை சூட வழிவகைகளை செய்ய வேண்டும். பாரதி கண்ட புதுமை பெண்கள் நம் நாட்டில் எங்கும் உயிர்பெற வேண்டும்.

பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம் 
எட்டு மறிவினில் ஆணுக்கிங் கேபெண்
இளைப்பிள்ளை காணென்று கும்மியடி
                                                             - பாரதியார்

No comments:

Post a Comment

Ads Inside Post