இலக்கியத் திங்கள்
இலக்கியம் என்பது மனித இலக்கினை விளக்குவது. வாழ்வின் நுட்பங்களை ஆய்ந்து காட்டுவது. வாழ்வின் உண்மைகளை சுவையாகத் தருவது. மனிதர் உறவாடி வளர்வதன் அடிப்படையில்தான் இலக்கியம் தோன்றியது. இலக்கியம் மனிதரை வளர்க்கும், உயர்த்தும். இலக்கியம் பலவடிவம் கொண்டது. எழுத்தோவியங்கள், இசை, நடனம், மற்ற கலைகள். பிப்ரவரி மாதம் இலக்கிய மாதம். நவீன உலகில் இலக்கியங்கள் புதுவடிவங்களைப் பெற்றுள்ளன. தொலைக்காட்சி, இணையதளம் ஆகியவை இலக்கியங்களைத் தாங்கிவரும் வாகனங்களாக வலம் வருகின்றன. ஆனால் இவை தோன்றி மறையும் இயல்புடையன. அச்சு வடிவங்களான புத்தகங்கள், சிற்றிதழ்கள் நிலைத்தன்மை உடைத்தன.
இலக்கியங்களுடன் நாம் உறவு கொள்ளுதல், நம் வாழ்வை இனிமையானதாக்கும், எளியதாக்கும். இலக்கியங்களை உருவாக்கும் வரம் கொண்டவர்கள் உண்டு. கிரேக்கத்தில் சாக்ரடீஸ், லத்தினில் சிசரோ, ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் தமிழில், தொல்காப்பியர், வள்ளுவர், கம்பர், பாரதியார், பாரதிதாசன், கவிஞர் வைரமுத்து போன்றோர் மொழியியல் வல்லுனர்களாக கருத்துக்களை எழிலாக இனிதாக மக்கள்முன் படைத்திருக்கின்றனர்.
அன்னையின் அருட்சுடர் சென்ற ஐம்பது ஆண்டுகளாக அச்சு ஊடகத்தால் ஆன்றோரின் சிந்தனைகளை உலகிற்குத் தந்திருக்கிறது. தற்போதும் அப்பணியைத் தொடர்கிறது. இணையதளத்திலும் அன்னையின் அருட்சுடர் இணைந்திருக்கிறது. ஸ்ரீழிவிமிலிrழியிஉeஐமிer.ணுயிலிஆவிஸ்ரீலிமி.ஷ்ஐ என்ற குறியீட்டில் அன்னையின் அருட்சுடரை இணையதளத்தில் காணலாம். இதுவரை 7000 பேர் வாசித்து பயனடைந்திருக்கிறார்கள். ர´யா, வெனின் சுலா, பெரு போன்ற சுமார் 20 நாடுகளிலிருந்து வாசித்திருக்கிறார்கள். இலக்கியத்தில் இணைவோம், வாழ்வில் மலர்வோம்.
சென்ற இரண்டு மாதங்களில் தமிழ்நாட்டில் பெரிய நிகழ்வுகள் இடம்பிடித்திருக்கின்றன. டிசம்பர் 5இல் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதா மறைந்தார். டிசம்பர் 12இல் வர்தா புயல் சென்னை மாநகரைத் தாக்கி ஒரு லட்சம் மரங்களை சாய்த்தது. 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று சொன்னதால் தங்கள் பணத்தை எடுத்து செலவு செய்ய முடியாமல் மக்கள் தடுமாற்றத்திற்கு உள்ளானார்கள். பருவமழை பொய்த்தும், காவிரி நீர் தரப்படாமல் தடுக்கப்பட்டும், தமிழகம் வறட்சிக்கு உள்ளானது. நட்ட பயிர்கள் செத்து மடிவதைக் கண்ட விவசாயிகள் பயிர்களுடன் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். 1876க்கு பிறகு வரும் கொடுமையான வறட்சி நிலை இது. பழைய ஏற்பாட்டில் யோசேப்பு, எகிப்தில் பஞ்சத்தை ஞானத்துடன் சந்தித்ததுபோல, நம் அரசினர், மக்களை வழிநடத்த வேண்டும். தமிழகத்தின் அரசியல் சூழல் குழம்பிய குட்டையாக உள்ளது. சிறந்த தலைவர்கள் நம்மிடையே வெளிவர வேண்டும். ஜல்லிகட்டு விளையாட்டிற்கு அனுமதி கேட்டு தமிழகம் போராடி வருகிறது. தற்போது தமிழக மக்கள், தங்களின் ஒற்றுமையையும், அறிவாற்றலையும் காட்ட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
- அருள்பணி. ச. இ. அருள்சாமி
No comments:
Post a Comment