திருகாவலூர் கலம்பகம்
எளிய உரையில் - குடந்தை சலூசா
வீரமாமுனிவர், இத்தாலியில் பிறந்து வளர்ந்தவர். இயேசு சபை மறை பணியாளராக இந்தியா வந்தவர். தமிழ்நாட்டில் ஏலாக்குறிச்சி என்ற உள்கிராமத்தில் 22 ஆண்டுகள் தங்கியிரக்கிறார். தமிழநாட்டில் தங்கியிருந்த 36 ஆண்டுகளில் 36 நூலகளக்கு மேல் எழுதியுள்ளார். அவைகளில் முக்கியமானவை : தேம்பாவணி, திருக்காவலூர் கலம்பகம், கித்தேரியம்மாள் அம்மானை ஆகியவை. இந்நூல்கள் செய்யுள் யாப்பு விதிகளுடன் எழுதப்பட்டுள்ளன. முன்னூறு ஆண்டுகளுக்கு முன் (1726) எழுதப்பட்ட இக்காவியம், தற்கால மொழி முறையில் சாமானியர்களுக்கு படிக்க கடினமானது. அதனை எளிமைப்படுத்தி, வீரமாமுனிவரின் மொழி திறனையும், மொழி எழிலையும் காண, அருள்பணி.லூர்துசாமி அவர்கள் முயற்சி எடுத்து, விளக்கம் தந்துள்ளார் கள். மூல செய்யுளையும் அதன் விளக்கத்தையும் கவிதை நடையிலேயே தந்திருக்கிறார் தந்தை அவர்கள். இரண்டு பாடல்களுக்கு உரிய விளக்கத்தை இங்கு காணலாம்.
கலம்பகப் பாடல் - 1
தண் சுடர் காண் மதிக்குழலி
தாங்கியபூ வடி விளங்கத்
தெண் சுடர் காலுடு வளைந்த
திருமுடிகொள் சிரமிமைப்பப்
பனியுயிர்த்து மனங்குளிர்த்தப் பருதியுடுத்து டலிங்கத்
தணியுயிர்த்து மர ரணியாய்த்
தரிப்பதுநின் விருதாமோ
பாடலின் விளக்கம் :
நீரெனக் குளிரும்
நிலாப்பிஞ்சில் தடம் பதித்து
மீன்(கள்) மின்னும்
மண்முடி சீரம் ஒளிர
இரக்கம் சுரக்கம்
இதயமே கொண்டு மக்கள்
மனந்தாமரை மலர்ந்து மனம் மகிழ்ந்து
பரிதி உடுத்திய பொன்
ஒளிர் மேனியுடன்
ஒப்பில்லா இறைவனை
உலகில் ஈன்றெடுத்த
அன்னையே அரச அணிகலன்
அழகாக அணிந்திருப்பது - நின்
கொற்றத்தின் வெற்றிச் சின்னமே
No comments:
Post a Comment