Pages - Menu

Monday, 27 February 2017

திருடன்- சிறுகதை

திருடன்

- சிறுகதை

- எம். பீட்டர் டேமியன் ஆசிரியர், 
விரகாலூ 

பிப்ரவரி மாதம் துவங்கிவிட்டது. பனிரென்டாம் வகுப்பு அரசுத் தேர்வுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. சிமுழிது ய்eழிr என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அது ‡ மாணவர்களுக்கு இருக்கிறதோ, இல்லையோ, ஆசிரியர்களுக்கு அதுவும் குறிப்பாக பத்து, பன்னிரெண்டாம் வகுப்பு போதிக்கும் ஆசிரியர்களுக்கு நிறையவே  உண்டு.

லியோ +2 படிக்கும் மாணவன். எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டான். விவசாய கூலிகளான அவனின் பெற்றோர்கள் அவனைப் படிக்க வைக்க படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல. பெற்றோர்கள் அவனிடம் படிக்கும்படி கெஞ்சுவார்கள். பள்ளியிலேயே எல்லாவற்றையும் படித்துவிட்டேன் என அவர்களின் கெஞ்சலை அலட்சியப்படுத்துவான். ஒவ்வொரு தேர்விலும் இரண்டு, மூன்று பாடங்களில் பெயிலாவான். பெற்றோரிடம் அடம் பிடித்து அலைபேசி  ஒன்றையும் வாங்கிவிட்டான். எப்போதும் அதிலேயே  முழு கவனத்தையும் செலுத்தி  பொழுதை போக்கினான். விடுமுறை நாட்களில் வீட்டுக்கு சாப்பிட, தூங்குவதற்கு மட்டுந்தான் வருவான். மீதி நேரமெல்லாம் வெளியே  நண்பர்களோடு சேர்ந்து ஊரை சுற்றுவான். இதில் புகைப்பிடிக்கும் பழக்கம் வேறு. தான் கேட்கும்போது பெற்றோர்கள் பணம் தர வேண்டும். இல்லாவிட்டால் ஒரே ரகளைதான்.

லியோ படிக்கும் பள்ளியில் அன்று இரண்டாம் திருப்புதல் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. லியோ ¼தேர்வு எழுதும் அறையில், அவனது  வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் மும்முரமாக தேர்வு எழுதிக் கொண்டிருந்தார்கள். ஆசிரியர் குனிந்து ஒவ்வொருவர் விடைத்தாளிலும் கையயாப்பமிட்டுக் கொண்டிருந்தார். லியோ மெதுவாக தனக்கு முன்னால் நன்றாக படிக்கும் அருள்ராஜின் காலை தனது காலால் சுரண்டினான். திரும்பிப் பார்த்த அருள்ராஜிடம் ஒரு மதிப்பெண் மற்றும் இரண்டு மதிப்பெண் வினாக்களுக்குரிய விடைகளை காட்டுமாறு சைகை செய்தான். முடியாது என்று மறுத்தவனை நாக்கை கடித்து  மிரட்டினான். வேறு வழியில்லாமல் அரை மனதாக சம்மதித்த நண்பனை எட்டிப் பார்த்து வேக வேகமாக பதில்களை காப்பியடித்தான். அவ்வப்போது  ஆசிரியரையும் பார்த்துக் கொண்டான். கையயழுத்திட்டு முடித்த ஆசிரியர், நிமிர்ந்து பார்த்த பார்வையில் லியோ காப்பியடிப்பது அப்பட்டமாக தெரிந்தது. மெதுவாக அவனருகில் சென்ற ஆசிரியர் அமைதியாக அவனது விடைத்தாளை எடுத்து வைத்துக் கொண்டு, புதிய விடைத்தாளை கொடுத்து எழுதுமாறு சைகையால் கூறினார். உள்ளுக்குள் வெல வெலத்துப் போன லியோ, நடுங்கியவாறு அதே சமயத்தில் எல்லோருக்கும் முன்பாக தனது மானத்தை கப்பலேற்றாமல் விட்டு விட்டாரே என்று சந்தோ­த்தோடு  தனக்கு தெரிந்ததை அரை குறையாய் எழுதி வைத்தான். ஒரு வழியாக தேர்வு முடிந்தது. மாணவர்கள் வரிசையாக தங்களது விடைத்தாளை ஆசிரியரிடம்  ஒப்படைத்துவிட்டு வெளியே சென்று கொண்டிருந்தனர். லியோவும் தனது விடைத்தாளை ஆசிரியரிடம் தந்துவிட்டு வெளியே செல்ல எத்தனித்தான். ஆசிரியர் மெதுவான குரலில் அவனை மட்டும் சற்று நேரம் காத்திருக்குமாறு கூறினார்.

படபடத்த இதயத்தோடு, பயந்தவாறு ஓர் ஓரமாக நின்றான். எல்லா மாணவர்களும் வெளியே சென்ற பிறகு அவனை அழைத்த ஆசிரியர், “தம்பி, நான் நினைச்சிருந்தா எல்லோர் முன்னாலேயும்  உன் தவறை சுட்டி காட்டியிருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்யாமல் உன்னை தனியாக நான் அழைத்ததற்கு காரணம், மற்ற மாணவர்கள் முன்னால் நீ அவமானபடக்கூடாது, நீ திருந்த வேண்டும் என்பதுதான்.  ஒவ்வொரு தேர்விலும் நீ காப்பியடிக்க முயற்சி செய்கிறாய். ஆசிரியர்கள் பலமுறை உன்னை எச்சரித்தும் நீ தொடர்ந்து அதே தவறை செய்து கொண்டுதான் இருக்கிறாய். திருடர்களில் பலவகை உண்டு. நீயும் ஒரு வகையில் திருடன்தான். சிலபேர் வயிற்றுப் பிழைப்பிற்காக திருடுவார்கள், சிலபேர் ஆடம்பர வாழ்க்கை வாழ திருடுவார்கள். இன்னும் சிலபேர்  உழைக்க மனமின்றி திருடுவார்கள். நீ மூன்றாவது வகை.  கடினமாக உழைத்துப் படிக்க மனமில்லாமல், உன்னுடைய சோம்பேறிதனத்தால் மற்ற மாணவர்களின் உழைப்பைத் திருடி தேர்வு எழுத நினைக்கிறாய். உன் பெற்றோர்களை எனக்கு நன்றாகத் தெரியும். விவசாய கூலிகள். அவர்கள் உழைப்பில் உன் உடம்பை வளர்க்கும் நீ, ஒருவகையில் அவர்கள் உழைப்பை திருடும் திருடன்தான். நம் பள்ளியின் விருதுவாக்கு, “கடின உழைப்பு வெற்றியை விளைவிக்கும்”. அதாவது  உனக்கு தெரியுமா? இதன் பொருளை உணர்ந்திருக்கிறாயா? “உழைக்காதிருப்பின் உண்ணலாகாது” இது பைபிளில் பவுல் அடிகளார் நமக்கு போதித்த போதனை.

“உழைக்கும் வயதில் நீ உறங்க நேரிட்டால்
உறங்கும் வயதில் நீ  உழைக்க நேரிடும்”.
யோசி தம்பி! மற்றவர் உழைப்பை திருடும் திருடனாக இருக்க விரும்புகிறாயா? அல்லது நேர்மையுள்ள மாணவனாக நிமிர்ந்து வாழ விரும்புகிறாயா? மறுபடியும் சொல்கிறேன், உன்னைத் தண்டிக்க விரும்பவில்லை, உன் தவறை திருத்தவே விரும்புகிறேன், நீ போகலாம்” என்று கூறிய ஆசிரியர் வெளியே சென்று வெகுநேரமாகியும் லியோ அதே இடத்தில் சிலையாக நின்றான். கண்களில் கண்ணீர். நான் திருடனில்லை! திறமையானவன். அதை வரும் தேர்வுகளில் நிரூபிப்பேன். கண்ணீரைத் துடைத்தவன் நம்பிக்கையுடன் நட

No comments:

Post a Comment

Ads Inside Post