அச்சமின்றி
திரைப்பட விமர்சனம்
கல்வித்துறையில் நடக்கும் ஊழலை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் அருமையான படம் இது. தனியார் பள்ளிகளின் முதல் மார்க் கனவுக்காக கல்வித்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள் காவல்துறையினரிடையே நிலவும் ஊழலை அட்டகாசமாக தோலுருத்துக் காட்டும் அற்புதமான படம்.
ஹீரோவாக வரும் விஜய் வசந்த் பிட்பாக்கெட் திருடன். அவரை போலீஸ் என்று நம்பி காதலிக்கும் இளம் பெண் சிருஷ்டி டாங்கே. அவள் ஒரு வேலைக்காரியின் மகள். அவளின் தேர்வு மறு கூட்டலுக்கு விண்ணப்பித்த ஹீரோவை கொல்லமுயல்வது படத்திற்கு விறு விறுப்பை கூட்டுகிறது.
நேர்மையான போலீஸ் அதிகாரியாக சமுத்திர கனி வருகிறார். அவரின் காதலி வித்யாவும், காதலியின் தம்பியும் பள்ளிக்கூடத்தில் மர்மமான முறையில் இறப்பது என்று நிறைய முடிச்சுக்களை போட்டு, சிக்கல் இல்லாமல் அவிழ்ப்பது செம விறுவிறுப்பு.
கல்வித்தாயாக வந்து தன்னால் வில்லி கேரக்டரிலும் முத்திரை பதிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் சரண்யா பொன்வண்ணன். கல்வி அமைச்சருக்கான கெட்டப்பில் மிளிர்கிறார் ராதாரவி.
சமுத்திர கனியின் காதலி வித்யாவாக வருபவர், வாய் பேசாதவராக சைகை பாஷையில் பேசி நடிப்பது மனதைத் தொடுகிறது.
பிக்பாக்கெட் கும்பலில் தேவதர்´ணி, கருணாஸ், சண்முகசுந்தரம் நடிப்பு நம்மை நன்கு சிரிக்க வைக்கிறது.
இன்று கல்வித்துறையில் நடக்கும் அவலங்களைச் சொல்லும் ‘அச்சமின்றி’ படத்தை நாம் அனைவரும் தயக்கமின்றி பார்க்கலாம்.
No comments:
Post a Comment