சிரிப்பு
ஆர்வ கோளாறு
தியானத்திற்கு சென்றுவந்த ஒரு பெண்மணி, சென்றவிட மேல்லாம் Praise the Lord என்றாள். மீன் கடைக்கு சென்றபோது Praise the Lord என்றாள். மீன் கடைக்Vரர்,, அப்படியயாரு மீன் வரவில்லையே என்றார். கோழி கடைக்கு சென்றாள். கோழி வெட்டும் போதெல்லாம், Praise the Lord, Praise the Lord என்றாள். கோழி கடைக்காரர், அம்மா இதுவரை நல்லாதானே இருந்தீங்க. இப்ப என்ன ஆச்சு என்றார். வீட்டிற்கு வந்து கோழி குழம்பு வைத்தாள். குழம்கை மகன் தூக்கி வரும்போது குழம்பு பாத்திரத்தை கீழே போட்டுவிட்டான். அப்பா, Praise the Lord என்றார். மனைவி, இனி யாரும் Praise the Lord என்று யாரும் சொல்லக்கூடாது என்று சட்டம் போட்டார்.
புரிந்து கொள்ளுதல் :
முனிவர் ஒருவர் பிச்சையயடுக்கச் சென்றார். அப்போது ஒரு பெண்மணி கோபம் கொண்டு முனிவர்மேல் துப்பிவிட்டார். முனிவர் கோபம் கொள்ளாது, வீடு வந்து அந்த அம்மாளின் எச்சில்பட்ட துணியை துவைத்து, அதிலிருந்த நூல்களை பிரித்து, அதனால் திரிசெய்து, விளக்கில் அத்திரியை பயன்படுத்தி, விளக்கை ஏற்றி, இறைவா அந்த அம்மையார் ஏதோ பிரச்சனைகள் காரணமாக, கோபத்துடன் துப்பிவிட்டார்கள். அவ்வளவு பிரச்சனைகளால் போராடுகிறார்கள். அவர்களை ஆசீர்வதித்து, அவர்களின் பிரச்சனைகளிலிருந்து விடுபட துணை செய்யும் என்று வேண்டினார்.
பிள்ளை மொழி :
11 வயது பெண் அடியில் சிக்கி அவளுக்கு ஒரு கால் போய்விட்டது. இரயிலில் அடியில் கிடந்த அப்பெண்ணை மீட்க படைவீரர் இரயிலுக்கடியில் படுத்து சென்று அப்பெண்ணின் அருகில் சென்றார். அப்பெண் பயப்படாமல் இருக்க வீரர் பேச்சுக் கொடுத்தார். அப்பெண் சொன்ன முதல் வார்த்தை, இதபத்தி எங்க அப்பாகிட்ட சொல்லிடாதீங்க.
சமர்த்தான பதில் :
ஜோசியகாரனை ஒரு நாத்திகன் மடக்க விரும்பினான்.
எனக்கு எத்தனை பிள்ளைகள் சொல்லமுடியுமா?
நான்கு பிள்ளைகள்.
சரியான ஜோசியருய்யா நீ! எனக்கு மூன்று பிள்ளைகள்தான்ய்யா.
உங்களுக்கு தெரிஞ்சது மூன்று பிள்ளைகள்தான்.
கண்ணும், காதும் தொடர்பு :
ஒருவர் காது டாக்டரிடம் சென்றார்.
பேச்சுவாக்கில், உன் இரண்டு காதையும் எடுத்துவிட்டால் என்ன செய்வாய்? என்றார்.
என்னால் நன்றாக பார்க்க முடியாது.
டாக்டருக்கு ஆச்சிரியம். வாய்தவறி அப்படி சொல்கிறாரா?
காதுகளை எடுத்துவிட்டால் எப்படி கண்ணால் பார்க்கமுடியாது.
தெரிந்துதான் சொல்கிறேன். காதுகளை எடுத்துவிட்டால் எப்படி கண்ணாடி போட்டுக் கொள்ள முடியும்? எனவே தான் காதுகளை எடுத்துவிட்டால் பார்க்க முடியாது என்றேன் என்றார்.
No comments:
Post a Comment