Pages - Menu

Monday, 7 December 2015

ஆகஸ்ட் திங்களில் கொண்டாடப்படும் முக்கியப் புனிதர்கள்

ஆகஸ்ட் திங்களில் கொண்டாடப்படும் முக்கியப் புனிதர்கள்
தொகுப்பு : குடந்தை காரமேல் சபை கன்னியர், சகோ. பிளவர் மேரி.

ஆகஸ்ட் - 1 : புனித அல்போன்ஸ் லிகோரி.
பிறப்பு : 1696 இல் இத்தாலி நாட்டில் மரிய நெல்லலா என்ற ஊர்.
துறவு  : தன் 27 ஆம் வயதில், 1762 இல் ஆயரானார்.
ஆரம்பித்த துறவற சபை : 1732 இல் இரட்சகர் சபை.
சபையின் நோக்கம்  : எளியோருக்குக் கல்வி, நற்செய்தி போதிப்பது.
மறைவு  : 1787

ஆகஸ்ட் - 4 : புனித ஜான் மரிய வியானி.
பிறப்பு : 1786 இல் பிரான்ஸ் நாட்டில் டார்மலி கிராமம்
படிப்பு : படிப்பு திறமையற்றவர் ; அருள்திரு.பல்லே உதவி செய்து 
1815 இல் குருவானவரானார்.
பணியிடம் : 1818 இல் ஆர்ஸ் நகர பங்கு குரு.
பணியின் சிறப்பு : மக்களுக்கு ஒப்புரவு அருள்சாதனத்தின் வழியாக ஆற்றுபடுத்துதல். 18 மணி நேரம் மக்கள் ஒப்புரவு  அருட்சாதனம் பெற பணி செய்தார்.
மறைவு : 1859, 73 வது வயது.

ஆகஸ்ட் - 8 : புனித தோமினிக்.
பிறப்பு : ஸ்பெயின் நாடு 1170 ஆம் ஆண்டு
படிப்பு : பலன்சியாவில் பல்கலைக்கழகத்தின் படிப்பு
பணி சிறப்பு : 1191 இல் நாட்டில் பஞ்சம் ஏற்பட்ட போது, தன்னிடமிருந்ததெல்லாம் விற்று மக்களுக்கு  உணவளித்தார்.
துறவறம் : 25 ஆம் வயதில் துறவறம் மேற்கொண்டார்.
புதிய சபை : தோமினிக்கன் சபை ‡ அன்னைமரி பக்தி - ஜெபமாலை பக்தி ஆகியவைகளுக்கு முக்கியத்துவம்.

ஆகஸ்ட் - 9 : சிலுவையின் தெரசா பெனடிக்ட்டா (1891 -1942).
யூதப் பெண் : கத்தோலிக்க மறையை பின்பற்றி 1934 இல் கார்மேல் சபை கன்னியரானார்.
  1942, ஆகஸ்ட் 9 இல் ஹிட்லர் ; ராசி முகாமில் வி­ வாயுவால் சாகடிக்கப்பட்டார்.

ஆகஸ்ட் -10 : புனித லாரன்ஸ்.
பணி : பாப்பானவரின் திருத்தொண்டர். திருச்சபையின் சொத்துக்களை பராமரித்து வரும் வருவாயிலிருந்து  ஏழைகளுக்கு உதவி வழங்குவது.
பணியின் சிறப்பு : உரோமை அதிகாரி திருச்சபையின் உயர் செல்வங்களை எல்லாம் காட்டு என்றதற்கு ஏழைகளை  காட்டினார்.
மறைவு : எரிக்கப்பட்டு கி.பி. 258 இல் இறந்தார்.

ஆகஸ்ட் -11 : புனித கிளாரா.
பிறப்பு : 1194, ஜீலை 16 இல் இத்தாலி நாட்டில் அசிசி நகர்.
துறவு : பெற்றோர் திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய அவரது உள்ளம் இயேசுவை நாடியது. புனித பிரான்சிஸ்  அசிசியின் மறையுரையால் கவரப்பட்ட அவர் யாருக்கும் தெரியாமல் அசிசியார் மடத்திற்குச்  சென்றார்.  கடவுள் தேர்ந்தெடுத்துள்ள ஆன்மா நீ என்று கூறி ஏற்றுக் கொண்டார்.
குறிக்கோள் : ஏழ்மை, இறைவனுடன் தனிமையில் வாழ்தல்.
மறைவு : ஆகஸ்ட் 11 இல் இறந்தார்.

ஆகஸ்ட் - 29 : புனித மோனிக்கா.
பிறப்பு : 331 இல் வடக்கு ஆப்பிரிக்காவில் தகாஸ்தே நகர்.
20 வயதில் கிறிஸ்தவர் அல்லாத பத்ரீசியஸ் என்பவரை மணந்து
 3 குழந்தைகளுக்கு தாயானார்.  மூத்த மகன் புனித அகுஸ்தினார்.
பணியின் சிறப்பு : 33 ஆண்டுகள் செபம், தபம் செய்து புனித அகுஸ்தினாரை மனம் திருப்பினார்.
இறப்பு : தன் மகனிடம் நான் இறந்த பின் திருப்பலியில் என்னை நினைத்துக் கொள் எனக்கூறி மகனின்  மடியில் உயிர் நீத்தார்.

ஆகஸ்ட் - 28 : புனித அகுஸ்தினார்.
பிறப்பு : கி.பி. 354 இல் புனித மோனிக்காவின் முதல் குழந்தையாக ஆப்பிரிக்காவில் தகாஸ்தேயில்  பிறந்தார்.
வாழ்க்கை : ஆரம்ப காலம் மிக பக்தியாக இருந்தார். உயர்படிப்பிற்குப் பின் கெட்ட பழக்கங்களில் ஈடுபட்டார். தப்பறைக் கொள்கையில் ஊறிப்போனார்.
மனமாற்றம் : அன்னையின் செபம், ஆயர் அம்புரோஸின் வழிகாட்டலில் 35 வது வயதில் கிறிஸ்தவ மறையை  தழுவினார். எடுத்துவாசி என்ற குரலை கேட்டு விவிலியத்தை படித்தார். முற்றிலும் மனம்  மாற்றமடைந்து  குருவாகி, மறை போதகத்தாலும், எழுத்துப் பணியாலும், எடுத்துக்காட்டான வாழ்வாலும்  திருச்சபைக்கு உதவினார்.
இறப்பு : 76 வது வயதில் இறையடி சேர்ந்தார்.

No comments:

Post a Comment

Ads Inside Post