திருத்தந்தை பக்கம், இறை இரக்கத்தின் ஆண்டு
இறைவனின் இரக்கத்தினை உணர்ந்து புனித வாழ்வு வாழ்வதற்கான திருத்தந்தையின் அழைப்பு.
குடந்தை அ.பிரா
இஸ்ரயேல் மக்கள் மத்தியில் சமத்துவமும், நீதியும் நிலவிட ஒவ்வொரு 50ஆம் ஆண்டும் யூபில் ஆண்டாகக் கொண்டாடப்பட்டு வந்தது. லேவியர் 25 : 8 - 13ஆம் பகுதியே இதற்கு அடித்தளமாயமைந்தது. அவரவர் காணியாட்சித் திரும்பி மக்கள் மனநிறைவோடு சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் நிலவிட இந்த யூபிலி ஆஔ;டுக் கொண்டாட்டம் பெரும் பங்காற்றியது. இத்தகைய எபிரேய, யூத மரபில் மலர்ததுவே கிறிஸ்தவ சமயத்தின் யூபிலிக் கொண்டாட்டங்கள்.
ஒவ்வொரு தலைமுறையும் யூபிலி ஆண்டைக் கொண்டாடும் பொருட்டு 1300 அடி ஆண்டு அன்றைய திருத்தந்தை எட்டாம் போனிபாஸ் அவர்கள் இந்தச் சிறப்பு யூபிலி விழாக் கொண்டாட்டத்திற்கு வழிவகுத்தார். 1983, 2000 ஆண்டுகளில் சிறப்பு யூபிலி விழாக்களைக் கொண்டாடிய நாம் 2015ஆம் ஆண்டும் சிறப்பு யூபிலி விழாவைத் தொடங்கிடட இருக்கின்றோம்.
இறை இரக்கத்தின் யூபிலி ஆண்டும் கொண்டாட்ட காலம் :
நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏப்ரல் 11, 2015ஆம் நாளில் இரக்கத்தின் முகம் என்னும் அதிகாரப்பூர்வ ஆணைத் திருமடல் மூலம் இறை இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு பற்றிய மகிழ்ச்சி செய்தியினை வெளிப்படுத்தினார். இந்த யூபிலி ஆண்டு 2015 டிசம்பர் 8 அமல உற்பவ அன்னையின் விழாவன்று தொடங்கி 2016 நவம்பர் 20 கிறிஸ்து அரசர் விழா அன்று நிறைவுறும். கத்தோலிக்கத் திருச்சபையின் வாழ்வில் பத்தெழுச்சியையும், புதிய மறையிலான நற்செய்தியறிவிப்பு பணியினையும், ஆன்மீக வாழ்வின் உள்ளார்ந்த அனுபவத்தினையும் உலகினுக்களித்த இரண்டாம் வத்திக்கான் சங்க நிறைவின் 52ஆம் ஆண்டு நிறைவின் நினைவாக இந்த யூபிலி ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
இரக்க முகம் :
28 பக்கங்களைக் கொண்ட இத்திருமடல் இயேசுவே விண்ணகத்தந்தையின் முகம் என விளித்து கிறிஸ்தவ விசுவாச வாழ்வின் மறைபொருளை இரத்தினச் சுருக்கமாக அறிவிக்கின்றது. உங்கள் விண்ணகத்தந்தை இரக்கம் உள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவராய் இருங்கள் (லூக் 6 : 36) என்னும் இறைவார்த்தையே இம்மடலின் சாரமாகும். விண்ணகத் தந்தையின் ஒரே பேறான இயேசு மன்னிக்கும் பண்பு கொண்டவர். அவரது சீடர்களாகிய நாமும் நமது தினசரி வாV;வில் மன்னிக்கும் பண்பாளர்களாக வாழ்ந்திட இம்மடல் இறை மக்களை அழைக்கின்றது.
இரக்கத்தின் வாயில் திறப்பு :
இறை இரக்கத்தின் ஆண்டு தொடக்க நிகா;வாக டிசம்பர் 8ஆம் நாள் உரோமையில் உள்ள புனித பேதுரு பேராலயத்தில் திருத்தந்தை இரக்கத்தின் வாயிலைத் திறந்து வைப்பார். உரோமை நகரின் பிற ஆலய்ங்களிலும் இந்நிகழ்ச்சி நடைபெறும். ஒவ்வொரு மறைமாவட்டத் தலைமையகத்திலும் மறைமாவட்டப் பேராலயத்தின் இரக்க வாயில் திறக்கப்படும். இந்நிகழ்வுதான் கத்தோலிக்கத் திருச்சபையின் ஒருங்கிணைவினை வெளிப்படுத்தும் விதமாக அமையும். இம்மடல் கீழ்க்காணும் மூன்று முக்கியக் கருத்துக்களை வலியுறுத்திக் கூறுகிறது.
1. இரக்கத்தின் செல்வர் :
விண்ணகத் தந்தை இரக்கத்தில் செல்வராகத் திகழ்கின்றார். இரக்கத்தின் ஊற்றும் இவரே. தந்தை கடவுள் தன்னை இரக்கமும், பரிவும் உள்ள இறைவன்; சினம் கொள்ளத் தயங்குபவர்; பேரன்பு மிக்கவர்; நம்பிக்கைக்கு உரியவர் (வி.ப.34 : 6) என்று மோசேக்கு வெளிப்படுத்துகின்றார். காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும், திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார். (கலா 4 : 4 - 5)
மடலின் எண் : 1 இவ்வாறு கூறுகிறது. நாசரேத்தூர் இயேசு தமது சொல்லாலும், செயலாலும், தமது முழு சொல்லாலும், செயலாலும், தமது முழு ஆள்தன்மையாலும் கடவுளின் இரக்கத்தை வெளிப்படுத்துகின்றார். இரக்கம் உடையோர் போறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர் (மத் 14 : 14) எனப் போதித்த .யேசு இரக்கத்தின் வெளிப்பாடாகவே நோய்களைக் குணப்படுத்தினார். ஐந்து அப்பங்களைக் கொண்டு ஐயாயிரம் பேருக்கும் (யோவான் 6 : 1 - 13) ஏழு அப்பங்களையும், சில மீன் துண்டுகளைக் கொண்டு நாலாயிரம் பேருக்கும் (மத் 15 : 32 - 38) உணவளித்ததே மக்கள்மீது கொண்ட இரக்கத்தின் பொருட்டே ஆகும்.
இறை இரக்கம் என்பது புரிந்து கொள்ளப்பட முடியாத புதிர் அல்ல. மாறாக ஒரு தாய், தந்தை தங்களது குழந்தை மீது ஆழ்ந்த அன்பு கொண்டிருப்பது போன்றே விண்ணகத்தந்தையின் இரக்கமும். இரக்கம் திருச்சபையின் அடித்தளம். திருச்சபை வெளிப்படுத்தும் இரக்கம் மற்றும் காருண்யச் செயல்களே திருச்சபையின் நம்பிக்கைக்குரிய செயல்களாகும். எனவேதான் இந்த யூபிலி ஆண்டின் மையமே தந்தையைப் போல் இரக்கம் மிகுந்திருத்தல் என்பதாக அமைந்துள்ளது.
திருச்சபை விண்ணக இறைவனின் அடையாளமாகும். மேலும் கிறிஸ்தவர்கள் அனைவரும் இரக்கத்தின் கடலாகத் திகழ வேண்டும்.
2. மனமாற்றத்திற்கான அழைப்பு :
இந்தப் புனித ஆண்டில் கடைபிடிக்கக்கூடிய ஒரு சில வாமுறைகளும் தரப்பட்டுள்ளன. மனமாற்றத்திற்கான ல்வேறு செயல்பாடாக திருத்தலங்களுக்கு திருப்பயணம் மேற்கொள்ள வேண்டும். எவரையும் தீர்ப்பிடாதே. எவரையும் கீV;த்தரமாக எண்ணாதே மன்னிப்பை அள்ளிக்கொடு. பிறரின்; நற்பெயருக்குக் களங்கம் கற்பிக்காதே. திறந்த மனத்தோடு இன்றைய சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் தீயனவற்றைக் களைந்திட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஆன்மீக மற்றும்; சமூக இரக்கச் செயல்களில் ஈடுபாட்டோடும், மகிழ்வோடும் செயல்படுத்திடல் வேண்டும்.
24 மணி நேரமும் இறை இயேசுவோடு இணைந்திட நற்கருணை ஆராதனை நடைபெற வேண்டும். மேலும் எந்த நேரத்திலும் ஒப்புரவு அருட்சாதனம் அளித்திட அருள்பணியாளர்கள் ஆயத்தமாய் இருக்க வேண்டும். இரக்கமிகு தந்தையின் எழில்மிகு சான்றாளர்களாக ஆன்மீக ஆலோசகர்கள் திகழ வேண்டும். இந்த யூபிலி ஆண்டின் தவக்காலத்தில் இரக்கத்தின் மினர்கள் என்ற அமைப்பு ஏற்படுத்தப்படும். இதன்மூலம் இறை இரக்கத்தினை மக்கள் உணர்ந்து பாவ வழியை விட்டு விலகி வாழ்ந்திட ஆன்மீக ஆலோசனைகள் வாங்கப்படும். இவ்வாறு இறைவனின் மன்னிப்பை தேடும் அனைவரும் மனம் திருந்திப் புனித வாழ்வு வாழ வழிகாட்டப்படும்.
3. நீதியும், இரக்கமும் ஒரே உண்மையின் இரு பரிமாணங்கள் :
சமூகத்தில் வாழும் மக்களுக்கு சமமான நீதி வழங்கிடல் காலத்தின் கட்டாயமாகும். சமூகக் கட்டமைப்பின் அடிப்படைக்கூறு நீதி. சட்டத்தின் சட்டங்களால் சமுதாயம் ஆளப்படுகிறது. ஆனால் கடவுளின் இரக்கம் நீதிமிக்கவர்களாக மக்களை வாழ செய்கிறது.
குற்றப் பின்னணியுள்ள குழுக்கள் மற்றும் ஊழலில் திளைப்போர், இரக்கம் மிகு இறைவனின் கருணை மிகு கரங்களில்; தங்களை அர்ப்பணித்து தீய வழியகற்றி, தூய வாழ்வு வாழ அழைக்கப்படுகின்றனர். யூதம் மற்றும் இஸ்லாம் சமயத்திலும் இரக்கமே இறைவனின் தலையாய பண்பு என்று உணர்த்தப்பட்டிருக்கிறது. சமயங்களுக்குள் ஒருமைப்பாடு, ஒருங்கிணைவு போன்றவற்றினை ஏற்படுத்த பல்சமய உரையாடல் மூலம் இறை இரக்கம் பற்றிய கருத்துத் தெளிவு, ஆழ்ந்த இறைஞானம் உருவாகிடல் வேண்டும். ஆங்Vங்கே நிலவும் வன்முறை, கசப்புணர்வு, குறுகிய மனப்பான்மை மற்றும் பிறரை மதிக்காத நிலை. இந்த ஆண்டில் உருவாகிடும் என்று திருத்தந்தை நம்பிக்கை கொண்டுள்ளார்.
அன்பின் முழுமையே நீதியும், இரக்கமும். கடவுள் நீதியை மறுப்பவரல்ல. மாறாக, தமது இரக்கத்தின் மூலம் உண்மையான நீதியின் அடித்தளமாகிய அன்பினை அனுபவமாக்குதல் மூலம் நீதியுன் கூறுகளை எங்கும் பரப்பிட முடியும். இறை இரக்கத்தின் சாட்சியாகிய அன்னை மரியா மற்றும் இறை இரக்கத்தின் பக்தியினை உலகுக்குப் பறைசாற்றிய போலந்து நாட்டுப் புனிதை அருட்சகோதரி பாஸ்டினா போவல்ஸ்கா ஆகியோரின் பரிந்துரையினை வேண்டித் தமது சுற்று மடலை நிறைவு செய்கின்றார்.
No comments:
Post a Comment