Pages - Menu

Thursday, 3 December 2015

புனிதர்கள் வரலாறு, டிசம்பர்

புனிதர்கள் வரலாறு
அருட்சகோ. பிளவர் மேரி,  குடந்தை
டிசம்பர் 2                       புனித பிபியானா
பிறப்பு : உரோமை, 3ஆம் நூற்றாண்டு
தந்தை : ஃபிளேவியஸ் (நகரின் முன்னாள் ஆளுநர்)
தாய் : டஃப்ரோஸ், தங்கை டெமிட்ரியா, வேதகலகம் நடந்த காலம். தந்தை முகத்தில் இரும்பால் சுடப்பட்டும், தாய் தலைவெட்டியும் கொல்லப்பட்டனர்.
டெமிட்ரியா பிபியானா வறுமையிலும் நோன்புடன் மக்கள் மீட்புற செபித்தனர். டெமிட்ரியா ஆளநர் முன் விசுவாசத்தை அறிக்கையிட துன்புறுத்தப்பட்டு இறந்தார். பிபியானாவை கெட்ட பெண்களிடம் கையளித்தும் பயனில்லை. இரும்பு குண்டுகள் கட்டப்பட்ட சாட்டையால் சதை கிழிய அடித்தனர்.
இறப்பு : குருதி இழக்க உயிர் துறந்தார். 363இல் உடல் நொறுக்கப்பட்டது.


டிசம்பர் 3         புனித பிரான்சிஸ் சவேரியார்
பிறப்பு : ஸ்பெயின் நாடு, நவரா மாநிலம். 7.4.1506இல்
தந்தை : யூவான் தேயாசு
தாய் : டோனா மரியா
செல்வ சீமான் மகன். 9 வயதில் தந்தையை இழந்தார்.
செல்வ சீமான் மகன். 9 வயதில் தந்தையை இழந்தார்.
அழைப்பு : கல்வி கற்க பாரிஸ் சென்றவர் புனித இஞ்ஞாசியார், “ஒருவர் உலகமெல்லாம் ஆதாயமாக்கினாலும் தம் வாழ்வை இழப்பாரெனில் அவருக்கு கிடைக்கும் பயன் என்ன?” (மத் 16 : 26) என்று அடிக்கடி கூற மனம் மாறினார்.
1534, ஆக.15இல் வாழ்வை அர்ப்பணித்தார். ஆசிரியராக சிலகாலம் பணியாற்றிய பின் 1537, ஜீன் 24இல் குருத்துவ அருட்பொழிவு பெற்றார்.
மறைப்பணி : 1546, ஏப். 4இல் கோவா வந்து ஐந்து மாதம் போதிப்பது மற்றும் மருத்துவப்பணி செய்தார்.
சிறப்பு : சிறுமணி ஒன்றை அடித்தபடி தெருவில் நடந்து சிறுவர்களை ஈர்த்தார். பின் மறைக்கல்வி கற்பித்தார். 1542இல் தென்னிந்திய கடற்கரை, 1545 மலாக்கா, 1546இல் அம்மோயினா தீவுகளுக்கு சென்று போதித்தார்.
இறப்பு : நற்செய்தி அறிவிக்க போகும் வழியில் 1532, டிச 2இல் சான்சியன் தீவில் இறந்தார்.

டிசம்பர் 6                  புனித நிக்கோலாஸ்
பிறப்பு : துருக்கி, பவித்ரா என்ற இடம் கி.பி.280இல்.
பெற்றோர் : பக்தி மற்றும் நற்பண்புடையவர்கள்.
சிறப்பு : 15 வயதில் பெற்றோர் இறக்க துறவுமடம் சேர விரும்பினார்.
அழைப்பு : ஆயரால் அருட்பொழிவு பெற்றதும்துறவு மடத் தலைவராக்கப்பட்டு கப்பலில் செல்ல புயல்காற்று மூலம் கரை சேர்ந்தார். சரக்கு கப்பல் கோதுமையுடன் கடலில் நின்றது. மாலுமியிடம் மக்களை காப்பாற்ற கேட்டார். அரசனுக்கு பயந்து மறுக்க, உனக்கு ஒன்றும் குறைவுபடாது என்றார். அதன்படி எடுத்தும் குறையவில்லை.
இறப்பு : கி.பி. 342இல் இறந்தார்.

டிசம்பர் 7                         புனித அம்புரோஸ்
பிறப்பு : கி.பி. 339இல் பிறந்தார்.
தந்தை : பிரான்சு, அவிரோலியன் அம்புரோஸ், பேரரசின் ஆளுநர்.
கல்வி : உரோமை சென்று இலக்கியம், சட்டப்படிப்புப் பயின்றார். 372இல் ஆளுநர் பதவி பெற்றார்.
ஆயர் நிலை : ஆளுநராக இருந்தபோது நீதியுடன் ஆட்சி செய்த அவர், சட்டம் ஒழுங்கை காப்பாற்ற புதிய ஆயரை தேர்வுசெய்யும் இடத்திற்குச் சென்றார். அம்புரோஸ் ஆயர், அம்புரோஸ் ஆயர் என்ற ஒரு குழந்தையின் குரலொலி கேட்க ஆளுநர் ஆயராக்கப்பட்டார். மறைபயிற்சிப் பெற்று ஒருவாரத்தில் திருமுழுக்குப் பெற்று குருவாக, ஆயராக 374இல் திருநிலைப்படுத்தப்பட்டார்.
சிறப்பு : கடமையுணர்வு மற்றும் உண்மையுடன் ஆயர், மறைவல்லுநராக ஆரியுசின் தப்பறைக் கொள்கைகளுக்கு எதிராக நேரிய போதனை, நூல்கள் மூலம் திருச்சபையை அதன் உரிமைகளை பாதுகாத்தார்.
இறப்பு : கி.பி.397இல் ஏப்ரல் 4இல் இறந்தார்.

டிசம்பர் 8                 தூய அமல அன்னை பெருவிழா

ஆரம்பம் : கீழைத் திருச்சபை 7ஆம் நூற்றாண்டு. மேலைத் திருச்சபை 9ஆம் நூற்றாண்டு
சிறப்பு : மூவொரு இறைவனாக எக்காலமும் வாழும் இயேசுவுக்கு மட்டுமே தன் தாயை பிறக்குமுன்பே தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தொ நூ 3 : 15 உனக்கும் ...காயப்படுத்துவாய் (தொ நூ 3 : 15)
மிகவும் பேறுபெற்ற அன்னை கன்னி மரியா கருவான முதல் நொடியிலிருந்தே இறைவனின் தனிப்பட்ட சிறப்பு அருளால் சென்ம பாவத்தின் எல்லா பாவக் கறையினின்றும் பாதுகாக்கப்பட்டார்.
1854, டிசம்பர் 8இல் திருத்தந்தை 9ஆம் பத்திநாதர் கன்னிமரி அமல உற்பவி என்பது விசுவாச சத்தியமென வரையறுத்துக் கூறினார்.

டிசம்பர் 12                          புனித ஜேன் பிரான்செஸ் தே சாந்தால்

பிறப்பு : பிரான்ஸ் நாட்டில் டிஜோன்ஸ் 1572 ஜனவரி 28இல்
தந்தை : பெனிக்னேஃபிரேமியாட் (பாராளுமன்றத் தலைவர்)
தாய் : மார்கிரேட் பெர்பிசே
18 மாதத்தில் தாயை இழந்தார். திருமணத்திற்குப் பின் கணவனை இழந்தார்.
அழைப்பு : பிரான்சிஸ் சலேசியாரின் மறையுரையால் கவரப்பட்டு தன் தந்தை, மூன்று பிள்ளைகளை சகோதரரின் பொறுப்பில் விட்டு விட்டு, 1610, ஜீனில் பிரான்சிஸ் சலேசியரிடமிருந்து விதிமுறைகளை பெற்று விசிட்டேசன் சபையை உருவாக்கினார்.
சிறப்பு : கனிவு, தாழ்ச்சி, எளிமை, இடைவிடா செபம், போதனைகளை வாழ்வாக்குதல், நோயாளிகளை கவனித்தல்.
இறப்பு : 1645, டிசம்பர் 3.
புனிதர் பட்டம் : 1767, ஜீலை 16இல் திருத்தந்தை 13ஆம் கிளமெண்ட்.

டிசம்பர் 14                    புனித சிலுவை யோவான்

பிறப்பு : அவிலா அருகில் ஹோந்தே வேரஸ் 1542 ஜீன் 24
தந்தை : கொன்சாலோ தே எப்பஸ்
தாய் : கேத்தரின் அல்வாரைஸ்
தந்தை 7 வயதில் இறந்தார்.
அழைப்பு : 1563 பிப்ரவரி 24இல் கர்மேல் சபையில் சேர்ந்து துறவற ஆடை அணிந்தார்.
1567இல் குருத்துவ அருட்பொழிவு பெற்றார். துன்பத்திலும் பொறுமை. குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு 9 மாதங்கள் யாரையும் பார்க்க இயலாத நிலையில் தன் அனுபவங்களை எழுத்தில் வடித்தார்.
எழுதிய நூல்கள் : கார்மேல் மலை ஏற்றம், ஆன்மாவின் இருண்ட இரவு, ஆன்மீக சங்கீதம், அன்பின் உயிர்ச்சுடர்.
சிறப்பு : சிலுவையை அனுபவித்த அவர், நூல்கள் எழுதினார். இறைவனுடன் இடைவிடா தொடர்பு, துன்பத்தை விரும்பி ஏற்பது.
இறப்பு : பாடுபட்ட சுரூபத்தை மார்போடு அணைத்து “ஆண்டவரே என் ஆவியை, உம் கையில் ஒப்படைக்கிறேன்” என்று உயிர் துறந்தார். 1926இல் இறை ஞானத்துக்கான மறைவல்லுநர்  பட்டம் அளிக்கப்பட்டது.

டிசம்பர் 21                   புனித பேதுரு கனிசியுஸ்

பிறப்பு : டச்சு நகர் நிஸ்மேன்ல் 1521, மே 8.ல் பிறந்தார்.
பெற்றோர் : ஜேக்கப் கனிஸ் (மேயர்)
எஜிடிலாவான் ஹவ்வேனிகன், சிறுவயதில் தாய் இறந்ததால் தந்தையின் அரவணைப்பு.
கல்வி : 19 வயதில் சட்டவியல் பட்டம் பெற்றார்.
அழைப்பு : இறைவனின் அழைப்பை உணர்ந்த அவர் இயேசு சபையில் 1546இல் குருத்துவ அருள்பொழிவு பெற்றார்.

டிசம்பர் 25         கிறிஸ்து பிறப்பு பெருவிழா
உலகம் நிறைவாழ்வு பெற முவொரு இறைவனின் இரண்டாம் நபர் இரத்தமும், உடலுமாக மனுவுருவான மாண்புமிகு நாள்.
கிறிஸ்துவின் பிறப்பு : அகஸ்துஸ் சீசரின் 28ஆம் ஆண்டு இயேசு பிறந்தார். உரோமை பேரரசு முதல் அடையாளமாக சூரியனை வைத்திருந்தது. டிசம்பர் 25 சூரியனுக்கு வணக்கம் செலுத்தி வெற்றி கொள்ள முடியாத சூரியனின் பிறப்பு என்று விழா கொண்டாடினார்.
சிறப்பு : திருச்சபை இத்தேதியை உள்வாங்கியது. உண்மை ஒளியாம் இயேசுவின் பிறந்த நாளாக கொண்டாடுகிறது.
நீதியின் சூரியன் இயேசு. முதன்முதலில் 1223இல் பிரான்சிஸ் அசிசி கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடக் கருதி ஒரு குகையை வைக்கோலால் நிரப்பி மாடு, கழுதையை அதில் கட்டி பெத்லகேமை நினைவுப்படுத்தினார். அங்கு மக்களுக்கு இறைவனின் எல்லையில்லா அன்பை போதித்தார். மக்கள் மனதில் புத்துணர்வு ஏற்பட்டது. இத்தாலியில் கிறிஸ்துமஸ் கேரல்ஸ் துவங்கியது. ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் மரம் வைக்கும் பழக்கம் துவங்கியது. அந்தமரம் ஏதேன் தோட்டத்தில் இருந்த வாழ்வின் மரத்தை காட்டுகிறது. மீட்பின் தொடக்கம் இயேசுவின் பிறப்பில் தொடங்கி நம் வாழ்நாள் முழுவதும் தொடர்கிறது.

டிசம்பர் 26                      புனித முடியப்பர்
முடி என்றால் கிரீடம் என்று பொருள்படும்.
சிதறிய யூதர் நகரின் மத்தியில் தொழுகைக்கூடம் அமைத்து செபித்தனர்.
மொழி - கிரேக்கம்.
பாலஸ்தீனத்தில் - அரமேயம்
எபிரேய திருநூலை வைத்து செபித்தனர். எருசலேமில் மட்டுமே இறைவனின் உறைவிடம் என்றனர். கிரேக்கம்,, அரமேயம் பேசிய யூதர்கள் இயேசுவின் அன்பில் திருமுழுக்குப் பெற்றனர். தூய ஆவி அருளும் வல்லமை ஞானம் நிறைந்த எழுவரில் ஒருவர் ஸ்தேவான். திருத்தூதருக்கு பணியில் உதவியாக இருந்தார். ஸ்தேவான், தம் மதிப்பை இழந்த ஆலயத்தை விட்டு கிறிஸ்துவிடம் வர அழைத்தார். மோசேக்குக்கும், கடவுளுக்கும் எதிராக பேசுவதாக குற்றம்சாட்டினர். துணிந்து  உரைத்தார். தி ப.7 : 51 ‡ 53
இறப்பு : கி.பி.34 / 35 இல் கல்லெறியப்பட்டு மறைசாட்சியானார்.

டிசம்பர் 27                 புனித யோவான்
பொருள் : கடவுளின் கொடை
தந்தை : செபதேயு
தந்தைக்கு உதவியாக மீன்பிடித்து வந்தார். வசதி படைத்தவர்கள். இவரின் தாய் தமது உடைமையில் இருந்து உதவி செய்தார். மாற்கு 15 : 40.
சிறப்பு : திருமுழுக்கு யோவானின் சீடர். இயேசு அழைத்தவுடன் தந்தையை கூலியாட்களுடன் விட்டுவிட்டு பின்தொடர்ந்தார். இயேசுவின் அன்புக்கும், நம்பிக்கைக்கும் உரியவர். இயேசுவின் புதுமை, இயேசுவின் துன்பத்தில் கடைசி மட்டும் பின்தொடர்ந்த அன்புக்குரியவர். தம் அன்புத்தாயை அன்பு சீடரிடம் ஒப்படைத்துவிட்டு உயிர் விடுகிறார்.
தோழமை உணர்வு : பேதுருவுக்குத் துணை.
சாவிலிருந்து மீட்பு : நெருப்புக்கு இரையான 200 பேரை செபித்து உயிர்கொடுத்தார். பேயை விரட்டி அடித்தார். கைது செய்யப்பட்டார்.
இறப்பு : கொதிக்கும் எண்ணெயில் போட்டும், வி­ம்; கொடுத்தும் சாகாமல் 100ஆம் ஆண்டில் இயற்கை முறையில் இறந்தார்.

டிசம்பர் 28                   மாசில்லா குழந்தைகள் விழா
வரலாற்று பதிவில் குறிக்கப்பட்டுள்ள கொடூர அரசர்களுள் ஒருவன் ஏரோது. பதவிக்காய் குடும்பத்தில் மனைவி, மைத்துனன், சகோதரன், தாய், மகன் ஒருவர் பின் ஒருவராய் கொன்றான். இவன் ஆட்சியில் இயேசு பிறந்தார். இச்செய்தியை ஞானியர் வழியாக தெரிந்தவுடன் அவரை தேடி ஏமாற்றம் அடைந்ததும், சீற்றம் கொண்டு இரண்டு வயதும் அதற்குட்பட்டதுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொலை செய்தான்.
சிறப்பு : மடிந்த மொட்டுக்களை கிறிஸ்துவுக்காக இரத்தம் சிந்தியவர்கள் என்று திருச்சபை பெருமையுடன் வணங்குகிறது.

டிசம்பர் 31           புனித சில்வெஸ்டர்
பிறப்பு : உரோமை
தந்தை : ருஃபினுஸ்
தாய் : ஜஸ்தா.
பெற்றோரின் ஞானத்திலும், அறிவிலும் சிறந்து விளங்கினார்.
அழைப்பு : மர்செல்லினுஸ் என்பவரின் கரங்களால் குருத்துவ அருட்பொழிவு பெற்றார்.
சிறப்பு : 313இல் மிலான் சாசனம் வெளியிடப்பட்டது. முழு சமய உரிமை அளிக்கப்பட்டது; ஆலயம் எழுப்ப, ஞாயிறு விடுமுறை சலுகை, குற்றவாளிகள் சிலுவையில் அறைந்து கொல்வது நிறுத்தப்பட்டது.
அருட்பொழிவு : 314, ஜனவரி 31இல் திருத்தந்தையாக.
பணி : உரோமை திருச்சபையை மறுசீரமைத்தார். நிசேயா பொதுச்சங்கத்தை கூட்டினார். இச்சங்கம் இயேசு மெய்யங்க கடவுளின்று மெய்யங் கடவுளாக செனித்தவர். உண்டாக்கப்பட்டவர் அல்லர. தந்தையோடு ஒரே பொருளானவர் என்று அறிக்கையிட்டது.
இறப்பு : 333இல் இறந்தார்.

No comments:

Post a Comment

Ads Inside Post