Pages - Menu

Wednesday, 16 December 2015

ஆத்தாவும், தாத்தாவும். 2

ஆத்தாவும், தாத்தாவும். 2
வாயாடி வண்ணக்கிளி

என்னடியம்மா இவ்வளவு சீக்கிரமா, மகவீட்டிலிருந்து திரும்பிட்ட?
வயசானபிறகு வாய பொத்திக்கிட்டு நம்ம இடத்திலேயே இருக்கிறதுதான் மரியாதங்க. பெத்த மனசு பித்துனு மகள பாக்க அப்படி கஷ்டப்பட்டு சென்னைக்கு ஓடுன, உன்முகமே சரியில்லையே என்ன ஆச்சு?

அத ஏன் கேக்கிறிங்க. நான் போனதும், நம்ம மகள் துள்ளிகுதுச்சு ரொம்ப சந்தோ­மா கவனிச்சிக்கிட்டா. சும்மா சொல்லக்கூடாதுங்க. பொம்பள பிள்ளைகளை பெத்துகிட்டது கடவுள் தந்த பெரிய வரம்ங்கிறது இப்பத்தான் புரியுது. ஆனா, நம்ப மக காட்டிய ஆர்வம் அரைநாளிலேயே முடிஞ்சுபோச்சு.
என்ன ஆச்சு, மகளுக்கு ஏதாவது குணமில்லாம போயிடுச்சா?

அது இல்லைங்க, மாப்பிள்ளையினுடைய அப்பாவும், அம்மாவும் திடீர்னு, பிள்ளைய பார்க்குனும்னு வந்திட்டாங்க. சம்மந்திகள பார்த்ததும் ரொம்ப சந்தோ­மா இருந்திருக்குமே?

அங்கதான் பிரச்சனை. அதென்னடியம்மா பிரச்சனை? அவங்கள பார்த்ததும் மகளுக்கு அப்படியே முகம் செத்து போச்சு. மாமனார், மாமியார பார்த்ததும் இந்த பிசாசுகள் ஏன் இன்னைக்கு வந்துச்சுனு என் காதுபடவே சொல்றா. அதில்லாம, உடனே புறப்படுங்கன்னு என்ன அனுப்பி வைச்சுட்டா.

இது மோசந்தாண்டி. அவள நாம பெத்த மாதிரி தானே மாப்பிள்ளையையும் பெத்து, வளர்த்து படிக்க வைச்சு அவளுக்கு வாழ்க்கை கொடுக்க வைச்சிருக்காங்க. பொம்பள பிள்ளைகளுக்கிட்ட இருக்கிற பெரிய கெட்ட குணம் இதாண்டியம்மா. நம்ம மக, என்ன போக சொல்றதுக்கு முன்னாலேயே எனக்கு இரண்டு நாளிலேயே சென்னை சளிச்சு போச்சு.

என்னடியம்மா, சிங்கார சென்னைனு எல்லாரும் சொல்றாங்க, நீ வேறு மாதிரி சொல்ற? கூவம், கூவம்னு சொல்றாங்களே, கருப்பு நதி, என்ன நாத்தம்? குடல பிடிங்கிகிட்டு வருது. வாந்தி எடுத்துட்டேன். கொசு, குருவி அளவுள நம்ம கொத்துது. பாரீஸ் பக்கம் என்னை அழைச்சிட்டு போனா என்ன அசிங்கம். குப்பையும், சகதியுமா இருக்கு. சுத்தங்கிறத பற்றியே நம்ம மக்கள் கவலைப்படுகிறதே இல்லை. இப்படியிருந்தா எப்படி வெளிநாட்டுக்காரங்க நம்ம இடத்துக்கு வருவாங்க? ஒரு வெளிநாட்டு வெள்ளைகாரங்கள பார்த்தேன். துணியால மூக்கபிடிச்சிட்டு போறாங்க. பாரிஸ்ல இருக்கிற அந்தோணியார் கோவிலுக்கு போனேன். செப்டம்பர் எட்டாம் தேதி, அப்பா! அவ்வளவு கூட்டம். பிச்சையயடுப்பவர் கூட்டமும் ஏராளம். மக்களிடம் தெய்வீகபக்தி நிறைய  இருக்கு. நாம எந்த நிலையில் வாழ்ந்தாலும், கடவுள் உதவி கொடுக்குனும்னுதான் மக்கள் நினைக்கிறாங்க. நம் வாழ்வை பற்றியும், முயற்சியை பற்றியும் கவலைபடுருதில்லை. 

நமது கத்தோலிக்கர், சகாயம், இறைவாக்கினரை போலவே செயல்பட்டிருக்காரு. அதெல்லாம் படிச்சியா?

டிவி சீரியல்தான் நான் பார்கிறதுன்னு உங்களுக்குத் தெரியாதா? மதுரையில நரபலி கொடுத்திருகிறாங்க ஒருவர் புகார் கொடுத்திருக்காரு. கிரணைட் கல் சம்மந்தமா நடந்த ஊழலைப் பற்றி சகாயம் தீவிரமா விசாரிச்சுகிட்டு இருக்காரு. அதுல, நரபலி செய்திருக்காங்க என்ற புகார் வந்திருக்கு. அத விசாரிக்க போகும்போது, போலீஸ் பெரிய அதிகாரி எஸ்.பியே ஒத்துழைப்பு கொடுக்கலையாம். அதனால சுடுகாட்டிலேயே கட்டில் போட்டு போர்வை தலையணையயல்லாம் இல்லாம அங்கே படுத்திருக்காரு. இடத்தை தோண்டி பார்த்ததில நாலு எலம்புக்கூடு இருந்திருக்கு.

அடேங்கப்பா, என்ன துணிச்சல் அந்த ஆளக்கு? மனிதன்னு பிறந்தா இதே போலதான் உண்டையுடன் வாழனும். நீங்களும், நானும் ஏதோ இரண்டு பிள்ளைகளை பெத்திட்டு, வாழ்க்கையை முடிச்சிட்டோம். 

உலக செய்திகள்ல முக்கியமா வரது சிரியா நாட்டுல, மக்கள் அகதிகளா வேறு நாடுகளுக்கு ஓடுறதுதான். ஐரோப்பிய நாடுகள்ல இவங்ள ஏத்துக்காம, கப்பல் கவிழ்ந்து நிறைய பேர் இறந்திட்டாங்க. ஒரு இரண்டு வயது குழந்தை இறந்து கடல் கறையில் ஒதுங்கினதுதான் பெரிய மாற்றத்தை கொண்டு வந்திடுச்சு.
நம் திருத்தந்தை, இம்மக்களை ஏற்று கொண்டு உதவுங்கள் என்று வேண்டுகோள் கொடுக்க, பல நாடுகளும் உதவ முன் வந்திருச்சு. நம் திருத்தந்தை பிரான்சிஸ் புரட்சிகாரருனு உலகமே பாராட்டுது. நம்ம தமிழ்நாட்டுல, அடுத்த வருடம் தேர்தல் வர போகுதில்ல. ஆமா.. ஓட்டுக்கு நோட்டு என்ற தத்துவம்தான் தமிழ்நாட்டில ஜெயிச்சுகிட்டு இருக்கு.
எல்லா கட்சிகாரங்களும், மக்களை எப்படி ஏமாத்தி ஓட்டுவாங்கலாம் என்று ஊர் ஊரா சுத்தி வாராங்க. ஏமாற்றும் காலம் ஓடுது. ஏமாறும் காலம் பின்னால் கூரும்.

இன்னொருவி­யம் தெரியுமா? தன் கண்ணாடியை மாத்தரத்துக்கு கண்ணாடி கடைக்கு திருத்தந்தை சென்றிருக்கிறார். எவ்வளவு எளிமை. ஏன் பிரதமர் மோடி நம் அம்மாவை சந்திக்க அவரு வீட்டுக்கே போகலையா?

ஆதாயமில்லாமலா செட்டி ஆத்துல போவான்?

அதைபற்றி காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன் ஏடாகூடமா பேச, விளக்கமாறு, செருப்பெல்லாம் இளங்கோவன் படத்துமேல பூஜை போட்டுகிட்டு இருக்கு.

ஊழல் செய்த அதிகாரிகள், அரசியல்வாதிகள் மேலே இப்படிப்பட்ட பூஜை நடத்தினால் ஊழல் பிசாசு ஓடிடும். அதை நம்ம மக்கள் செய்ய மாட்டாங்க.

திருச்சபை செய்தியை கொஞ்சம் சொல்லுங்க.
செப்டம்பர் மாதம்னா வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா திருநாள்தான் பிரபல்லியம்.

இந்த வரு­மும் ஏராளமான மக்கள் வேளாங்கண்ணிக்கு குவிந்திருக்கிறார்கள். அரசும், வேளை நகர் தந்தையர்களும் சிறப்பாக ஏற்பாடுகளையும் வசதிகளையும் செய்திருக்கிறார்கள். மாதா மழையை கொடுத்து வாழ வைக்கனும். கர்நாடகாவிலும் மழையில்லையாம். கர்நாடக்காவில் அப்படியயாரு மின்வெட்டாம். தமிழ்நாட்டிலிருந்து மின்சாரம் கேட்கிறார்களாம்.

நல்லாயிருக்கு. தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தராமல், மின்சாரத்தை தமிழ்நாட்டிலிருந்து கேடகும் கர்நாடகா தந்திரசாலிதான். நமது அலசல் போதும். நம்ம கச்சேரிய வாசகர்கள் கேட்கிறது குறைவு போல இருக்கு. யாரும் இதுபற்றி விமர்சனம் எழுத காணோமே. பரவாயில்லை. கச்சேரியை தொடர்வோம்.

No comments:

Post a Comment

Ads Inside Post