Pages - Menu

Thursday, 3 December 2015

கிறிஸ்து பிறப்பு விழாவைப் பற்றிய சில சில்லறை தகவல்கள்

கிறிஸ்து பிறப்பு விழாவைப் பற்றிய சில சில்லறை தகவல்கள்
- அமெரிக்காவில் மட்டும் ஓர் ஆண்டில் 300 கோடி கிறிஸ்மஸ் வாழ்த்து மடல்கள் அனுப்பப்படுகின்றன.

- கி.பி.350இல் திருத்தந்தை முதலாம் ஜீலியஸ், டிசம்பர் 25 ஐ கிறிஸ்து பிறப்பு விழா நாளாக அறிவித்தார்.
கின்னஸ் புத்தகம் : உயர்ந்த கிறிஸ்மஸ் மரம், வா´ங்டன் நகரில் 1950இல் நடப்பட்டது. உயரம் 221 அடி.

-கிறிஸ்மஸ் மரம் கீழ்க்காணும் கலர்களில் வர்ணமிடப்படுகிறது.
பச்சை, சிகப்பு, தங்கநிறம்
பச்சை 

வாழ்வினையும், சிகப்பு ‡ இயேசுவின் இரத்தத்தையும், தங்கம் ‡ செல்வம், விசுவாசத்தையும் குறிக்கும்.

- கிறிஸ்மஸ் விழாவன்று உலக தற்கொலைகள் நிகழ்வது மிக குறைவு.

-பொலிவியா நாட்டில் கிறிஸ்மஸ் நாளுக்கு முந்திய நாள் மாலை, சேவல்

திருப்பலி நடைபெறும். சிலர் சேவல் கோழியை இரவு திருப்பலிக்கு கொண்டு வருவர். சேவல் தான் இயேசுவின் பிறப்பை முதலில் அறிவித்தது என்பது அவர்களின் நம்பிக்கை.

-கிறிஸ்மஸ் தாத்தாவிற்கு ஆங்கிலத்தில் சாந்தாககிளாஸ் என்று பெயர். புனித நிக்கோலாசை தான் சந்தாகிளாஸ் என்கிறார்கள். இவர் ஸ்மிர்னா என்ற நகரத்தின் ஆயர் எனவும், பாரி என்ற ஊரில் இருந்தவர் என்பது வழக்கு.

‡ 1649 - 1660 வரை இங்கிலாந்து அரசர் கிராம்வெல், கிறிஸ்மஸ் ஆடம்பரமாக கொண்டாட கூடாது என்று தடை செய்தார்.


‡ கிறிஸ்மஸ் மரத்தை அலங்கரிக்கும் வழக்கத்தை மார்ட்டின் லூத்தர் (1483 ‡ 1543) ஆரம்பித்து வைத்தார் என்பது வழக்கு.

‡ ஆங்கிலத்தில் கிறிஸ்து பிறப்பு விழாவை “யீ-னிழிவி” என்று எழுதுவது 1500 லிருந்து துவங்கியிருக்கிறது. யீ என்பது கிரேக்க மொழியில் கிறிஸ்து என்ற பெயரின் முதல் எழுத்தாகும். னிழிவிவி என்பது திருப்பலியைக் குறிக்கும்.

‡ 1962இல் அமெரிக்காவில் முதன்முதலாக கிறிஸ்மஸ் தபால்தலை வெளியிடப்பட்டது.

‡ பழங்காலத்தில் ஜெர்மனி நாட்டில், டிசம்பர் 24 மாலை புனிதமான நாள் என்றும், இந்நேரத்தில் மிருகங்கள் பேசுவதை நாம் கேட்க முடியும் என்றும் கருதினார்கள்.

‡ 1843இல் தான் கிறிஸ்மஸ் வாழ்த்து கடிதங்கள் வடிவமைக்கப்பட்டன. வடிவமைத்தவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் கால்கட் கோர்ஸ்லி 

‡ அமெரிக்காவில் பொருள்களின் ஆண்டு மொத்த விற்பனையில் 1/6 பங்கு கிறிஸ்மஸ் விழா நாள்களில் நடைபெறுகின்றது.

No comments:

Post a Comment

Ads Inside Post