ஊடகங்கள் உறவு கயிர்கள்
- அருட்சகோ. விமலி
புத்த மதம் இந்தியாவைத் தாண்டி சீனா, ஜப்பான், தாய்லாந்து, பர்மா, இலங்கை ஆகிய நாடுகளில் ஆழமாக பரவி நிற்கிறது. கிறித்துவ மதமும், இஸ்ரயேல் நாட்டைத் தாண்டி, அகில உலகெங்கும் பரவியிருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் மனிதர்களே நேரடி ஊடகங்களாக செயல்பட்டிருக்கிறார்கள். பல்லாயிரம் மைல் தூரத்தை, பாய்மத கப்பலிலும், கால்நடையிலும் பயணித்து கடந்திருக்கிறார்கள்.
தற்போது, பல்லாயிரக்கணக்கான மைல் தூரத்தில் இருப்பவை அடுத்த வீட்டில் இருப்பதை போல நாம் சந்திக்க முடிகிறது. தொலைகாட்சி, அலைபேசி போன்றவை உலகினை மிகவும் நெருக்கமாகச் செய்கின்றன. இந்நிலையில் எழுத்து ஊடகங்களும், மனித உறவுகளை அதிகமாக தெளிவுபடுத்தி நெருக்கமாகின்றன. இங்கு தமிழ்நாட்டில் அன்றும், இன்றும் எவ்வாறு எழுத்து, அச்சு ஊடகங்கள் எவ்வாறு கோலுச்சுகின்றன என்று சுருக்கமாக காணலாம்.
உலகில் அதிகமாக மக்கள் படிக்கும் தினசரிகள் மொத்தம் 24ஐ குறிப்பிடுகிறார்கள். இதில் முதலிடம் பெறுவது ஜப்பானை சேர்ந்த யோமியூரி ´ம்புன் என்பதாகும். ஒருநாளைக்கு 99 லட்சம் பிரதிகள் விற்பனையாகின்றன. இந்தியாவில் டைம்ஸ் ஆப் இந்தியா ஒருநாளைக்கு 33 லட்சம் பிரதிகள் விற்பனையாகின்றன. தமிழ் பத்திரிக்கையில் 1942இல் ஆரம்பிக்கப்பட்ட தினத்தந்தி, தினமும் 16 லட்சம் பிரதிகள் விற்பனையாகின்றன. அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட தினகரன் ஒருநாளைக்கு 12 இலட்சம் பிரதிகள் விற்பனையாகின்றன.
தமிழர்கள் அதிகமாக செய்திதாள்களை வாசிப்பதில்லை. ஆச்சரியப்படும்
விதத்தில் நகரத்தில் வாழ்பவர்களைவிட, கிராமங்களில் வாழ்வபர்கள் அதிகமாக செய்திதாள்களை வாசிக்கிறார்கள் என்று ஒருகணக்கெடுப்பு கூறுகிறது. உலக செய்திகள், நாட்டு செய்திகள், மாநில செய்திகள், மாவட்ட செய்திகள் என்று நிகழ்வுகளின் விளக்கங்களை யயல்லாம் செய்தித்தாள் மக்களுக்குத் தருகின்றன. இவை தவறான தரவுகளையும் தருவதும் உண்டு. படிப்பவர்கள், நுணுகி ஆய்து உண்மைகளை கண்டறிய வேண்டும்.
தமிழ்நாட்டில் ஓலைச்சுவடிகள் : அக்காலத்தின் ஊடக ஏடுகளாக செயல்பட்டுள்ளன.
உ.வே. சாமிநாதய்யர் பழைய ஓலை சுவடிகளை திரட்டி அவைகளை அச்சிட செய்து தமிழ் இலக்கியங்களை காப்பாற்றியிருக்கிறார்.
கி.மு.10,000 - 5000 - ஆண்டுகளிலேயே பரிபாடல், மூதுரை, முதுகுருகு போன்ற நூல்கள் இருந்திருக்கின்றன என்று ஆய்வாளர் கூறுகின்றனர். கீழ்க்காணும் தகவல்கள், அருள். செல்லத்துரை எழுதிய, விவிலியமும் தமிழ் இலக்கியமும் என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டவை.
தொல்காப்பியம் : கி.மு.6ஆம் நூற்றாண்டு.
எட்டுத்தொகை : (நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், காலத்தொகை, அகநான்று, புறநானுரறு) - கி.பி.இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவை.
பத்துப்பாட்டு : (திருமுருகாற்றுப்படை, பொருநர் ஆற்றுபடை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரை காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிபாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்) கி.பி.இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவை.
பதினென்கீழ் கணக்கு நூல்கள் : (திருக்குறள் முதலியன) முதலாம் நூற்றாண்டு.
ஐம்பெரும்காப்பியங்கள் : (சிலப்பதிகாரம் முதலியன) கி.பி ‡ 5 முதல் 10ஆம் நூற்றாண்டு வரை.
ஐஞ்சிறு காப்பியங்கள் : கி.பி.10‡ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.15‡ஆம் நூற்றாண்டு வரை.
சைவ இலக்கியங்கள் : பன்னிரு திருமறைகள், நாலாயிர திவ்விய பிரபந்தம்) கி.பி. 6ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டு வரை.
ஆக, தமிழ்நாட்டில், ஊடகங்களின் உறவு கயிர்கள் பழங்காலம் தொட்டு வளர்ந்து வந்திருக்கின்றன. ஆனால் தற்போது, திரைப்படங்களின் ஊடகத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். திரைபட நடிகர்கள், நாட்டை ஆளும் தலைவர்களாக மக்கள் கணிக்கின்றனர். திரைப்படம் கற்பனையின் சுருள், தற்போது நிஜத்தை விளக்கி கூறுவது அச்சு ஊடகங்கள். உலகினுடனான தொடர்பினால் வாழ்வு செழுமையடைகிறது. நிறைவு காண்கிறது. ஊடகங்களை கவனமுடன் காண்போம், பயன்படுத்துவோம்
No comments:
Post a Comment