ஒலிம்பிக் விளையாட்டு பற்றி தெரியாத சில தகவல்கள்
வயது :
ரியோ 2016 ஒலிம்பிக் போட்டியில் இளம் வீரராக நேபாளத்தைச் சேர்ந்த 13 வயதுடைய கெளரிகா சிங்கும், மூத்த வீரராக நியுசிலாந்தை சேர்ந்த 62 வயதான ஜுலி ப்ரோஹமும் பங்கேற்றனர்.
ஒலிம்பிக் விதிகளின்படி வயது வரம்பில்லை. ஆனால் அந்தந்த நாட்டு ஒலிம்பிக் சம்மேளனங்கள் வயது வரம்பை முடிவு செய்யலாம். அதற்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல் அளிக்க வேண்டும். ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டில் ஆக்ரோபாடிக் விளையாட்டிற்கு குறைந்தபட்ச வயது 15.
தங்கபதக்கம் :
ஒவ்வொரு பதக்கமும் 24 காரட்டில் குறைந்தபட்சம் 6 கிராம் தங்கத்தைக் கொண்டிருக்கும். இந்த ஆண்டில் பதக்கம் 1.34 சதவிகிதம் தங்கம் 92.5 சதவிகிதம் வெள்ளியால் ஆனது. பிரேசிலிய நிறுவனத்தால் செய்யப்பட்ட இவை 500 கிராம் கொண்டவை. திட தங்கத்தால் ஆன பதக்கங்கள் 1912ஆம் ஆண்டு வரை ஸ்டாக்ஹோம் ஒலிம்பிக் போட்டிகள் வரை பயன்படுத்தப்பட்டன.
வாலிபால் உடை :
2012ஆம் ஆண்டு வரை ஒலிம்பிக்கில் வாலிபால் வீராங்கனைகள் நீச்சல் உடையை அணிய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. ஆஸ்திரேலியா இந்த உடை எவ்விதத்திலும் விளையாட்டிற்கு அவசியமில்லை என்று குறை கூறியது. இப்போது 2012ன் விதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இப்போது பெண்கள் கால்சட்டை (ஷாட்) முழுக்கை சட்டைகள் முழு உடல் ஆடைகள் அணியலாம். (ஆதாரம் பிபிசி - தமிழ்)
No comments:
Post a Comment