Pages - Menu

Sunday, 4 September 2016

பேசாதே, பேசாதே!, E.B..ஆபிசர் - வாழைப்பழக்காரர்

பேசாதே, பேசாதே!

1. ஏழைக்கு முன்னால் நின்று கொண்டு உனது செல்வம் பற்றி பேசாதே!

2. நோயாளிக்கு முன் நின்று கொண்டு உன் ஆரோக்கியத்தைப் பற்றி பேசாதே!

3. பலவீனனுக்கு முன்னால் நின்று உனது பலம் பற்றி பேசாதே!

4. மகிழ்ச்சியை இழந்தவனுக்கு முன்னிருந்து கொண்டு சந்தோ­ம் பற்றி பேசாதே!

5. சிறைகைதிக்கு முன் நின்றுகொண்டு உன் சுதந்திரம் பற்றி பேசாதே!

6. குழந்தைப் பாக்கியமற்றவனுக்கு முன் நின்று கொண்டு உன் குழந்தைகளைப் பற்றி பேசாதே!

7. அநாதைக்கு முன் நின்று கொண்டு உனது தந்தையைப் பற்றி பேசாதே!

அவர்களது காயங்களை இதற்கு மேல் அவர்களால் சுமக்க முடியாது போய்விடும்.

ஒரு எலட்ரிசிட்டி போர்டு ஆபீஸ். வெளியில ஒரு வாழைப்பழக்காரர் வாழைப்பழம் விற்றுக் கொண்டு இருக்கிறார். அவரிடம்,
E.B. ஆபிசர் : வாழைப்பழம் என்ன விலை?

வியாபாரி : சார், இத எதுக்கு நீங்க வாங்கறீங்கன்னு தெரிஞ்சாதான் விலை சொல்லிட முடியும்.

E.B..ஆபிசர் : என்னப்பா சொல்ற, நான் எதுக்கு வாங்கினா உனக்கு என்ன?

வியாபாரி : இல்ல சார், நீங்க இந்த வாழப்பழத்த கோயிலுக்கு வாங்குனா ஒரு பழத்தோட விலை 10 ரூபாய். குழந்தைக்கு வாங்குனா ஒரு பழம் 20 ரூபாய். தெரிஞ்சவங்களுக்கு வீட்டுக்கு வாங்குனா 25 ரூபாய். நீங்க சாப்பிட வாங்குனா 30 ரூபாய் சார்.

E.B. ஆபிசர் : யோவ்! யாரை ஏமாத்துற? ஒரே பழம் எப்படிய்யா வேற, வேற விலைக்கு வரும்.

வியாபாரி : இதுதான் சார் என்னோட டாரிப் திட்டம். ஏய்யா, நீங்க மட்டும் ஒரே கரண்ட, ஒரே ட்ரன்ஸ்மி­ன் திட்டம் வச்சிக்கிட்டு வீட்டுக்குத் தனி, கடைக்கு தனி, பேக்டரிக்கு தனி விலைன்னு விப்பீங்க. கேட்டா ட்ரன்ஸ்மி­ன்னு சொல்லுவீங்க. எங்களை நீங்க ஏமாத்துறீங்க. நாங்க சொன்னா மட்டும் கோவிச்சுக்கிறீங்க.

No comments:

Post a Comment

Ads Inside Post