Pages - Menu

Saturday, 3 September 2016

பொதுக்காலம் 25ஆம் ஞாயிறு 18 - 09 - 2016

பொதுக்காலம் 25ஆம் ஞாயிறு     18 - 09 - 2016

ஆமோ 8 : 4 - 7;  1 திமொ 2: 1 - 8;       லூக் 16 : 1 - 13
“செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்போம் எனினே தப்புந  பலவே” - புறநானூறு

பொருள்களின் பயன் பகிர்தல். பொருள்களை அனுபவிப்போம் என்பது பெரிய தப்பாகும் என்கிறது மேற்குறிப்பிட்ட பாடல்.

திரிகடுகம் இதனையே

“ஈவதற்கு செய்க பொருளை
இருள் உலகம் சேராது ஆறு” என்று விளக்குகிறது.

பொருள் சேர்ப்பதின் நோக்கம் மற்றவர்களுடன் அதனை பகிர்ந்து கொள்வதுதான் என்று கூறுகிறது.
உர்சுலா என்பவர், ஒன்றும் உன்னுடையது அல்ல. அனைத்தும் பயன்படுத்தப்பட வேண்டியவை. பகிர்ந்து கொள்ளப்படாதவை, பயன்படுத்தப்படாதவை என்கிறார்.
இன்றைய நற்செய்தியில், வீட்டு பொறுப்பாளர் ஒருவர், தன் வேலையை பாதுகாத்து கொள்வதற்காக விவேகத்துடன் நடந்துக் கொண்டதை தலைவர் பாராட்டுகிறார். வீட்டுப் பொறுப்பாளர், தலைவரின் முதல் வாசகத்தில், ஆமோஸ், செல்வந்தரின் உல்லாச வாழ்வை மிகவும் கண்டித்துப் பேசுகிறார். தந்தத்திலான கட்டில், பஞ்சனை, இசைப்பின்னணியில் சுவையான விருந்து. இவ்வாறு ஆடம்பரத்துடன் வாழ்பவர்க்கு இறைவனின் ஆசீர் கிடைக்காது (ஐயோ கேடு) என்கிறார்.
இரண்டாம் வாசகத்தில், பவுல் அடிகளார், ‘கடவுளின் மனிதனாகிய நீ, பொருள் ஆசையிலிருந்து தப்பி ஓடு’ என்று திமொத்தேயுவுக்கு அறிவுரைக் கூறுகிறார். பொருள் ஆசை, ஆடம்பர வாழ்வு அனைவரையும் காந்தமாக பற்றி இழுக்கிறது. ஆனால் பொருள் நடுவில் இருள் மறைந்திருப்பதை மனிதர் உணர்வதில்லை. பொருளை சேர்த்தவர் பேராசைக்கும், வெற்று பெருமைக்கும் ஆளாகி மனிதத்தின் நிறைவை பெறாமல் போவதைப் பார்க்கிறோம். ஓர் ஆசிரியர் நல்ல வசதியானவர். எப்படியோ குடும்பம் நொடித்துவிட்டது. தன்னிடம் கல்வி கற்ற மாணவரிடம் சென்று  அடிக்கடி உதவி கேட்பார். ‘போய்யா, தொந்தரவு செய்யாதே’ என்று பழைய மாணவர் விரட்டுவார். ஆனால் ஒரு குடும்பத்தில், ஒருவர் இராணுவத்தில் வேலை செய்கிறார், மற்றவர் ஆசிரியர், எல்லோருக்கும் பெரியவர், விவசாயி. தம்பிகள் வாங்கும் சம்ளத்தை அண்ணணிடம் கொடுத்து, அவர் வரவு ‡ செலவு செய்வார். ஒன்றித்த ஒப்புரவான குடும்பமாக அது வளர்ந்தது. ஒளவையார் பகிராத செல்வத்தினால் வரும் தீமைகளை அழகாக சொல்கிறார்.
நம்பன் அடியவர்க்கு நல்காத்  திரவியங்கள்
பம்புக்காம், பேய்க்காம், பரத்தையர்க்காம் ‡ வம்புக்காம்
கொள்ளைக்காம், கள்ளுக்காம், கோவுக்காம், சாவுக்காம்
கள்ளர்க்காம், தீக்காய் காண்
(பம்புக்காய் - ஆரவாரத்திற்கு)

முன்வந்து பகிர்வோம், இறைவன் பின் நின்று வாழ்த்துவார்.



No comments:

Post a Comment

Ads Inside Post