Pages - Menu

Saturday, 3 September 2016

குடும்பம் சமுதாயத்தின் உயிர்நிலை
புலவர் இ. அந்தோணி, ஆசிரியர் (ஓய்வு),
சிறிய மலர் மே.நி. பள்ளி, கும்பகோணம்.               

குடும்ப  உறவு  வளர பத்து வழிகள்
எங்கோ பிறந்த ஒரு இளைஞனும், எங்கோ பிறந்த ஒரு பெண்ணும் ஒன்றாக இணைவதே குடும்பம் என்ற மண்ணகத்தின் விண்ணகம். ஆனால் ஆணும் ‡ பெண்ணுமாக ஒன்றித்து நிற்றல் இன்றைய காலக்கட்டத்தில், இக்கட்டான அனுபவமாக திகழ்கிறது. பாரதிதாசன், ஒருவர் தன் மனைவியின் செயல்பாடுகளைப் போற்றி மகிழ்வதாக எழுதுகிறார்.
           “தையல் என்றன் வீட்டில் - நீ      
             சமையல் செய்யும் போதுக்
              கையழகு பார்த்து - நான்
              களித்திடுவேன் பெண்ணே
              விட்டுப் பிரியாதே - எந்த
              வேலையிலும் மாதே
              ஆறுதலைச் செய்வாய் ‡ என்
             அண்டையிலிருந்தே”

அத்தகைய ஒன்றிப்பை வளர்க்க தமாரா பாசி என்பவர் பத்து இரகசியங்களைக் கூறுகிறார். அவைகள் நம் குடும்பங்களுக்கு பயனளிக்கும். அந்த இரகசியங்களின் கருத்துக்கள் கீழ்க்காண்பவை :
1. ஒருவர் மற்றவருக்காக செபிக்க வேண்டும். செபத்தால் மனம் ஒன்றிக்கும்.

2. பிள்ளைகள், நண்பர்கள் மற்ற உறவினர்களுடன் பேசும்போது, உங்களின் மனைவியைப் பற்றியோ, கணவனை பற்றியோ உயர்வாகவே பேசுங்கள்.

3. மற்றவர்களுடன் உங்கள் மனைவியையோ, கணவனையோ ஒப்பிட்டு குறைவாக பேசாதீர்கள்.

4. உங்கள் உடல்நலத்தை கவனமாக காப்பாற்றுங்கள். பலம் தரும்  உணவு, நல்ல  உடற்பயிற்சி, தேவையான உறக்கம் ஆகியவைகளால் உடல்நலத்தை பேணுங்கள். நல்ல உடல்நலம், மேன்மையான உணர்வுகளை பெற்றுதரும்.

5. உங்களின் உணர்வு சிக்கல்களுக்கு நீங்கள்தான் காரணம் என்று உணருங்கள். மற்றவர்கள் மீது குறைகளை சுமத்தாதீர்கள். நீங்கள் மனந்தளர்ந்து போயிருந்தாலோ, சோகமாக இருந்தாலோ, அவைகளை உணர்ந்து கொண்டு அதிலிருந்து விடுபட நீங்களே முயலுங்கள்.

6. சிறு காரியங்களிலிருந்துதான் கணவன் ‡ மனைவி இவர்களுக்குள் பெருத்த கருத்து வேறுபாடு தோன்றுகிறது. எனவே, வீடு சுத்தம் செய்தல், பில்களை சரியான நேரத்தில் கட்டுதல்,  உடைகள் வெளுத்தல் ஆகியவைகளில் கவனமாக அவரவர் பங்கினை செய்ய வேண்டும்.

7. திருமண வாழ்வில் ஒன்றித்து மகிழ்ச்சியாக வாழ்பவர்களுடனும், திருமண வாழ்வை சிறப்பாக கருதுபவர்களுடனும் பழகுங்கள். தன் கணவனை குறைகூறும் மனைவி ஒருவருடன் ஒரு பெண் நட்புக் கொண்டால், தன் கணவரைப் பற்றி குறைகூறும் பழக்கம் அவருக்கும் உண்டாகும். அதே போலதான் ஆண்களும், திருமண வாழ்வை  எள்ளி  நகையாடும் நண்பர்  கூட்டத்தில் சேர்ந்தால், தன் குடும்ப வாழ்வைப் பற்றிய கசப்பு அவருக்கு உண்டாகும். உணர்வுகள், தொற்றிக் கொள்ளும் வியாதியைப் போன்றவை.

8.           உங்களின் அன்பை செயலில் காட்டுங்கள். மனைவி சமைக்கும்போது, கணவர் வீடு கூட்டுவதை பார்த்திருக்கிறேன். வீட்டுப் பணிகளை இணைந்து செய்யும்போது, கணவன் மனைவி ஒன்றிப்பு வளரும்.

9. உங்களின் அன்பை வார்த்தைகளிலும் வெளிப்படுத்துங்கள். நல்லவைகளை பாரக்கும் போது மனமாற பாராட்டுங்கள். சமையல் நன்றாக இருக்கும் போது, வீடு அழகுபடுத்தப்பட்டிருக்கும் போது, வேலைகளில் பிறரின பாராட்டை பெற்றிருக்கும்போது, மனந்திறந்து பாராட்டுங்கள்.

10. குடும்பம் ஒரு குழுவினர் செயல்பாடு என்பதை ஒன்றித்து செயல்படுங்கள். குழுவினர் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் குழுவின் குறிக்கோள், நோக்கம் நிறைவாகும்.
ஆதாரம் : இணையதளம், தமாரா பாசி

   www.whyigetup.blogspot.com

No comments:

Post a Comment

Ads Inside Post