Pages - Menu

Saturday, 3 September 2016

விவிலிய விடுகதைகள்

 விவிலிய விடுகதைகள்
திருப்பாடல்கள் 18 முதல் 34 முடிய

- அருட்சகோ. பெரேரா, ஓமலூர்

1. அஞ்சி நடப்போர்க்கும், அடைக்கலம் புகுவோர்க்கும் ஆண்டவர் செய்து வைத்த பெரிய பாக்கியம் எது?

2. நாடித் தேடி குடியிருக்க, அவர் அழகைக் காண எங்கே கண்டறிய வேண்டும்?

3. அவர் உண்மை, நேர்மை, நீதி, விரும்பி அந்த அன்பாலே அது நிறைந்துள்ளது. யாரால்? எது?

4. தலையில் பூசிய நறுமணத் தைலம் மணக்க பாத்திரக் கிண்ணம் நிரம்பி வழிய அவர்கள் என்னைப் பார்த்து முறைக்கின்றனர். யார் அவர்கள்?

5. அரிமா குட்டிகள் பட்டினி இருக்க நேரிட்டாலும் அவரை நாடுவோர்க்கு எது குறைவுப்படாது. யார்?

6. ஆண்டவருக்கு இப்படி இவ்விதம் வாழ்வோருக்கு சூப்பர்மேனாக சூழ்ந்து நின்று காப்பவர் யார்? யாருக்கு?

7. அழகிய நீலப் போர்வை. அதனுள்ளே பற்பல பூக்கள். சின்ன பந்துகளும், பெரிய பந்துகளும் உள்ளே உருளுகின்றன. மனிதர்கட்கு முன் வந்தவை யாரால்? எவை?

8. கரம், மனம், உள்ளம், நெஞ்சம் இவைகளில் தூய்மையை கடைப்பிடிப்போர் பெறும் பரிசு எது?

9. எவற்றின் கயிறுகள் என்னை இறுக்கின? எவைகள் என்னை மூழ்கடித்தன?

10. உமக்கு அந்த வேளை தன்னில் ஆண்டவர் பதிலளிப்பார் எப்போது?

11. யார் எனது ஒளி? யார் எனது மீட்பு?

12. மாலையிலோ Tears, காலையிலோJpyful எவை?

13. எந்த Donkey போன்று அறிவிலியாய் இராதே எது?

14. இனியவர் என்றுTaste பண்ணிப் பாருங்கள் யாரை?

15. அதைக் குவியல் போலும், அதை ஆழ் நிலவறைகளில் சேமித்து வைத்தார் எதை?

16. உமது பெயரை இவர்களுக்கு அறிவிப்பேன், அவற்றின் நடுவே உம்மைப் பாடுவேன் எப்படி?

17. இவற்றால் உம்மைப் புகழ முடியுமா? இவற்றால் பிறழாமையை அறிவிக்க இயலுமா?

18. புடமிட்டுப் பாரும். உமது நாலெழுத்து வார்த்தை என் கண்முன் உள்ளது எது?

19. என் மேலண்ணத்தோடு ஒட்டிக் கொண்டது எது?

20. என் எலும்புகளெல்லாம் அப்படிப் போயின. என் இதயம் இப்படி ஆயிற்று எப்படி?

21. அது நிறைவானது, புத்துயிர் அளிப்பது, ஞானத்தை அருள்வது, இதயத்தை மகிழ்விப்பது எது?

22. அசைந்து அதிர்ந்தது எது? அடித்தளங்கள் கிடுகிடுத்தது எது?

23. எந்தக் குதிரையை நம்புவது வீண்?

24 New New ஒன்றை அவருக்குப் பாடுவேன் என்ன?

25. அன்னமிட்டக் கை, ஆளாக்கி விட்டக்கை, வெறுப்போரை எட்டிப் பிடிக்கும் கை எந்தக் கை?

26. எது பாய்ந்து வந்தாலும் அவர்களை அணுகாது? எப்போது?

No comments:

Post a Comment

Ads Inside Post