வீடு தரும் வாழ்க்கைப் பாடம்
இறைவன்,
உன் வீட்டினை உற்று நோக்கு. அதில் இருக்கும் ஒவ்வொரு பகுதியும் வாழ்வின் பொருளை உணர்த்திக் காட்டும் என்றார்.
கூறை - உயர்ந்த குறிக்கோள் கொள் என்றது
மின்விசிறி - பதட்டப்படாது, மற்றவர்களை ஆற்றுபடுத்து என்றது
கடிகாரம் - நேரத்தை பொன்னென மதித்திடு என்றது
நாள்காட்டி - எல்லாவற்றையும் தெரிந்தவனாயிரு என்றது
பணப்பை - வருங்காலத்திற்கு சேமித்திடு என்றது
முகம் பார்க்கும் கண்ணாடி - எப்போதும் சுயசோதனை செய்துகொள் என்றது
விளக்கு - மற்றவர்களின் வாழ்வை ஒளிமயமாக்கு என்றது
சுவர்கள் - மற்றவர்களின் சுமைகளைத் தாங்கிடு என்றது
தரைத்தளம் - நடைமுறைக்கு ஏற்றபடி நடந்து கொள் என்றது
மாடிப்படி - உன் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வை என்றது
இழந்தவையயல்லாம் திரும்பத் தா இறைவா என கேட்டேன்
பலவும் இழந்திருக்கிறேன் கணக்கில்லை என்றேன்
பட்டியல் ஒன்றிட்டு சொல்லவா இயலும்?
கால மாற்றத்தால் இளமையை இழந்தேன்
கோலம் மாறி அழகையும் இழந்தேன்
வயதாக உடல்நலம் இழந்தேன்
எதை என்று சொல்வேன் நான்,
எதையயல்லாம் இழந்தேனோ அதையயல்லாம் மீண்டும் தா என்றேன்
அழகாக சிரித்தான் இறைவன்
கல்வி கற்றதால் அறியாமையை இழந்தாய்
உழைப்பின் பயனாய் வறுமையை இழந்தாய்
உறவுகள் கிடைத்ததால் தனிமையை இழந்தாய்
நல்ல பண்புகளால் எதிரிகளை இழந்தாய்
சொல்ல இன்னும் பலவுண்டு இதுபோல
தரட்டுமா அனைத்தையும் திரும்ப என்றான்
திகைத்தேன்! இழப்பின் மறுபக்கம் எதுவென்று உணர்ந்தேன்
வாழ்க்கையின் ஓட்டத்தில் இழப்பும் பேறுதான்
இழந்ததை அறிந்தேன், இதயம் தெளிந்தேன்
இறைவன் மறைந்தான்.
No comments:
Post a Comment