அமெரிக்கக் கடிதம்
- சவரி,
கேரி, வடகரோலினா
“கடவுளை மட்டுமே நாங்கள் நம்பியுள்ளோம்”(IN GOD WE TRUST). இந்த வாக்கியம் அமெரிக்க நாட்டு அனைத்து டாலர் பணத்திலும், காசுகளிலும் எழுதப்பட்டுள்ள வாக்கியம். உலகில் தலைசிறந்த அறிவியல் விஞ்ஞானியயன அழைக்கப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டின் கூறுகிறார். ‘நான் எவ்வளவு அதிகமாக அறிவியலை படிக்கிறேனோ அவ்வளவு அதிகமாக கடவுள் மேல் நம்பிக்கை வருகிறது’ என்கிறார். அறிவியல் கண்டுபிடிப்புகளில் மயங்காமல் கடவுள் நம்பிக்கையுடன் வாழ்கிறார்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் திருப்பலிக்கு செல்வதற்கு வசதியாக, எல்லா அலுவலகங்களுக்கும் அன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியிலிருந்து குடியேறியவர்கள் என்று அழைக்கப்படும் கிறிஸ்துவர்கள், தற்போதைய அறிவியல் கண்டுபிடிப்புகளான தொலைக்காட்சி, தொலைப்பேசி, அலைப்பேசி, கணிணி, குளிர் சாதனப் பெட்டி, கார் போன்ற இயந்திரங்களைத் தவிர்த்து அந்த காலத்தில் உள்ளது போல் எங்கும் நடந்து சென்று, வயல் வெளியில் வேலை செய்து, மாட்டிலிருந்து பால் கறந்து, அடுப்பில் சமைத்து, இறைவனை துதித்து எளிய வாழ்க்கை வாழ்கின்றனர். இயந்திரங்களும், வசதிகளும், சொகுசுகளும் வந்து விட்டால் இறைவனை மறந்து விடுவோம் என்பது அவர்கள் கருத்து.
அமெரிக்கர்கள் கோவிலில் நுழைந்தவுடன் அலைப்பேசியை அணைத்து விடுகிறார்கள். இதனால் அவர்கள் நிம்மதியாக திருப்பலி காண்பதுடன் மற்றவர்களும் நிம்மதியாக திருப்பலி காண்பதற்கு வசதியாக இருக்கிறது. இப்போதுள்ள இளைஞர்கள் பக்கத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமல், பக்கத்தில் யார் இருக்கிறார்கள், எதிர்த்தார் போல் யார் வருகிறார்கள் என்று தெரியாமல், தலை குனிந்து அலை பேசியில் ஆழ்ந்து போயிருப்பதை பார்க்கிறேன். பல பேர் திருப்பலி நடக்கும் போது கூட, நம்மை படைத்த இறைவனை நினைப்பதை மறந்து விட்டு, ழஜுழிமிவிழிஸ்ரீஸ்ரீஇல் வந்த படங்களை பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது, மனது வலிக்க தான் செய்கிறது. அறிவியலும், கண்டுபிடிப்புகளும், நம்முடைய வாழ்வை எளிமையாக்குவதற்கு உருவாக்கப்பட்டவை. அவைகளுக்கு அடிமையாகி நம்முடைய நேரத்தையும், சக்தியையும் வீணடிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான்.
கஷ்டம் வந்தால் இறைவனை நினைப்பதும், காசு வந்தால் இறைவனை மறப்பதும் மனித பழக்கம். இதை மாற்றி இன்பத்திலும், துன்பத்திலும் இறைவனைக் கண்டுகொள்வோம்.
No comments:
Post a Comment